EPFO புதிய அப்டேட்: இனி வேலை மாறினால் PF கணக்கு தானாகவே மாறும்..!

வேலை மாறும்போது பி.எஃப். (PF) தொகையை மாற்ற இனி நீங்கள் தனியாக விண்ணப்பிக்கத் தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
EPFO
EPFOAI Image
Updated on

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதியின்படி, நீங்கள் வேலை மாறும்போது உங்களின் பிஎஃப். (PF) கணக்கு மற்றும் பணம் புதிய நிறுவனத்திற்குத் தானாகவே (Automatic Transfer) மாற்றப்படும். இதற்காக நீங்கள் தனியாக எங்கும் விண்ணப்பிக்கவோ, காத்திருக்கவோ தேவையில்லை.

வேலை மாறும்போது பி.எஃப். (PF) தொகையை மாற்ற இனி நீங்கள் தனியாக விண்ணப்பிக்கத் தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இனிமேல் நீங்கள் ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு மாறும்போது பிஎஃப்(PF) தொகையை மாற்ற இனி நீங்கள் தனியாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இபிஎஃப்ஓ-வின்(EPFO) மையப்படுத்தப்பட்ட தரவுத்தளம் (Centralised Platform) செயல்பாட்டுக்கு வந்ததை அடுத்து, இந்த முக்கியமான மாற்றங்களை அறிவித்துள்ளார்.

இந்த மாற்றத்தின் மூலம் இனி நீங்கள் ஒரு வேலையை விட்டுவிட்டு புதிய வேலையில் சேரும்போது, உங்களின் பிஎஃப் கணக்கு தானாகவே புதிய நிறுவனத்திற்கு மாற்றப்படும். இதற்கு நீங்கள் தனியாக ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. முக்கிய விஷயமாக, உங்களுடைய யுனிவர்சல் கணக்கு எண் (UAN) உங்களது ஆதார் (Aadhaar Redacted) எண்ணுடன் உடன் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்த வசதி கிடைக்கும்.

முன்பு போல பழைய நிறுவனத்திடமிருந்து விலகல் தேதியைப் புதுப்பிக்க (Date of Exit) கோரிக்கை வைக்கவோ, பி.எஃப். தொகையை மாற்றிக் கொடுக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கவோ தேவையில்லை. அதாவது இதற்கு முன்பு, நீங்கள் வேலை மாறும்போது பிஎஃப் தொகையை மாற்ற, பழைய நிறுவனம் மற்றும் புதிய நிறுவனத்தின் ஒப்புதல் பெற்று, தனியாக விண்ணப்பிக்க வேண்டிய நடைமுறை இருந்தது. ஆனால் தற்போது அந்த நடைமுறை சிக்கல் நீக்கப்பட்டுள்ளதுடன், இந்த புதிய ஆதார்-UAN இணைப்பு வசதி மூலம், சிரமங்கள் அனைத்தும் தவிர்க்கப்படும்.

இதையும் படியுங்கள்:
இனி 3 நாட்களில் PF பணம் கிடைக்கும் : EPFO-வின் அதிரடி டிஜிட்டல் மாற்றம்..!
EPFO

வேலை மாறினாலும் பிஎஃப் கணக்குகளை ஒருங்கிணைத்து வைத்திருப்பது, எதிர்காலத்தில் பிஎஃப் தொகையை முழுமையாக எடுப்பதற்கும், முன்கூட்டியே கடன் பெறுவதற்கும் (Advances) மிகவும் உதவியாக இருக்கும்.

EPFO கொண்டு வந்துள்ள இந்த மாற்றத்தின் மூலம் இனிமேல் நீங்கள் எத்தனை முறை வேலை மாறினாலும் புதிய வேலையில் சேரும்போது உங்களின் UAN எண்ணை மட்டும் புதிய நிறுவனத்திடம் வழங்கினால் போதும். இபிஎஃப்ஓ கொண்டு வந்துள்ள புதிய மையப்படுத்தப்பட்ட தரவுத்தளம் (Centralised Platform) மூலம் இந்த செயல்முறை எளிதாக்கப்பட்டுள்ளது.

Central government
Central government

உறுப்பினர் ஓய்வு பெற்ற பிறகு (55 வயது அல்லது அதற்கு மேல்), நிரந்தரமாக வெளிநாடு சென்ற பிறகு அல்லது இறந்த பிறகு, மூன்று ஆண்டுகளுக்கு பங்களிப்புகள் எதுவும் செலுத்தப்படாவிட்டால், அந்த இபிஎஃப் கணக்கு செயலற்றதாக (Inoperative) மாறிவிடும்.

சுருக்கமாகச் சொன்னால், இந்த புதிய வசதி, கணக்கு மேலாண்மையையும், பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்குப் பணப் பரிமாற்ற செயல்முறையை மிகவும் எளிமையாக்கி, ஊழியர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், பி.எஃப். கணக்கு தொடர்பான நிர்வாகச் சுமைகளும் குறையும்.

மேலும் இந்த மேம்படுத்தப்பட்ட செயல்பாடு, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளை நிர்வகிப்பதை எளிதாக்குவதோடு, நிதி சார்ந்த நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையையும் அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்:
இபிஎஸ் 2026 சட்டம் அமல்: இனி பிஎஃப் கிளைம் தாமதமானால் 12% வட்டியுடன் பணம்!
EPFO

இனிவரும் காலங்களில் பிஎஃப் கணக்கு பரிமாற்றத்தில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் சிக்கல்கள் இருக்காது. இது பிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com