#BREAKING: காவிரி விவகாரம் CHEAP POLITICS செய்ய விரும்பவில்லை- முதலமைச்சர் விஜய்..!!

காவிரி நமக்கு உயிர் ஆதாரம், அதை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று முதலமைச்சர் விஜய் கூறினார்.
முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய்
Updated on

தமிழக சட்டப்பேரவை இன்று தொடங்கியதும் மறைந்த பிரபலங்கள் நடிகரும், இயக்குனருமான கே.பாக்யராஜ், பின்னனி பாடகி எஸ்.ஜானகி, கவிஞர் மற்றும் எழுத்தாளர் புவியரசு, எழுத்தாளர் பூமணி, முன்னாள் எம்.எல்.ஏ சுருளிவேல் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து போடி முன்னாள் எம்எல்ஏ சுருளிவேல் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிப்பட்டது.

சட்டப்பேரவை விவாதம் :

மேகதாது விவகாரம் குறித்த ஒத்திவைப்பு தீர்மானம் என்ன ஆனது என்று உதயநிதி கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு சபாநாயகர் தீர்மானம் ஆய்வில் உள்ளது என்று கூறினார்.

காவிரியில் தண்ணீர் வரவில்லை, குறுவை சாகுபடி மொத்தமாக இல்லாமல் போய்விட்டது.

விவசாயிகள் பிரச்சனைக்கு சரியான தீர்வு தேவை, குறுவை சாகுபடி இல்லாமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு என்ன நிவாரணம் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி சட்டசபையில் கேள்வி எழுப்பினார்.

காவிரி டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார். தவெக ஆட்சிக்கு வந்த பிறகு மேகதாது அணை கட்ட கர்நாடக அதி தீவிரம் காட்டுகிறது.

மேகதாது அணை கட்ட கடந்த வாரம் பெங்களூருவில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. மேகதாது அணை கட்ட டெல்லியில் ஆய்வுக்கூட்டம் நடத்தியுள்ளார் டிகே சிவக்குமார் என்று கூறிப்பிட்டார். விவசாயிகள் மீது அக்கறை இருந்தால் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியிருக்க வேண்டும் என்றார்.

காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதில் தயக்கம் ஏன் என் உதயநிதி கேள்வி எழுப்பினார். மேலும் அனைத்து கட்சி எம்பிக்களுடன் பிரதமர் மோடியை சென்று சந்திக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

உடனே அவரது நேரம் முடிந்து விட்டதாக சபாநாயகர் கூறியதும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை தொடர்ந்து பேச அனுமதிக்க வேண்டும் என்று உதயநிதிக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி குரல் கொடுத்தார்.

சட்டப்பேரவை விவாதம்
சட்டப்பேரவை விவாதம்

தமிழ்நாட்டு பிரச்சனைகளுக்கு புதிய டெக்னிக்கை கையாள்கிறது தவெக அரசு என்றார் உதயநிதி.

மேலும் முதலமைச்சர் கர்நாடகா செல்வதாக வேளாண்துறை அமைச்சர் பேட்டியில் சொன்னார். ஆனால் இது குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் எட்டவில்லை என்று அமைச்சர்கள் சொன்னார்கள். நாங்கள் தண்ணீர் வழங்க முடியாது, தமிழக முதலமைச்சர் இங்கு வர வேண்டாம் என்று கர்நாடக முதல்வர் சொல்கிறார். தமிழக முதலமைச்சர் கர்நாடகா செல்ல இருந்தாரா? அப்படி என்றால் ஏன் செல்லவில்லை? இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. ஆனால் தமிழக அரசு காவிரி விவகாரத்தில் இதுவரை என்ன செய்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்: தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தள்ளிவைப்பு!
முதலமைச்சர் விஜய்

அதனை தொடர்ந்து காவிரி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார்.

காவிரி நமக்கு உயிர் ஆதாரம், அதை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று முதலமைச்சர் விஜய் கூறினார்.

காவிரி விவகாரத்தை தீர்ப்பதற்கான ஒரே எண்ணத்துக்காகவே பெங்களூரு செல்ல முடிவெடுத்தேன். பெங்களூரு சென்று கர்நாடக முதல்வருடன் பேசி பார்ப்போமே என் நினைத்துதான் முடிவெடுத்தேன் என்று முதல்மைச்சர் விஜய் கூறினார்.

மேலும் காவிரி விவகாரத்தில் எந்த கட்சி ஆள்கிறது, எந்த கட்சிக்கு பெருமை என பார்க்கக்கூடாது. மேகதாது அணை கட்டும் விஷயத்தில் தமிழ்நாட்டின் உரிமையை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம். காவிரி நீர் பங்கீடு, மேகதாது அணை கட்டுவதை தடுப்பதில் தமிழ்நாடு தன் உரிமையை விட்டுக்கொடுக்காது என்று முதலமைச்சர் விஜய் கூறினார்.

ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் பதிலுக்குபின் உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி கடிதம் எழுதினோம் என்று கூறினார்.

இதையும் படியுங்கள்:
தமிழகத்துக்கு காவிரி நீர்: மேல்முறையீடு செய்ய கர்நாடகம் முடிவு!
முதலமைச்சர் விஜய்

அதனை தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி கர்நாடகாவில் போதிய நீர் இருந்தும் தண்ணீர் திறக்கப்படவில்லை, உபரி நீர் தான் தற்போது வருகிறது என்று கூறினார்.

logo
Kalki Online
kalkionline.com