குட் நியூஸ்..! ESI சம்பள வரம்பு ரூ.30,000 ஆக உயர போகிறது..!

Employees
Employees
Published on

ஊழியர்களுக்கான மாநில காப்பீட்டு (Employees’ State Insurance - ESI) திட்டத்தில் சேருவதற்கான மாதச் சம்பள வரம்பை ₹21,000-லிருந்து ₹30,000 ஆக உயர்த்துவது குறித்து பிரதமர் அலுவலகம் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது, ஒரு நிறுவனத்தில் மாதச் சம்பளம் ₹21,000 வரை பெறும் ஊழியர்கள் (மாற்றுத்திறனாளிகளுக்கு ₹25,000 வரை) இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் சேர்க்கப்படுவார்கள். இந்த சம்பள வரம்பு 2017-ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் 0.75% பங்களிப்பையும், நிறுவனங்கள் 3.25% பங்களிப்பையும் செலுத்துகின்றன.

பாராளுமன்ற தொழிலாளர் நிலைக்குழு, இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் வரும் சம்பள வரம்பை உயர்த்துமாறு மத்திய அரசை வலியுறுத்தி வந்தது. இந்த பரிந்துரையை பரிசீலிப்பதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், தற்போது பிரதமர் அலுவலகம் இந்த விவகாரத்தை நேரடியாகக் கவனித்து வருவதாகத் தெரிகிறது.

சம்பள வரம்பை உயர்த்தும் தீர்மானத்துக்குப் பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்தால், அதைச் செயல்படுத்தத் தொழிலாளர் நலத்துறை அமைச்சகமும், இஎஸ்ஐ நிறுவனமும் தயாராகி வருகின்றன.

கடந்த ஜூன் மாதம் சிம்லாவில் நடைபெற்ற இஎஸ்ஐ கூட்டத்தில், சம்பள உச்சவரம்பு திருத்தம் குறித்த அறிவிப்பு இடம்பெறாததால் தொழிலாளர் சங்கங்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தின. இதையடுத்து, இஎஸ்ஐ நிறுவனத்தின் தலைவராக உள்ள மத்தியத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

இதையும் படியுங்கள்:
மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்கு நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?
Employees

பாரதிய மஸ்தூர் சங்கம் (BMS) உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சம்பள வரம்பை ₹42,000 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரியிருந்த போதிலும், முதலாளிகளின் எதிர்ப்புகளைக் கருத்தில் கொண்டு ₹30,000 என்ற அளவில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது.

இஎஸ்ஐ மருத்துவமனைகளால் சிகிச்சை அளிக்க முடியாத நிலையில், நோயாளிகள் புகழ்பெற்ற தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரையிலும் அரசு மருத்துவமனைகளுக்கு மட்டுமே அனுப்பப்பட வேண்டும் என்ற விதிமுறைக்குத் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.

இஎஸ்ஐ மருத்துவமனைகளில் வசதிகள் மற்றும் கருவிகள் மேம்படுத்தப்படும் வரை, நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படலாம். இந்தியாவில் தற்போது 159 இஎஸ்ஐ மருத்துவமனைகள் உள்ளன. அவற்றில் 102 மருத்துவமனைகள் மாநில அரசுகளாலும், மீதமுள்ளவை நேரடியாக இஎஸ்ஐ நிறுவனத்தாலும் நடத்தப்பட்டு வருகின்றன.

உயர்வுக்கான காரணங்கள்:

  • சம்பள வரம்பு உயர்த்தப்பட்டால், தற்போது இந்த திட்டத்தின் கீழ் இல்லாத நடுத்தர வருவாய் பிரிவைச் சேர்ந்த ஊழியர்களும் இஎஸ்ஐ திட்டத்தின் பலன்களைப் பெற முடியும்.

  • கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக, பழைய சம்பள வரம்பு பயனற்றதாகிவிட்டது. எனவே, காலத்திற்கு ஏற்றவாறு வரம்பை மாற்றுவது அவசியம்.

இதையும் படியுங்கள்:
கடவுளர் (வசிக்கும்?) வசித்ததாக போற்றப்படும் புனித தலங்கள்!
Employees
  • சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் அரசின் நோக்கத்திற்கு இந்த மாற்றம் உறுதுணையாக இருக்கும். ஊழியர்களுக்கு மருத்துவ சிகிச்சை, மகப்பேறு பலன்கள், ஊனமுற்றோர் இழப்பீடு போன்ற பல முக்கிய பலன்கள் கிடைக்கும்.

இந்த முடிவுக்கு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. இருப்பினும், அரசு வட்டாரங்களின் தகவல்கள் இந்த மாற்றம் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய தொழிலாளர் சட்டங்களில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாக அமையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com