இனி நகைக்கடைக்கு செல்ல தேவையில்லை... அரசாங்கத்திடமே தங்கம் வாங்கலாம்..! எப்படி தெரியுமா ?

தங்கத்தை ஒரு முதலீடாகப் பார்ப்பவர்களுக்கு, பாதுகாப்பையும் லாபத்தையும் உறுதி செய்ய இந்த EGR முறை ஒரு சிறந்த மாற்றாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
EGR Gold
EGR GoldAI Image
Updated on

தங்கம் வாங்குவதை ஒத்திவைக்குமாறு பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து, முதலீட்டாளர்கள் கோல்டு ETF மற்றும் EGR போன்ற டிஜிட்டல் முதலீட்டு வழிகளில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்தியர்கள் தங்கம் வாங்குவதை ஒரு கலாச்சாரமாகவும், பாதுகாப்பான முதலீடாகவும் கருதுகின்றனர். சமீபத்தில் பிரதமர் மோடி, அத்தியாவசியத் தேவையில்லாத பட்சத்தில் தங்கம் வாங்குவதைத் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தங்கம் ஒரு மோசமான முதலீடு என்பதால் அல்ல, மாறாக நாட்டின் பொருளாதார நலனுக்காக எடுக்கப்பட்ட ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.

அந்த வகையில் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு மத்திய அரசு ஒரு சந்தோஷமான செய்தியை சொல்லி இருக்காங்க...

இனிமேல் நாம் அரசாங்கத்திடமே டிஜிட்டல் தங்கத்தை(Digital Gold) வாங்கி கொள்ளலாம். அல்லது பிசிகல் தங்கம் (Physical Gold) வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் அதை கன்வெட்டு செய்து கொள்ளும் ஒரு வசதியையும் மத்திய அரசு செய்துள்ளது.

பிசிகல் தங்கம் (Physical Gold) என்பது நகை, நாணயங்கள், அல்லது கட்டிகள் (Bullion Bars) வடிவில் நேரடியாகக் கையில் வைத்திருக்கக்கூடிய தங்கமாகும்.

இதையும் படியுங்கள்:
கோல்ட் ஓவர் டிராஃப்ட்: பயன்படுத்தும் பணத்திற்கு மட்டும் வட்டி! தங்கக் கடனை விட இது எப்படி சிறந்தது?
EGR Gold

அதாவது, தற்போது தங்க முதலீட்டை இன்னும் ஊக்குவிக்கும் வகையில் பங்குச்சந்தையில் எப்படி நாம் பங்குகளை வாங்குகிறோமோ அதேபோல தங்கத்தையும் வாங்கி வர்த்தகம் செய்வதற்கான ஒரு வாய்ப்பினை தேசிய பங்குச்சந்தை அறிமுகம் செய்திருக்கிறது.

இது பங்குகளைப் போல பங்குச் சந்தையில் (NSE/BSE) வர்த்தகம் செய்யப்படுகிறது. 1000 ரூபாய் போன்ற மிகச் சிறிய தொகையில் தொடங்கி, தங்கம் வாங்குவது, விற்பது மற்றும் தேவைப்படும்போது இயற்பியல் தங்கமாக (Physical Gold) மாற்றிக்கொள்ளும் வசதி இதில் உள்ளது. அதாவது குறைந்த அளவில் (எ.கா: 1 கிராம், 5 கிராம்) முதலீடு செய்யலாம்.

கடந்த 4-ம்தேதி தேசிய பங்கு சந்தையில் (NSE) எலக்ட்ரானிக் கோல்ட் ரெசிபிட் (electronic gold receipt - EGR) எனும் புதிய வர்த்தக பிரிவினை தொடங்கியுள்ளது. இதனை டீமேட் வடிவிலான தங்கம் என அழைக்கிறார்கள். EGR Gold என்றால் Electronic Gold Receipts. அதாவது மின்னணு தங்க ரசீதுகள் (EGR - Electronic Gold Receipts) என்பது செபி (SEBI) அங்கீகாரம் பெற்ற பெட்டகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள உண்மையான தங்கத்தின் டிஜிட்டல் வடிவமாகும்.

கோல்ட் இடிஎஃப்களை விட EGRஐ பௌதீகத் தங்கமாக மாற்றுவது மிகவும் கவர்ச்சிகரமானதாகக் கருதப்படுகிறது, ஏனெனில் EGR பாதுகாப்புப் பெட்டகத்தில் சேமிக்கப்பட்டுள்ள உண்மையான தங்கத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.

ETF-கள் மற்றும் EGR ஆகிய இரண்டும் "நிதிமயமாக்கப்பட்ட தங்கம்" ஆகும். இது, மக்கள் தங்கள் வீடுகளில் அதிக அளவு தங்கத்தைச் சேமித்து வைக்க வேண்டிய தேவையைக் குறைக்கிறது. மேலும், இவை இரண்டும் செபியால் ஒழுங்குபடுத்தப்படுவதால், ஒழுங்குபடுத்தப்படாத டிஜிட்டல் தங்கத் தளங்களை விட இவை பாதுகாப்பானவை.

எப்படி பங்குச் சந்தையில் (Stock Market) தங்க பிஸ்கெட் வாங்குகிறோமோ அதேபோல் இந்த EGR Goldஐ வாங்க வேண்டும். பொதுவாக தங்கத்தை நாம் நகையாகவோ நாணயமாகவோ வாங்கும்போது தங்கத்தின் விலையோடு சேர்த்து செய்கூலி, சேதாரம் ஆகியவற்றை செலுத்த வேண்டும். ஆனால் இதில் அந்த பிரச்சனை கிடையாது.

நாம் எவ்வளவு பணம் கொடுக்கிறோமா அந்தளவுக்கான தங்கம் பாதுகாப்பான பெட்டகங்களில் (Vaults) சேமிக்கப்படுகிறது, இதனால் பாதுகாப்பு பெட்டக வாடகை கிடையாது. பாதுகாப்பிற்கு பிரச்சனை இருக்காது. ஏனென்றால் இது SEBI ஆல் (Securities and Exchange Board of India)ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஒவ்வொரு EGR ரசீதுக்கும் அதற்கு சமமான எடையுள்ள உண்மையான தங்கம் செபியின் அங்கீகாரம் பெற்ற பாதுகாப்பான பெட்டகங்களில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

பங்குகளைப் போலவே, டிமேட் கணக்கு (Demat Account) மூலம் எளிதாக வாங்க/விற்கலாம். இதனுடைய சிறப்பு என்னவென்றால் EGRஐ விற்று Physical Gold ஆகவும் வாங்கிக்கொள்ள முடியும். அதுவும் 24 கேரட் தங்கமாகவும் வாங்கிக்கொள்ள முடியும்.

EGR வடிவில் தங்கத்தின் முதலீடு செய்தவர்கள் தேவைப்படும் சமயத்தில் அதனை விற்பனை செய்து தங்க கட்டிகளாகவோ அல்லது நாணயங்களாகவோ டெலிவரி எடுத்துக் கொள்ளலாம்.

தேவையற்ற கட்டணங்கள் எதுவும் இல்லாமல் தூய்மையான தங்கத்தை சேமிக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். 100 மில்லி கிராம் தொடங்கி 1 கிராம், 10 கிராம் , 100 கிராம் , 1 கிலோ என்ற கணக்கீட்டில் இந்த தங்கத்தை நாம் வாங்க முடியும். செய்கூலி, சேதாரம் குறித்த கவலை வேண்டாம். 24 கேரட் சுத்த தங்கம் உங்கள் பெயரில் வரவு வைக்கப்படுகிறது.

இதற்கு கட்டாயக் காலவரையறை கிடையாது(No lock-in period). இவ்வளவு தான் பணம் போட வேண்டும் என்ற வரைமுறையும் கிடையாது(No Maximum Money Limit).

அதேசமயம் உங்களுக்கு Physical Gold வேண்டாம், அதை விற்று பணமாக மாற்றி கொள்ளவதற்கான வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

தங்கம் பாதுகாப்பான பெட்டகங்களில் (Vaults) சேமிக்கப்படுகிறது, இதனால் பாதுகாப்பு பெட்டக வாடகை கிடையாது.

SGB (Sovereign Gold Bonds)-ல் வட்டி கிடைக்கும், ஆனால் 5-8 ஆண்டுகள் லாக்-இன் காலம் உள்ளது. ஆனால், EGR-ல் வட்டி இல்லை, அதேசமயம் எப்போது வேண்டுமானாலும் விற்கலாம் மற்றும் தங்கமாக மாற்றலாம்.

இதையும் படியுங்கள்:
தங்கத்தை முதலீடு செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!
EGR Gold

மக்கள் தங்கம் வாங்குவதை நிறுத்த மாட்டார்கள், ஆனால் அந்த முறை படிப்படியாக டிஜிட்டல் மற்றும் நிதி சார்ந்ததாக மாறும்.

logo
Kalki Online
kalkionline.com