

உங்கள் கணக்கில் ரூ.20,000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக ஏதேனும் மெசேஜ் வந்துள்ளதா? கவனமாக இருங்கள்! இது இந்தியா முழுவதும் பரவலாக நடைபெறும் ஆபத்தான UPI மோசடியாக இருக்கலாம்.
இந்தியாவில் தற்போதைய காலகட்டத்தில் டிஜிட்டல் கைது (Digital Arrest), போலி முதலீடு, போலியான பார்சல் மற்றும் வேலைவாய்ப்பு மோசடிகள் மிக அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து கொண்டே வரும் அளவிற்கு இணையாக டிஜிட்டல் மோசடிகளும் வேகமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. மோசடிக்காரர்கள், பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றி பணம் அல்லது முக்கியமான தரவுகளைப் பகிர வைப்பதற்காகத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர்.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், தினமும் புதுப்புது வகையான டிஜிட்டல் மோசடிகள் (UPI Scams) அதிகரித்துள்ளதால், அதன் பல்வேறு வடிவங்கள் மற்றும் அதிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் இன்றியமையாதது.
அந்த வகையில் தற்போது புதுவகையான டிஜிட்டல் மோசடியாக, மெசேஜ் வந்தவுடன் உடனடியாக UPI ஆப்-ஐ திறந்து பேலன்ஸ் பார்ப்பது ஆபத்தாக முடிந்துவிடும் என்று எச்சரிக்கிறது பைசர் கிரைம்.
அதாவது உங்கள் மொபைல் எண்ணிற்கு 20000 ரூபாய் வந்ததுள்ளதாக மெசேஜ் வந்தால் உடனே நீங்க உங்களுடைய போனில் (PhonePe, GPay, Paytm போன்றவை) UPI PIN நம்பரை போட்ட உடன் உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து 20000 ரூபாய் காணாமல் போயிடும்.
மோசடி செய்பவர்கள் (Scammers) உங்கள் போனுக்கு இவ்வளவு ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாக (credited) ஒரு போலியான மெசேஜை அனுப்புவார்கள். நீங்களும் அதை நம்பி உங்கள் பேலன்ஸ் பார்க்க UPI ஆப்ஸை திறந்து, உங்களது ரகசிய பின் (PIN) எண்ணை உள்ளிடும்போது, அந்த பின் நம்பரைக் கொண்டு உங்கள் கணக்கிலிருந்து பணம் மோசடிக்காரர்களால் திருடப்படும்.
ஏன்னா மோசடிக்காரர்கள் நமக்கு அனுப்பி இருக்கும் மெசேஜ், பணம் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையாகும். (withdrawal request message). அதாவது நாங்க இவ்வளவு பணத்தை withdrawal செய்து கொள்கிறோம் என்ற கோரிக்கை மெசேஜ்(request message) தான் நமக்கு அனுப்பி இருக்காங்க.
அந்த நேரத்தில் நாம் PIN நம்பரை போட்டால் நாம் அந்த கோரிக்கை மெசேஜை ஒத்துக்கொண்டதாக அர்த்தம். உடனே நம்முடைய வங்கிக்கணக்கில் இருந்து அவங்களுக்கு பணம் போய்விடும். பணம் பெறுவதற்கு எந்த ஒரு செயலியிலும் பின் (PIN) எண் தேவையில்லை.
மோசடியில் இருந்து தப்பிக்க நீங்கள் செய்ய வேண்டியவை:
* இதுபோன்ற மோசடிகளில் இருந்து தப்பிக்க பணம் வந்துள்ளதாக மெசேஜ் வந்தவுடன் பதற்றப்பட்டு உடனே பேலன்ஸை பார்க்கக் கூடாது. 15–20 நிமிடங்களுக்குப் பிறகு உங்கள் வங்கிச் செயலி (bank app) அல்லது வங்கியின் அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் உங்கள் வங்கி இருப்பை (Bank Balance) சரிபார்க்கலாம்.
ஏனெனில் மோசடியான பேமெண்ட் இணைப்புகள் பெரும்பாலும் 5-10 நிமிடங்களுக்குள் காலாவதியாகிவிடும்.
* உங்களுக்கு சந்தேகம் இருந்தால், பேலன்ஸ் அல்லது பணத்தை உறுதி செய்ய முதல் முறை ஆப்-ஐ பயன்படுத்தும் போது தவறான PIN (Fake PIN)எண்ணை உள்ளிடவும். அது மோசடியாக இருந்தால் பணம் கழிக்கப்படாது.
* பணம் பெறுவதற்கு நீங்கள் எந்த QR கோடையும் ஸ்கேன் செய்ய வேண்டியதில்லை; PIN எண்ணையும் உள்ளிட வேண்டியதில்லை. அவ்வாறு செய்யச் சொன்னால் அது மோசடி.
* மோசடி நடப்பதாகச் சந்தேகித்தாலோ அல்லது தவறுதலாக உங்கள் PIN-ஐ உள்ளிட்டிருந்தாலோ, உடனடியாக சைபர் கிரைம் உதவி எண்: 1930-ஐ அழைத்து அந்த மோசடி குறித்துப் புகாரளியுங்கள்.
* எந்தவொரு UPI மோசடி நடந்தாலும் உடனடியாக அதிகாரப்பூர்வ தளங்களை அணுகி புகார் அளிப்பது மட்டுமே பணத்தை மீட்டெடுக்க உதவும்.
* பணம் வருவதாகக் கூறி வரும் லிங்குகளை கிளிக் செய்யாதீர்கள்.