
விஜே சித்து சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.
சினிமா நடிகர்களை தாண்டி, யூடியூப்பர்களும் தற்போது பேமஸாகி வருகின்றனர். லட்சக்கணக்கான சப்ஸ்கிரைபர்கள் கொண்ட இவர்கள் தினமும் வ்லாக் செய்து சம்பாதித்து வருகின்றனர். இவர்களை ஃபாலோ செய்யும் ரசிகர்கள் தினசரி இவர்களுடன் வீடியோ மூலம் தொடர்பில் இருக்கின்றனர். அப்படி பிரபலமானவர்கள் தான் இர்பான், டிடிஎஃப் வாசன், விஜேசித்து உள்ளிட்டோர். இணையத்தில் இவர்கள் செய்யும் அட்டூழியம் ரசிக்கும் படி இல்லை என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அப்படி காமெடி என்ற பெயரில் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடி வரும் விஜே சித்துதான் தற்போது அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
பிராங்க் ஷோ மூலம் பிரபலமான இவர், தற்போது யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். வ்லாக் ஆரம்பித்து தங்களின் தினசரி வாழ்க்கைகளை படமெடுத்து வெளியிட்டு வருகின்றனர்.
இவரது வீடியோக்கள் நகைச்சுவையுடன் இருப்பதால், இவரது சேனலை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 7-ஆம் தேதி ஒரு வீடியோ ஒன்றை விஜே சித்து பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் இருந்த ஒரு காட்சி தீயாக பரவி, விஜே சித்துவை சிக்கலில் கொண்டு சேர்த்துள்ளது. ஏற்கனவே இவரின் வீடியோக்களில் ஆபாசமாக பேசிவருவதும் இழிவாக பேசிவருவதும் என பல் புகார்கள் இருக்கின்றது.
இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் இந்த வீடியோவில் 90ஸ் கிட்ஸ் விளையாட்டான நிக்கல் - குந்தல் விளையாடுகிறார்கள். அதில், ஒருவர் குந்தல் சொல்லாமல் உட்கார்ந்ததால் அவரை சரமாரியாக தாக்கியதோடு, காலால் எட்டி உதைக்கிறார். இது நகைச்சுவாக இருந்தாலும், அடி வாங்குபவர் சிரித்து கொண்டிருந்தாலும் பார்ப்பவர்கள் அதிர்ச்சியில் என்ன இது என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் காமெடி என்ற பெயரில் இவர் எல்லை மீறி நடைபெறுவதாகவும் புகார் அளித்து வருகின்றனர்.
இந்த சர்ச்சை கருத்து தீயாய் பரவ, அந்த பகுதியை மட்டும் விஜே சித்து தற்போது வீடியோவில் இருந்து நிக்கியுள்ளார். ஆனால் மேலும் நடவடிக்கை பாயுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.