வாகன ஓட்டிகள் ஹேப்பி..!இனிமேல் Toll Gate-ஐ கடக்க ரூ.15 போதும்..!

Toll gate fastag
Toll Gate
Published on

இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க சாவடி மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு, கிலோ மீட்டருக்கு ஏற்ப சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்காக இந்த கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. முன்பு டோல்கேட்டுகளில் கட்டணங்கள் பணமாக வசூலிக்கப்பட்டது. சுங்கச் சாவடிகளில் காத்திருப்பை தவிர்த்து, நெரிசலை குறைப்பதற்காக ஃபாஸ்டேக் (FASTag) திட்டம் அறிமுகமானது. இதன்படி ஃபாஸ்டேக்-ல் (FASTag) ரீசார்ஜ் செய்து கொண்டால் டோல்கேட்டில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு டோல்கேட்டையும் கடக்கும்போது பணம் தானாகவே எடுத்துக் கொள்ளப்படும். இதனால் வாகன ஓட்டிகளின் நேரம் மிச்சப்படுத்தப்பட்டது.

தற்போது இந்தியாவில் ஒவ்வொரு 60 கிலோ மீட்டருக்கும் ஒரு சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில இடங்களில் 60 கிலோமீட்டருக்கு உள்ளேயே இரண்டு சுங்கச்சாவடிகள் அமைக்கப்படுகிறது.

இது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வந்த நிலையில், சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ரூ.3000 செலுத்தும் ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் (FASTag Annual Pass) திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வந்தது.

இதையும் படியுங்கள்:
ஃபாஸ்ட் டேக் இல்லையா? கவலை வேண்டாம்... மத்திய அரசு அறிவித்த புதிய நடைமுறை..!
Toll gate fastag

அதாவது, 3000 ரூபாய்க்கு பாஸ் பெற்றுக் கொண்டால் ஓராண்டிற்கோ அல்லது 200 பயணங்களுக்கோ தனியாக கட்டணம் செலுத்தாமல் பயணிக்கலாம். ஆகவே, ஒரு முறை டோல் கேட்டை கடந்து செல்ல வெறும் ரூ.15 மட்டுமே செலவாகிறது. இது வழக்கமான டோல் கேட் கட்டணத்தைவிட மிகவும் மலிவாக கிடைக்கிறது.

அதாவது, இந்த FASTag Annual Pass 15 ரூபாய்க்கு இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் டோல் கேட்டை (Toll Gate) கடக்க வைப்பதால், வாகன ஓட்டிகளின் அமோக ஆதரவை பெற்று அறிமுகப்படுத்தப்பட்ட 3 மாதங்களுக்குள் 12 சதவீதம் உயர்ந்துள்ளது. இதற்கு முன் ஆண்டுக்கு ரூ.10,000 செலுத்தி வந்த வாகன ஓட்டிகள், இந்த பாஸ் திட்டத்தின் மூலம் ரூ.7,000 சேமிக்க முடிவதாகவும், வெறும் ரூ.3,000க்கு ஒரு வருடத்தில் 200 பயணங்களை செல்ல முடிவதால் மேற்கொள்ள முடியும்.

இந்த FASTag Annual Pass வசதியாகவும், செலவு குறைவாகவும் இருப்பதால் வாகன ஓட்டிகள் இந்த பாஸ் வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்த வருடாந்திர பாஸ் வாங்கிய வாகன ஓட்டிகள் அக்டோபரில் 14 லட்சம் ட்ரிப்களையும், நவம்பரில் 16 லட்சம் ட்ரிப்களையும் செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. இது மொத்த தேசிய நெடுஞ்சாலை பயணங்களில் 12 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கார், ஜீப், வேன்கள் போன்ற தனிநபர் பயன்பாட்டு வாகனங்களுக்கு மட்டுமே ஆண்டு பாஸ் திட்டம் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. வணிக வாகனங்கள் மற்றும் டாக்சிகள் போன்ற வாகனங்களுக்கு பாஸ் கொடுக்கப்படவில்லை. இந்த பாஸ் இருந்தால் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் பயணிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
நாளை முதல் புது விதி.! இனி ₹100 டோலுக்கு ₹200 கட்ட வேண்டும்!
Toll gate fastag

ஒருமுறை ஃபாஸ் பெற்ற பிறகு அதை வேறு வாகனத்துக்கு மாற்ற முடியாது. வாகனத்தின் விண்ட்ஷீல்டில் பாஸ் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். இந்த ஃபாஸ்டேக் வாகனத்தின் பதிவு எண் (Vehicle Registration Number) முக்கியமாகும். சேசிஸ் நம்பர் மட்டுமே இருந்தால் போதாது. ஒரு ரவுண்ட் ட்ரிப் இரண்டாக கணக்கில் எடுத்து கொள்ளப்படும். அப் அண்ட் டவுன் போல கிடையாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com