இனி 20 ரூபாய்க்கு உணவு..! ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்..!

Food at low price
IRCTC
Published on

விரைவு ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஐஆர்சிடிசி சார்பில் உணவு வழங்கப்படுவது வழக்கம். ஆனால் முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு ரயிவ்வே நிர்வாகம் சார்பில் உணவு வழங்கப்படாது.

இந்நிலையில் முன்பதிவு செய்யாத பயணிகளுக்கும் உணவு அவசியம் என்பதை உணர்ந்து, புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது தெற்கு ரயில்வே. இதன்படி மலிவான விலையில் பயணிகளுக்கு உணவு வழங்க ‘ஜனதா கானா’ என்னும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ‘ஒன் ஸ்டேஷன் ஒன் தயாரிப்பு’ திட்டம் ரயில்வே துறையால் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு மலிவு விலையில் உணவு கிடைப்பதை சாத்தியமாக்கியுள்ளது. இத்திட்டத்தின்படி முன்பதிவு செய்யாத பயணிகள் ரயிலை விட்டு நடைமேடையில் இறங்காமலேயே மிகவும் குறைவான விலையில் உணவை வாங்க முடியும். வெறும் 20 ரூபாயில் உணவு என்பது இன்றைய காலகட்டத்தில் நிச்சயமாகவே நலலத் திட்டம் தான்.

பொதுவாக ரயில்கள் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் நிற்கும் போதும், ரயில் நிலையத்தில் உள்ள உணவகங்களில் இருந்து ஆட்கள் உணவுகளை விற்பனை செய்வர். இந்த உணவுகளின் விலை அதிகமாக இருப்பதால் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் ரயிலில் பயணித்தவரே மிகவும் குறைவான விலையில் உணவு என்பதை சாத்தியமாக்கி உள்ளது தெற்கு ரயில்வே.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “உள்ளூர் தயாரிப்புகளை பிரபலப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘ஒன் ஸ்டேஷன் ஒன் தயாரிப்பு’ திட்டம் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இத்திட்டத்தின் மூலம் விவசாய பொருட்களும், கைவினைப் பொருட்களும் நன்றாக விற்பனையாகின. தற்போது மலிவான விலையில் பயணிகளுக்கு உணவு வழங்கும் ஜனதா கானா திட்டம் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

இத்திட்டத்தின்படி குறைந்தபட்சம் 20 ரூபாயிலேயே பயணிகளுக்கு தரமான உணவுகள் கிடைக்கும். தற்போது சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம் மற்றும் காட்பாடி உள்ளிட்ட 27 ரயில் நிலையங்களில் ஜனதா கானா திட்டத்தின் மூலம் மலிவான விலையில் உணவு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்..!விமான நிலையம் போல் மாறும் எழும்பூர் ரயில் நிலையம்..!
Food at low price

மலிவான விலையில் உணவு வழங்க தெற்கு ரயில்வேயில் 62 ரயில் நிலையங்களில் மொத்தம் 84 கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடைகளில் பாரம்பரிய சிற்றுண்டிகள் தினம் தோறும் கிடைக்கும். உன் ஸ்டேஷன் ஒன் தயாரிப்பு திட்டத்துடன் சிக்கனை உணவு திட்டமும் தற்போது இணைந்துள்ளதால் பயணிகள் மத்தியில் இத்திட்டத்திற்கு நிச்சயம் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக வார இறுதி நாட்களில் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் தற்காலிக கடைகளை ஏற்படுத்தவும் தெற்கு ரயில்வே ஆலோசனை செய்து வருகிறது. மேலும் இந்த உணவு திட்டத்தை சோதனை முயற்சியாக பல ரயில் நிலையங்களை தெற்கு ரயில்வே தொடங்கியுள்ளது” என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்..! விரைவில் வரப்போகுது தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்..!
Food at low price

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com