இந்தியாவில் உணவு பற்றாக்குறை ஏற்படும்; மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

அமெரிக்காவில் 5 நாள் அரசுமுறை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அங்கு பேசும்போது 'இந்தியாவில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது' என்ற அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள நிர்மலா சீதாராமன் அங்கு சர்வதேச நிதி ஆணையம் , உலக வங்கி ஆண்டு கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

மேலும் ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை, மத்திய வங்கி ஆளுநருடன் பேச்சு வார்த்தை, அடுத்ததாக, ஜப்பான், தென்கொரியா, சவூதி அரேபியா, ஆஸ்திரேலியா, போன்ற நாடுகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் கொள்கிறார்.

 இந்நிலையில் வாஷிங்டன் ப்ரூக்கிங்ஸ் நிறுவனத்தில் "இந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு" என்ற தலைப்பில் பேசிய நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

 இந்திய பொருளாதாரமானது பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது. எரிபொருள், மின்சாரம், விவசாய உரத்தின் விலை கடும் உயர்வு பெற்றுள்ளது. மேலும், அவை கிடைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டு உள்ளது. நாட்டில் சில பகுதிகளில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது.

 -இவ்வாறு அவர் பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com