மக்களுக்கு அடுத்த ஷாக்..! DABUR-ஐ தொடர்ந்து Fortune எண்ணெய்க்கு அபராதம் விதித்த FSSAI..!!

நாட்டில் முன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனமான Fortune ‘Fryola’ சமையல் எண்ணெய்க்கு FSSAI அபராதம் விதித்துள்ளது.
Fortune Fryola, FSSAI|சமையல் எண்ணெய்
Fortune Fryola, FSSAI|சமையல் எண்ணெய்image credit-indianfoodtimes.com, thehohalla.com
Updated on

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய வாரியம் (FSSAI), நாட்டில் முன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனமான 'ஃபார்ச்சூன்' (Fortune) சமையல் எண்ணெய்க்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

தரமற்ற, ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட சூரியகாந்தி சமையல் எண்ணெயை தயாரித்து விற்பனை செய்ததற்காக முன்னணி சமையல் எண்ணெய் நிறுவனமான AML அக்ரி பிசினஸ் லிமிடெட் (AWL Agri Business Ltd) மீது உணவு ஒழுங்குமுறை ஆணையமான FSSAI அபராதம் விதித்துள்ளது.

அகமதாபாத்தை தளமாகக் கொண்ட AML அக்ரி பிசினஸ் நிறுவனம், ஃபார்ச்சூன் (Fortune) என்ற பிராண்டின் கீழ் சமையல் எண்ணெய்களை விற்பனை செய்து வருகிறது.

Fortune ‘Fryola’ சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் தரநிலையை பூர்த்தி செய்யாததை கண்டறியப்பட்டதை தொடர்ந்து அபராதம் விதித்தது FSSAI. கோவாவில் சேகரிக்கப்பட்ட மாதிரி ஒன்றில் வைட்டமின் டி அளவு நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட கணிசமாக குறைவாக இருந்தது ஆய்வகப் பரிசோதனையில் தெரியவந்ததையடுத்து, ஒழுங்குமுறை ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.

கோவாவில் உள்ள Taj Aguada resort & Spa-வில் 1 லிட்டர் ஃபார்ச்சூன் ஃப்ரையோலா (Fortune Fryola) சூரியகாந்தி எண்ணெய் மாதிரி சேகரிக்கப்பட்டது.

ஆய்வக சோதனையில் வைட்டமின் ஏ (Vitamin A) மற்றும் வைட்டமின் டி (Vitamin D)அளவுகள் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு கீழ் இருப்பது கண்டறியப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட குறைவாக இருந்ததால், உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2006-இன் பிரிவு 3(1)(zx)-இன் கீழ், இந்த எண்ணெய் தரமற்றது என அறிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுத்திருப்பதாக ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்தது.

நிறுவனம் மேல்முறையீடு செய்ததால் அந்த மாதிரி பரிந்துரைக்கப்பட்ட ஆய்வகத்தால் (மத்திய உரிமம் வழங்கும் ஆணையம்) மீண்டும் பரிசோதிக்கப்பட்டது. அங்கும் வைட்டமின் டி-யின் அளவு பரிந்துரைக்கப்பட்ட வரம்பை விடக் கணிசமாகக் குறைவாக இருப்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து, மத்திய உரிமம் வழங்கும் ஆணையம் வழக்குத் தொடர அனுமதி வழங்கியது.

FSSAI Bans Dabur products
FSSAI Bans Dabur productsSource:https://thereportbharat.com/

அதனை தொடர்ந்து AWL அக்ரி பிசினஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு, கோவாவின் தீர்ப்பளிக்கும் அதிகாரி தீர்ப்பு உத்தரவைப் பிறப்பித்து அபராதம் விதித்தார் என்று ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்தது. ஆனால், இந்த உத்தரவில், எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டது என்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

FSSAI வெளியிட்ட சமூக ஊடகப் பதிவு ஒன்றில், AWL அக்ரி பிசினஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக வெளியான உத்தரவு வெளியிட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தரமற்ற, ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட சமையல் எண்ணெயை (ஃபார்ச்சூன் ‘ஃபிரையோலா’ சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி விதை எண்ணெய்) தயாரித்து சந்தைப்படுத்தியதற்காக, AML அக்ரி பிசினஸ் லிமிடெட் (மங்களூர்) நிறுவனத்திற்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என FSSAI தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் ஆந்திர பிரதேசத்தில் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் பொறித்த சிக்கனிலிருந்து புழுக்கள் நெளிவதையும், மேகி நிறுவனத்தின் நூடுல்ஸ் பாக்கெட்டில், புழுக்கள் மற்றும் பூச்சிகள் இருந்ததாக சமூக வலைதளத்தில் வாடிக்கையாளர்கள் வீடியோ பதிவிட்டதையடுத்து அந்த நிறுவனங்களுக்கு FSSAI நோட்டீஸ் அனுப்பி பாதுகாப்பு விளக்கங்களை கோரி இருந்தது.

இதையும் படியுங்கள்:
கேஎஃப்சி சிக்கன், மேகியில் புழுக்கள்: முன்னணி நிறுவனங்களுக்கு FSSAI அதிரடி நோட்டீஸ்!
Fortune Fryola, FSSAI|சமையல் எண்ணெய்

இதற்கிடையே கடந்த வாரம் '100% தூய்மையானது' அல்லது '100% இயற்கையானது' (100% Pure/Natural) போன்ற தவறான மற்றும் சரிபார்க்க முடியாத விளம்பர வாசகங்களைப் பயன்படுத்தியதற்காக டாபர் (DABUR) இந்தியாவின் சில உணவுப் பொருட்களின் விற்பனைக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) தடை உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது..

டாபர் (Dabur) நிறுவனத்தைத் தொடர்ந்து, ஃபார்ச்சூன் 'ஃப்ரையோலா' (Fortune Fryola) எண்ணெய் மீதும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அபராதம் விதித்திருப்பது, பிரபல பிராண்டட் தயாரிப்புகளின் தரம் குறித்து பொதுமக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய இந்த தொடர் நிகழ்வுகள், இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:
#BIG NEWS : டாபர் நிறுவன பொருள்களுக்கு FSSAI தடை..!
Fortune Fryola, FSSAI|சமையல் எண்ணெய்

கடந்த சில மாதங்களாக, FSSAI தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு, தனது சட்டங்களையும் விதிகளையும் மீறியதற்காக உணவு வணிக நிறுவனங்கள் (FBOs) மற்றும் மின் வணிகத் தளங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக ஆற்றல் பானங்கள் மற்றும் மதுபானங்கள் தயாரிப்பாளர்களும் இந்த ஒழுங்குமுறை ஆணையத்தின் கண்காணிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com