அனகாப்பள்ளியைப் பிறப்பிடமாகக் கொண்ட கொனத்தலா விஜய் தற்போது சீனாவில் வசித்து வருகிறார்.
நான்கு பேர் கொண்ட அந்தத் தெலுங்கு குடும்பத்தில் உள்ள கணவன், மனைவி, மகள், மகன் எனத் தலா ஒரு கின்னஸ் உலகச் சாதனை படைத்துள்ளார்கள் .
இந்திய குடும்பத்தில் இப்படி ஒவ்வொருவரும் தனிச்சிறப்பு பெற்றுள்ளது இது தான் முதல் முறை என நினைக்கத் தோன்றுகிறது.
ஒவ்வொரு இந்தியனும் சந்தோஷப்படும் படி ஒரு குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் உலகச் சாதனைகளைப் படைத்துள்ள ஒரே இந்தியக் குடும்பம் இதுவாக இருக்கலாம்!
குடும்பம் யோகா மற்றும் விளையாட்டுப் பிரிவுகளில் சாதனை படைத்தது.
சீனாவில் உள்ள சாங்ஷா நகரில் குடும்பம் வசித்து வருகிறது.
குடும்பத் தலைவரான கொனத்தலா விஜய், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அனகாபள்ளியைச் சேர்ந்தவர். 2012 முதல் சீனாவில் வசித்து வருகிறார். அவர் யோகா ஆசிரியராகவும் நடன அமைப்பாளராகவும் உள்ளார். சீனாவில் யோகா மற்றும் நடனப் பள்ளி நடத்தி வருகிறார். 2021 ஆம் ஆண்டில், யோகா பிரிவின் கீழ் கின்னஸ் உலகச் சாதனைகளில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றார். அஷ்டவக்ராசனம், மயூராசனம் மற்றும் பகாசனம் போன்ற மேம்பட்ட ஆசனங்களை உள்ளடக்கிய மிக நீண்ட யோகா அமர்வுக்கான சாதனையை அவர் பெற்றுள்ளார்.
ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் நோபல் வேர்ல்ட் ரெகோ ஆகியவற்றிலும் சாதனை படைத்துள்ளார்.
அவரது மனைவி, கொனத்தலா ஜோதி, கர்ப்பத்தின் 9 வது மாதத்தில் (பிரசவத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு) மேம்பட்ட யோகாசனங்களைச் செய்து உலகச் சாதனை படைத்துள்ளார்.
கொனத் தலா விஜய் - ஜோதி தம்பதியின் ஒரே மகள் ஜாஸ்மிதா வயது 14. அதி வேகமாக 168 Skips ஸ்கிப்ஸ் ஒரு நிமிடத்தில், அதுவும் ஒரே காலில், ZHENGZHOU in Henan Province in China என்கிற இடத்தில் ஜூன் 1, 2024 அன்று நிகழ்த்தி உள்ளார்.
கொனத்தலா விஜய் ஜோதி தம்பதியின் மகன் ஷங்கர் 5 வயதே ஆனவர். 129 Ropeskips ஒரே நிமிடத்தில் CHANGSHA என்னும் இடத்தில் அக்டோபர் 31, 2024 அன்று இந்தச் சாதனையை நிகழ்த்தி உள்ளார். இதற்கு முன் 30 வருடம் முன்பு ஜப்பான் நாட்டு atheletic சாதனையை முறியடித்து உள்ளார்.
விஜய் பேசும்போது யோகா இந்திய கலாசாரத்தின் வெகுமதி என்றும் இந்த யோகா மனதுக்கு அமைதியையும் புத்துணர்ச்சியும் அளிக்கிறது என்றும் விவரித்தார். தெலுங்கு பட உலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தான் தனக்கு இன்ஸ்பிரேஷன் என்றும் "அவருக்கு இந்த விருதினை dedicate பண்ணுகிறேன். எங்கள் நால்வரையும் அவர் தன் வீட்டுக்கு கூப்பிட்டு கௌரவபடுத்தியது எங்களுக்குப் பெருமை" என்றும் சொல்லி உள்ளார்.
"இந்தியப்பிரதமர் திரு மோடிஜி அவர்களுக்கு இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன். யோகா மூலம் அவர் இந்தப் பாரதத்துக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியது பெருமையான விஷயம்" என்றும் கூறி உள்ளார்.