இயேசு கிறித்துவைக் காண உண்ணாவிரதம் இருந்த நான்கு பேர் பலி!

இயேசு கிறித்துவைக் காண உண்ணாவிரதம் இருந்த நான்கு பேர் பலி!
Published on

கென்யா நாட்டின் கிலிஃபி மாகாணத்தில் உள்ளது ஷக்கஹோலா கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஒரு சர்ச்சில் பாதிரியாராக பால் மக்கென்ஸி உள்ளார். இவர் அந்த சர்ச்சுக்கு வரும் நபர்களில் யாருக்கு பக்தி அதிகம் இருக்கிறது, யார் கடவுளை பார்க்கத் துடிக்கிறார்கள் என்பதை நாசூக்காக அறிந்து கொள்வாராம். பிறகு அவர்களை மட்டும் அழைத்து ஒரு சிறப்பு கூட்டத் தொடர் நடத்தப்படுமாம். அந்த கூட்டத்தொடரில் இயேசு கிறிஸ்துவை நேரில் சந்திப்பதற்கான வழி, சொர்க்கத்தை அடைய செய்ய வேண்டுவது என்ன என்பது சொல்லப்படுவது வழக்கமாம். அந்த பாதிரியார் அவர்களிடம் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தால் இயேசு கிறிஸ்துவை பார்க்கலாம் எனச் சொல்லியுள்ளாராம்.

இதுகுறித்து அந்த சர்ச்சில் ஒரு கூட்டம் நடைபெற்று வருவதாக அந்த நாட்டு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதனையடுத்து போலீஸார் அந்த சர்ச்சில் சோதனை நடத்தி உள்ளனர். அப்போது பாதிரியார் சொர்க்கத்துக்குச் செல்வது குறித்தும் இயேசு கிறிஸ்துவை சந்திப்பது குறித்தும் பேசிக் கொண்டிருந்தாராம். உடனே அவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையில் அந்த சர்ச்சில் இருந்து பதினைந்து பேர் கென்யாவில் உள்ள அடர்ந்த காட்டுக்குச் சென்று உண்ணாவிரதம் இருந்து வருவதாகத் தகவல்கள் கிடைத்தன. இதனையடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அங்கு பதினைந்து பேரும் தண்ணீர் கூட அருந்தாமல் உணவு ஏது உண்ணாமல் விரதம் இருந்தது தெரியவந்தது.

அதனையடுத்து, அவர்களை போலீஸார் அழைத்தபோது அவர்கள் அவர்களுடன் வர மறுத்ததோடு அவர்கள், ’இயேசு கிறிஸ்துவைப் பார்க்க வேண்டும். அதற்காக நாங்கள் பட்டினி கிடந்து இறந்தால் மட்டுமே அது நடக்கும். எங்களை விட்டு நீங்கள் இந்த இடத்தைப் விட்டு போங்கள்’ என்று கூறினராம். அதைத் தொடர்ந்து போலீஸார் அவர்களை வலுகட்டாயமாக தங்களுடன் அழைத்துச் சென்றனர். இந்த பதினைந்து பேரில் மூன்று பெண்களும் ஒரு ஆணும் இறந்துவிட்டனராம். மற்ற 11 பேரை மீட்ட போலீஸார் அவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதுமட்டுமின்றி, அந்த காட்டில் சில சடலங்கள் எரிந்து கிடந்து இருக்கின்றன. எனவே அதுகுறித்து போலீஸார் சந்தேகிக்கிறார்கள். தற்போது அந்த பாதிரியார் தலைமறைவாகி விட்டார். போலீஸார் அவரைத் தேடி வருகின்றனர்.

சென்ற மாதம் இதே பாதிரியார் இரண்டு குழந்தைகளை உயிரோடு புதைத்துவிட்டு, ’அவர்கள் இருவரும் அனைவராலும் போற்றப்படும் ஹீரோக்களாக மீண்டும் வருவார்கள்’ என்று அந்தக் குழந்தைகளின் பெற்றோரிடம் கூறி உள்ளார். இதனை நம்பிய அந்தப் பெற்றோர் குழந்தைகளை உயிரோடு புதைத்தனர். இந்த வழக்கில் அந்த பாதிரியார் ஜாமீனில் வெளியே உள்ளாராம். கடந்த 2019ம் ஆண்டு நிலவரப்படி கென்யாவில் 85 சதவீதம் பேர் கிறிஸ்துவ மதத்தை தீவிரமாக பின்பற்றுகிறார்கள். இவர்களின் தீவிர பற்றை சிலர் தவறாகப் பயன்படுத்தி இதுபோன்று மூடநம்பிக்கையை அவர்களுக்குள் புகுத்தி அவர்களையே அவர்கள் இழக்கும் அளவுக்கு மூளை சலவை செய்கிறார்கள்.

காட்டில் உண்ணாவிரதம் இருந்தால் இயேசு கிறிஸ்து காட்சியளிப்பார் என பாதிரியார் ஒருவர் சொன்னதை நம்பி காட்டுக்குச் சென்ற நான்கு பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com