இப்படியும் திருமணம் செய்யலாமா? திருமண செலவை குறைக்க மணமகன் செய்த செயல்!

பிரான்ஸ் நாட்டில் திருமண செலவை குறைக்க மணமகன் செய்த தரமான செயல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
French Groom Wedding Costs
French Groom Wedding Costs
Published on

திருமணம் என்பது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே நடக்கும் நிகழ்வு. அந்த திருமணம் பாரம்பரிய முறைப்படி நடக்கும் சடங்கு என்பது மாறி தற்போது திருமணத்தில் புதுப்புது ஐடியாக்களை புகுத்தி இணையத்தில் டிரெண்ட்டாக்கி வருகின்றனர். ஒவ்வொரு தம்பதியினரின் மனதிலும் ஒரு கனவு திருமணம் வடிவமைக்கப்பட்டிருக்கும். திருமண அழைப்பிதழ் அச்சடிப்பதிலும், ஆடைகளை வடிவமைப்பதில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதுமைகளை புகுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி தம்பதிகள் தங்கள் திருமணத்தை மறக்க முடியாத அனுபவமாக மாற்ற, பாரம்பரியம் மற்றும் நவீனத்துவத்தின் கூறுகளைக் கலந்து தனித்துவமான தீம்கள், வித்தியாசமான அலங்காரங்கள் மற்றும் பல கலாச்சார முறைப்படி நடத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் கேரளாவில் மகளின் திருமணத்தில் மொய் வைப்பவர்களின் வசதிக்காக மணமகளின் தந்தை QR codeஐ சட்டைப் பையிலேயே வைத்து கொண்டு சுற்றி சம்பவம் இணையத்தில் வைரலான நிலையில் தற்போது பிரான்ஸ் நாட்டில் திருமண செலவிற்காக மணமகன் செய்த தரமான செயல் ஒன்று வைரலாகி வருகிறது.

பிரான்ஸ் நாட்டில் உள்ள லில்லி பகுதியை சேர்ந்தவர் டகோபர்ட் ரெனோப்(Dagobert Renouf). இவருக்கும் இவரது மணமகள் கிளாராவுக்கும் கடந்த 25-ம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது அவர்களது திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்:
டிரண்டாகும் புது கலாச்சாரம்: இனி திருமண மொய் வைக்க ‘கவர்’ வேண்டாம்... ‘QR Code’ போதும்..!
French Groom Wedding Costs

ஸ்டார்ட் அப் நிறுவனம் நடத்தி வரும் டகோபர்ட் ரெனோப் என்பவர் தனது திருமண செலவுகளை ஈடுகட்ட என்ன செய்யலாம் என யோசித்த அவருக்கு ஒரு புதுமையான யோசனை தோன்றியது. அதாவது டகோபர்ட் கடந்த ஜூலை மாதம் தனது யோசனையை ஆன்லைனில் அறிவித்த போது 26 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அவரது யோசனைக்கு ஆதரவு அளித்ததுடன் ஸ்பான்சர்ஷிப் வழங்குவதாகவும் உறுதியளித்தன.

அதற்காக அவர் தனது திருமண உடையில் 26 ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் விளம்பரங்களை அச்சிட்டிருந்தார். AI முதல் SaaS, மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் தனது சொந்த நிறுவனமான CompAi பெயரை கூட அதில் அச்சிட்டிருந்தார்.

இதன்மூலம் டகோபர்ட் ரெனோப்புக்கு 26 ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் ஸ்பான்சர்ஷிப்கள் கிடைத்தன. பின்னர் அவர் ஒரு தையல்காரருடன் இணைந்து, 26 ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் ஒவ்வொரு லோகோவையும் மிக நுணுக்கமாக எம்ப்ராய்டரி செய்து, தனது திருமண உடையை பிராண்ட் அடையாளங்களாக மாற்றினார்.

அந்த நிறுவனங்களின் 'லோகோக்கள்' அனைத்தும் டகோபர்ட் ரெனோப் அணிந்திருந்த கருப்பு நிற திருமண சூட்டில் நேர்த்தியாகவும், தெளிவாக தெரியும்படியும் பதிக்கப்பட்டிருந்தன.

ரெனோப் தனது திருமணம் முடிந்த பிறகு, 26 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் விளம்பரங்கள் பதிக்கப்பட்டிருந்த தனது திருமண உடையுடன் இருக்கும் புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு அந்த நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார். இதில் ‘எங்கள் திருமணத்திற்கு பணம் செலுத்த உதவிய 26 ஸ்டார்ட்அப்களுக்கு மிக்க நன்றி, அது ஒரு அழகான நாள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

ஸ்பான்சர்ஷிப்கள், மூலம் சுமார் $7,500 (தோராயமாக ₹6.2 லட்சம்) வருமானத்தை ஈட்டியதாக கூறிய டகோபர்ட் ரெனோப், அதில் $5,500 திருமண உடையை உருவாக்கவே செலவிடப்பட்டதாகவும் கூறினார்.

இதையும் படியுங்கள்:
‘கணவர் இல்ல, கணவர் மாதிரி’: ஆண்களை வாடகைக்கு அமர்த்தும் பெண்கள்...சீனாவில் பரவும் 'Kens' கலாச்சாரம்..!
French Groom Wedding Costs

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் அவர்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் சிலர் ‘சகோதரரே, நீங்கள் சூட்டில் சம்பாதித்த $7.5k இல் $5.5k செலவிட்டது பைத்தியக்காரத்தனம்’ என்று கருத்து தெரிவித்தார்.

இன்னும் பலர், ‘மணமகன் தனது கிரியேட்டிவ் ஐடியாவை பயன்படுத்தி திருமண செலவை ஈடு கட்டி விட்டார் என்று வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com