நாம் இருக்கும் இடத்தில் எந்த பொருள் கிடைக்குதோ இல்லையோ அனைவருக்கும் எளிதாக கிடைக்கும் பொருள் என்றால் அது இடியாப்பம் தான். இடியாப்பம் என விற்கும் சத்தத்தை கேட்காதவர்கள் இருக்க முடியாது.
வெறும் 10 ரூபாய் கொடுத்தால் 3 முதல் 4 இடியாப்பம் கிடைக்கும் இதனை வைத்து காலை உணவை சிலர் முடித்து விடலாம். அந்த அளவிற்கு மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அனைத்து இடங்களிலும் இடியாப்பம் விற்பனை அதிகரித்துள்ளது.தமிழ்நாட்டில் பல இடங்களில் சைக்கிள், இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்கப்படுகிறது. ஆனால், சில இடங்களில் இடியாப்பம் முறையாக விற்கப்படுவதில்லை என தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறைக்கு புகார்கள் வந்துள்ளது.
இதனால், சைக்கிள், இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பதற்கு உரிமம் கட்டாயம் என சற்றுமுன் உணவு பாதுகாப்புதுறை அறிவித்துள்ளது. ஆன்லைனில், இலவசமாக உரிமம் பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. ஆன்லைனில் இலவசமாக உரிமத்தை பெறலாம் எனவும் ஆண்டுக்கு ஒருமுறை அதை புதுப்பிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காய்ச்சல், நோய் தொற்று பாதிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் இந்த விற்பனையில் ஈடுபட வேண்டாம் எனவும் உணவு பாதுகாப்பு துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும் இடியாப்பம் தயாரிக்கும் போது பாதுகாப்பாகவும், சுகாதாரமான, தரமான பொருட்களைக் கொண்டு தயாரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.