மக்களே உஷார்! இனி அனுமதியின்றி மரம் வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை.!

சென்னையில் அனுமதி இன்றி மரங்களை வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
tree cutting
tree cuttingAI image
Updated on

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பொது இடங்களில் உள்ள மரங்களை உரிய அனுமதியின்றி வெட்டினால் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என Greater Chennai Corporation (GCC) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியின் பசுமைப் போர்வையைப் பாதுகாக்கவும், மரங்கள் சட்டவிரோதமாக அழிக்கப்படுவதைத் தடுக்கவும் சென்னை மாநகராட்சி (Greater Chennai Corporation Tree Authority) இந்த கடுமையான விதிகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பசுமை பரப்பினை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது. குறிப்பாக பல்வகை மரக்கன்றுகள் நடப்பட்டும், குறுங்காடுகள் உருவாக்கப்பட்டும் பராமரிக்கப்பட்டு வருகின்றனது. அதன்படி சென்னை முழுவதும் 12 லட்சம் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் பல்வேறு பகுதகளில் அனுமதியின்றி மரங்களை வெட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான புகார்கள் மாநகராட்சிக்க சென்றவாறு உள்ளது. எனவே சென்னை மாநகராட்சி பகுதியில் அனுமதியின்றி மரங்களை வெட்டும் நபர்களுக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளனர். அதில், ‘சென்னை மாநகராட்சியில் பசுமைப்பரப்பை அதிகரித்திடும் வகையில் பூங்காக்கள், சாலை மைய தடுப்புகள், திறந்தவெளி பகுதிகளில் மரங்கள் மற்றும் செடிகளை நட்டு பராமரிக்க கடந்த ஜூலை மாதம் நடந்த கலெக்டர்கள் மாநாட்டில் முதலமைச்சர் அறிவுறுத்தினார். அதன்படி, சென்னையில் 12 லட்சம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது. மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றுவதற்கு மாநகராட்சியின் இணையதளத்தில் (https://chennaicorporation.gov.in/gcc/) விண்ணப்பித்து பொதுமக்கள் முறையாக அனுமதி பெற வேண்டும்.

உரிய அனுமதி வழங்கிய பின்னர் மட்டுமே மரங்களையோ, மரக்கிளைகளேயே அகற்றிட வேண்டும். ஆனால் உத்தரவை மீறி மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

எனவே அனுமதியின்றி மரங்களை வெட்டினால் ரூ.1 லட்சம் வரையிலும், அனுமதியின்றி மரக்கிளைகளை வெட்டுவது (Pruning), விளம்பரப் பலகைகளுக்காக மரங்களில் ஆணி அடிப்பது அல்லது மின் விளக்குகள் சுற்றுவது போன்றவற்றுக்கு ரூ. 15,000 வரையிலும் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

மேலும், மாநகராட்சி நிர்வாகம், மரம் தொடர்பான அனைத்து அனுமதிகளையும் (2026) கடந்த ஜனவரி 12 முதல் இணையவழி முறைக்கு மாற்றியுள்ளது.

அனுமதி பெறும் முறை :

* மரங்களை அகற்றவோ அல்லது கிளைகளை வெட்டவோ முறையான அனுமதி பெற வேண்டும்.

* இதற்கு Greater Chennai Corporation Website அல்லது 'நம்ம சென்னை' (Namma Chennai) செயலி மூலமாக மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
நிழலுக்காக மட்டுமின்றி, சுற்றுச்சூழலுக்கும் பயன் தரும் மரங்கள்!
tree cutting

* பொது இடங்கள் மட்டுமின்றி, தனிநபர் மனைகள் அல்லது தனியார் நிறுவன வளாகங்களில் உள்ள மரங்களை வெட்டுவதாக இருந்தாலும், மாநகராட்சியின் மரக் குழுவிடம் (Tree Authority / Green Committee) உரிய காரணம் கூறி முன்அனுமதி பெற வேண்டும்.

* பொது இடங்களில் உள்ள மரங்கள், மரக்கிளைகள் அனுமதியின்றி வெட்டப்பட்டாலோ அல்லது சேதப்படுத்தப்பட்டாலோ சென்னை மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணை (Helpline) தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

* புயல் அல்லது மழைக்காலங்களில் ஆபத்தான நிலையில் விழும் மரங்கள் மற்றும் மின் கம்பிகளுக்கு இடையூறாக இருக்கும் கிளைகளை அகற்ற மாநகராட்சி மற்றும் மின்வாரிய அதிகாரிகளே நடவடிக்கை எடுப்பார்கள். பொதுமக்கள் நேரடியாக மரங்களை வெட்டக் கூடாது.

இதையும் படியுங்கள்:
ஒரே திசையில் வளைந்து வளரும் 400 மரங்கள்! இயற்கையின் விந்தையா? நாஜிக்களின் சதியா?
tree cutting

பொது இடங்களில் உள்ள மரங்களைப் பாதுகாக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com