

இந்தியாவில் கேஸ் சிலிண்டர் விலை உயர்வைத் தொடர்ந்து, தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த 2 வாரங்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை 6 முறை உயர்ந்திருப்பது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பொது மக்களுக்கு பேரதிர்ச்சி தரும் வகையில், ரயில் நிலைய உணவுகளின் விலையும் வருகின்ற ஜூன் 1-ம் தேதி முதல் உயர இருப்பதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போல் காரணமாக உலக நாடுகளில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்தியாவிலும் எரிபொருள்களின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வரும் நிலையில், இதன் எதிரொலியாக ஏற்கனவே ஹோட்டல்களில் உணவு பொருட்களின் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது ரயில் உணவுகளின் விலையும் வருகின்ற ஜூன் 1 முதல் உயர்த்தப்பட உள்ளது.
அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக கேஸ் சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்திருப்பதால், உணவு தயாரிக்க அதிக செலவு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
இதனை சமாளிக்கவே தற்போது விலை உயர்த்தப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதுதவிர ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு சேவையின் தரத்தை மேம்படுத்தவும் இந்த விலை உயர்வு உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் உணவுகளின் விலை உயர்வு குறித்த தெளிவான தகவலை பயணிகளுக்கு வழங்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் விலை உயர்வு பட்டியல் 2 மொழிகளில் ரயில் நிலையங்களில் வைக்கப்பட உள்ளது.
* புதிய விலை உயர்வுப் பட்டியலின் படி, ரூ.13-க்கு விற்பனையான வட இந்திய உணவான ‘வட பாவ்’ இனி ரூ.20-க்கு விற்பனையாக உள்ளது.
* ரூ.12-க்கு விற்பனையான சமோசா இனி ரூ.21 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
* பாவ் பாஜி, வெஜ் பீசாவின் விலை ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
* மசாலா தோசை ரூ.35 ஆகவும், பிளைன் தோசை ரூ.25 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
* சட்னி, சாம்பாருடன் கூடிய 2 இட்லியின் விலை ரூ.30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
* வெஜ் பஃப், ஜவ்வரிசி வடையின் விலை முன்பை விட ரூ.20 கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளது.
* கச்சோலி, தாபெலி உள்ளிட்ட உணவுகளின் விலையும் ரூ.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.