பழைய நகையை விற்க போறீங்களா? இனி இந்த 6 இலக்க எண் இல்லைனா கடைக்காரர் வாங்க மாட்டார்..!

திருட்டுத் தங்கம் விற்பனை செய்வதைத் தடுக்க மத்திய அரசு ஒரு புதிய அதிநவீனத் திட்டத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.
HUID
HUIDAI Image
Updated on

திருட்டுத் தங்கத்தை விற்பனை செய்வதைத் தடுக்கவும், நகைக் கடைகளில் முறைகேடுகளைக் குறைக்கவும் மத்திய அரசு ஒரு புதிய அதிநவீனத் திட்டத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.

அதாவது தங்க நகைகள் திருடப்பட்டு மீண்டும் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில், ஒவ்வொரு தங்க நகைக்கும் தனியாக வழங்கப்படும் ‘எச்.யு.ஐ.டி.’ எண்ணுடன், அந்த நகை ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு விட்டது என்பதையும் ஆன்லைன் பதிவில் குறிப்பிடும் புதிய முறையை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 2016-ல் ஒரு சவரன் தங்கம் ரூ.23,000-க்குள் தான் இருந்தது. அதன்பிறகு தங்கம் விலை ரூ.20,000 என்ற அளவிற்குக்கூடச் சரிந்தது. அப்படி விற்ற தங்கம், இன்று ஒரு கிராமே ரூ.14,220-க்கும், ஒரு சவரன் தங்கம் ₹1,13,760-க்கும் விற்பனையாகிறது.

திருட்டுத் தங்க நகைகள் மீண்டும் சந்தைக்குள் நுழைந்து விற்பனையாவதைத் தடுக்கும் நோக்கில், ஒரு புதிய தொழில்நுட்ப நடைமுறையைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தங்கத்தின் விலை உயர்வால், நகைகளைத் திருடி நகைக்கடைகள், அடகுக்கடைகள் மற்றும் பிளாக் மார்க்கெட்டில் (Black Market) விற்பனை செய்யும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்தச் சட்டவிரோத விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அரசு புதிய பாதுகாப்பு அம்சத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் தங்க நகைகளின் தரத்தை உறுதி செய்வதற்காக தற்போது ஒவ்வொரு ஹால்மார்க் (Hallmark) நகைக்கும் தனித்துவமான 6 இலக்க ‘எச்.யு.ஐ.டி.’ (Hallmark Unique Identification - HUID) எண் வழங்கப்படுகிறது. இந்த எண்ணை அடிப்படையாக கொண்டு, நகையின் விவரங்களை கண்காணிக்க முடியும். அதனை மேலும் விரிவாக்கம் செய்யும் திட்டப்படி, அந்த தங்க நகை விற்பனை செய்யப்பட்டதும், அந்த நகைகான ‘எச்.யு.ஐ.டி.’ எண் ‘விற்பனை ஆனது’ (Sold) என்று பதிவு செய்யப்படும்.

இதனால் அதே எண்ணை பயன்படுத்தி மற்றொரு நகையை விற்பனைக்கு கொண்டு வந்தால், அது ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட நகை என்பதை கம்ப்யூட்டர் சுட்டிக்காட்டும்.

HUID|தங்க நகை
HUID|தங்க நகை

இதன் மூலம் பழைய நகையை ஒருவர் விற்க வரும்போது, அது ஏற்கனவே விற்கப்பட்ட நகையா அல்லது முறைகேடாகப் பெறப்பட்டதா என்பதை நகைக்கடைக்காரர்கள் எளிதில் கண்டறிய முடியும்.

இதன் மூலம் திருட்டு அல்லது முறைகேடாக பெறப்பட்ட தங்க நகைகளை மீண்டும் விற்பனை செய்வதை தடுக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஒருவர் பழைய தங்க நகையை விற்பனைக்கு கொண்டு வந்தால் நகைக்கடைக்காரர் அதன் ‘எச்.யு.ஐ.டி.’ எண்ணை சரிபார்க்க வேண்டும். அந்த நகை ஏற்கனவே வேறு ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டதாக பதிவில் இருந்தால் அதன் மூலத்தை விசாரிக்க முடியும்.

இந்த முறையில் ஒவ்வொரு நகையும் விற்பனை செய்யப்பட்ட பிறகு அதன் ‘எச்.யு.ஐ.டி.’ எண் மீண்டும் பயன்படுத்தப்படுவதையும் தடுக்க முடியும். ஒரே ‘எச்.யு.ஐ.டி.’ எண் வேறு நகையில் பயன்படுத்தப்பட்டால், கணினி அமைப்பு அதை கண்டு பிடித்து எச்சரிக்கை செய்யும்.

இதையும் படியுங்கள்:
தங்க நகை காணாமல் போனால் இழப்பீடு கிடைக்குமா? இதோ முழு விவரம்..!
HUID

தற்போது நகைக்கடைக்காரர்கள் ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க நகையில் ‘எச்.யு.ஐ.டி.’ எண்ணையும், நகையின் எடையையும் குறிப்பிட வேண்டும்.

வாடிக்கையாளர்கள் ‘பிஐஎஸ் கேர்’ செயலி (BIS Care APP) மூலம் ‘எச்.யு.ஐ.டி.’ எண்ணை பதிவு செய்து தங்க நகையின் உண்மைத்தன்மையை சரிபார்க்க முடியும். பிஐஎஸ் கேர் (BIS Care) என்பது இந்திய தர நிர்ணயப் பணியகத்தின் (Bureau of Indian Standards - BIS) அதிகாரப்பூர்வ மொபைல் செயலியாகும். வாடிக்கையாளர்கள் BIS Care App செயலி மூலம் HUID எண்ணைப் பதிவிட்டு, நகையின் உண்மைத்தன்மையை வீட்டிலிருந்தபடியே சரிபார்க்க முடியும்.

இந்த திட்டத்தை கொண்டு வருவது தொடர்பாக மத்திய அரசு தீவிர ஆலோசனை செய்து வருகிறது. முதற்கட்டமாக நகர்புறங்களில் உள்ள நகைக்கடைகளில் இதை கட்டாயமாக்கவும், பின்னர் படிப்படியாக கிராமப்புறங்கள் மற்றும் அமைப்புசாரா நகை விற்பனை துறைக்கும் விரிவுபடுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்:
24K முதல் 9K வரை: உங்களுக்கு ஏற்ற தங்க நகை எது? தவறாமல் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்!
HUID

தங்க நகை திருட்டை கட்டுப்படுத்த இந்த முறை உதவும் என்றாலும், நகைக்கடைகளுக்கு கூடுதல் செலவு ஏற்படும் என்பதால், தொழில் துறையினரிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com