

தங்கத்தின் விலை விறுவிறுவென உயர்ந்துகொண்டே போகிறது.தொடர்ந்து 6 மாதங்களாக சரிவை நோக்கி சென்றுகொண்டிருந்த தங்கம் விலை கடந்த சில வாரங்களாக தாறுமாறாக ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.மற்ற நாடுகளில் தங்கம் ஒரு முதலீடாக இருக்கிறது. ஆனால் நமது நாட்டில் உணர்ச்சிகளோடு கலந்திருக்கிற ஒரு பொருளாக பார்க்கப்படுகிறது.
நம் நாட்டில் தங்கம் வெறும் உலோகம் மட்டும் கிடையாது. மாறாக, அது முதலீட்டு கருவியாகவும் உள்ளது. அதேபோல், திருமணம், விழாக்கள் மற்றும் பண்டிகைகளுக்கு வழங்கப்படும் பரிசுகளிலும் தங்கம் முக்கிய இடம் பிடித்திருக்கிறது. அந்த அளவிற்கு தங்கம் நம் நாட்டில் மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது.
தங்கத்தின் இந்த திடீர் உயர்வு நகைப்பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விறுவிறு விலை ஏற்றத்திற்கு உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. அதாவது, தங்கம் விலை உயர்வுக்கு அமெரிக்க டாலர் மதிப்பு வலுவிழப்பு, அமெரிக்க பொருளாதார மந்த நிலை, வேலைவாய்ப்பின்மையால் ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்துவதில் தாமதம் என பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
இந்த நிலையில் இன்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560-ம், கிராமுக்கு ரூ.70-ம் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,19,520-க்கும், ஒரு கிராம் ரூ.14,940-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 2-வது முறையாக தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பிற்பகலில் சவரனுக்கு ரூ.1,720 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,17,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.215 குறைந்து, ஒரு கிராம் 14,725-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,280 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளியை பொறுத்த வரையில் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.265-க்கும் ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை யாருமே கணிக்காத வகையில் ஏற்றத்தைக் கண்டுள்ளது.கடந்த ஆண்டு இதே தேதியில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.75,120-க்கு விற்பனையானது. இன்று இதன் விலை ரூ.1,17,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆகஸ்ட் 1ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 1,05,760-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் 20 நாட்களில் கிட்டத்தட்ட 15 ஆயிரம் ரூபாய் அதிகரித்திருக்கிறது. இந்த விறுவிறு விலை ஏற்றத்திற்கு உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.
கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை:
ஆகஸ்ட் 26: 1 கிராம் - ரூ.15,010 1 சவரன் ரூ.1,20,080
ஆகஸ்ட் 25: 1 கிராம் - ரூ.15,010 1 சவரன் ரூ.1,20,080
ஆகஸ்ட் 24: 1 கிராம் - ரூ.15,030 1 சவரன் ரூ.1,20,240
ஆகஸ்ட் 23: 1 கிராம் - ரூ.14,950 1 சவரன் ரூ.1,19,600
ஆகஸ்ட் 22: 1 கிராம் - ரூ.14,950 1 சவரன் ரூ.1,19,600
கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விலை:
ஆகஸ்ட் 26: 1 கிராம் - ரூ.265
ஆகஸ்ட் 25: 1 கிராம் - ரூ.265
ஆகஸ்ட் 24: 1 கிராம் - ரூ.275
ஆகஸ்ட் 23: 1 கிராம் - ரூ.270
ஆகஸ்ட் 22: 1 கிராம் - ரூ.270
இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிக தங்கம் உள்ளது மற்றும் எந்த மாநிலம் தங்க சேமிப்பில் முதலிடத்தில் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா? இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிக தங்கம் உள்ளது மற்றும் எந்த மாநிலம் தங்க சேமிப்பில் முதலிடத்தில் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா?
இந்திய புவியியல் ஆய்வு மையம் (GSI) படி, தங்கச் சுரங்கம் மற்றும் உற்பத்தியில் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது. அதுமட்டுமின்றி, நாட்டில் வெட்டியெடுக்கப்படும் மொத்த தங்கத்தில் 99 சதவீதம் கர்நாடகா சுரங்கங்களில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால், அதிக தங்க இருப்பு உள்ள மாநிலம் கர்நாடகா அல்ல. அது பீகார் ஆகும். இங்குள்ள ஜமுய் (Jamui) மாவட்டத்தில் சுமார் 222.8 மில்லியன் டன் தங்கத் தாது இருப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.பீகாரில் நாட்டின் தங்க இருப்பில் 44 சதவீதம் உள்ளது.