டாக்ஸிக் திரை விமர்சனம்: கேஜிஎஃப் 2-க்கு பின் யஷ் ஏமாற்றினாரா? முழு அலசல்!

500 கோடி பட்ஜெட்டில் வெளியான யஷ்ஷின் டாக்ஸிக் (Toxic) திரைப்படம் ரசிகர்களைக் கவர்ந்ததா அல்லது சோதித்ததா?
Toxic | டாக்ஸிக்
Toxic | டாக்ஸிக்
Updated on
ரேட்டிங்(1.5 / 5)

கேஜி எப் 2 (2026) படத்தின் மெகா ஹிட்டுக்குப்பின் ராக்கிங்க் ஸ்டார் யஷ் நடிப்பில் வெளிவந்திருக்கும் 500 கோடி ரூபாய் பட்ஜெட் படம் டாக்ஸிக் (Toxic).

என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தில் சத்யராஜின் மகளாக, பேபி ஆர்ட்டிஸ்ட்டாக நடித்து மாதவனுக்கு ஜோடியாக நளதமயந்தி படத்தில் நாயகியாக நடித்த கீது மோகன் தாஸ் இயக்குநராகக்களம் இறங்கி இருக்கும் முதல் தமிழ்ப்படம் இது.

ஸ்பாய்லர் அலெர்ட்

1947 கதை நடக்கும் காலகட்டம். கதைக்களம் கோவா.

இந்தியாவுக்கு சுதந்திரம் தந்த பின்னும் கோவா மட்டும் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. சின்ன வயதிலேயே நாயகனின் அம்மா, அப்பா இருவரும் கொலை செய்யப்படுகிறார்கள். நாயகனின் அக்கா தான் நாயகனை வளர்க்கிறார். நாயகன் ஒரு கேங்க்ஸ்டராக மாறுகிறார். ஒரு கட்டத்தில் நாயகனின் அக்காவைப் பாதுகாப்பதில் நாயகன் துடிப்புடன் இருக்கிறார். கொலை செய்யப்பட அம்மா, அப்பா, அக்கா மூவரையும் கொலை செய்தவர்களைப்பழி வாங்குவதுதான் நாயகனின் நோக்கமாக இருக்கிறது.

நாயகனுக்கு ஒரு மகன் இருக்கிறான். அம்மாவை சரியாக அப்பா பார்த்துக்கொள்ளவில்லை. அம்மாவின் சாவுக்கு அப்பாதான் காரணம் என நினைக்கும் சைக்கோ இவன். அப்பாவைப்பழி வாங்க நினைக்கிறான்.

இருவரும் எதிரிகளைப்பழி வாங்கினார்களா? படம் பார்க்க வந்த ஆடியன்சைப்பழி வாங்கினார்களா?என்பதைப் பார்ப்போம்.

Toxic | டாக்ஸிக்
Toxic | டாக்ஸிக்Chatgpt image

ஓப்பனிங்க் ஷாட்லயே ஒரு சர்க்கஸ் கூடாரத்தில் க்யாரா அத்வானி தன் 8 வயது மகனிடம் உன் அப்பா இப்போ உன்னைப் பார்க்க வரப்போறார். அவருக்கு ஒரு துரோகத்தை நான் செஞ்சுட்டேன். அவரை எதிர்கொள்ள எனக்கு சக்தி இல்லை. அப்படின்னு சொல்லிட்டு சர்க்கஸ் கூடாரத்துக்குத்தீ வைத்து இறந்து போகிறார்.

நாயகன் இப்போ அங்கே எண்ட்ரி ஆகி மகனைக்காரில் அழைத்துக்கொண்டு போய் ஒரு நீர் நிலைக்குள் தள்ளி விடுகிறார்.

என் அப்பா எவ்ளோ பெரிய கேடு கெட்டவன் தெரியுமா? என்று மகன் வாய்ஸ் ஓவரில் பிளாஸ்பேக் போகிறது. இதற்குப்பின் நடக்கும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை.

நாயகனாக யஷ் கே ஜி எப் படத்தில் பார்த்த அதே உடல் மொழி, அதே கெத்து, அதே ஸ்டைல் என வந்து போகிறார். புதிய முயற்சிகளோ  காட்சிகளோ, மெனக்கெடல்களோ இல்லை.

நாயகியாக க்யாரா அத்வானி கிளாமராக வருகிறார். சாகிறார்.

ஹூமா குரேஷி, தாரா சுல்தானா, ருக்மினி வசந்த் என 3 எக்ஸ்ட்ரா நாயகிகள். எல்லோருக்கும் ஒரே மாதிரி காஸ்ட்யூம்ஸ், ஒரே மாதிரி உடல் மொழி, ஒரே மாதிரி காட்சிகள். பார்க்கும் நமக்குத்தான் குழப்பம்.

படத்திலேயே ஆழமான கேரக்டர் டிசைன் என்றால் அது நயன்தாரா மட்டும் தான். நாயகனின் அக்காவாக வருகிறார். நல்ல நடிப்பு.

நாயகன் தம் அடிக்கிறார், சரக்கு அடிக்கிறார், நினைத்த பெண்களுடன் சந்தோஷமாக இருக்கிறார். இதையே திருப்பி திருப்பி எத்தனை டைம் காட்டுவீங்க? எனக்கேட்க வைக்கிறார் இயக்குநர்.

ஜே ஜே பெர்ரியின் ஆக்சன் சீக்வன்ஸ் ரசிக்க வைக்கும்படி இருந்தாலும் ஓவர் வயலன்ஸ் முகம் சுளிக்க வைக்கிறது.

விஷால் மிஸ்ரா, ரவி பஸ்ரூர், டனிஸ்க் பக்சி, பஹீம் அப்துல்லா, அர்ஸ்லான் நிஜாமி என ஐவர் கொண்ட குழு பாடல்களுக்கான இசை அமைக்க பின்னணி இசையை ரவி பஸ்ரூர் தனியாக அமைத்திருக்கிறார்.

பாடல்கள் ஒன்று கூடத்தேறவில்லை. பி ஜி எம் வேண்டுமென்றால் தெறிக்கிறது.

ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவு ஹாலிவுட் தரம்.

உஜ்வால் குல்கர்னி தான் எடிட்டிங்க்.படத்தின் ரன்னிங்க் டைம் 194 நிமிடங்கள். மிகவும் நீளம்.

கீது மோகன் தாஸ் கதை எழுத திரைக்கதையை நாயகன் யஷ் + இயக்குநர் கீது மோகன் தாஸ் இருவரும் இணைந்து எழுதி இருக்கிறார்கள்.

படத்தை இயக்கி இருப்பவர் கீது மோகன் தாஸ் (ஆனால் 60% படத்தை இயக்கியது யஷ் தான் என சொல்லப்படுகிறது).

படத்தின் தயாரிப்பாளரும் யஷ் தான்.

சபாஷ் டைரக்டர்

1. மொத்தப்படத்தில் க்ளைமாக்ஸ் மட்டும் சிலாகிக்கும்படி இருந்தது.

2. நாம் இருவர் நமக்கு இருவர் படத்தில் பிரபுதேவா தாடி இல்லாமல் வரும் கெட்டப்பில் வித்தியாசமாகத் தெரிந்தது போல இதிலும் யஷ் தாடி இல்லா கெட்டப்பில் யங்காகத் தெரிகிறார். நடிப்பிலும் வித்தியாசம் காட்டி இருக்கிறார்.

3. ஒளிப்பதிவாளர் தான் நாயகன். நல்லதொரு விஷூவல் ட்ரீட்.

Toxic | டாக்ஸிக்
Toxic | டாக்ஸிக்Chatgpt image

லாஜிக் மிஸ்டேக்ஸ்

1. படத்தில் மொத்தம் 384 பேர்கள் சாகிறார்கள். சும்மா வேடிக்கை பார்த்துட்டு இருக்கறவனை எல்லாம் சுடறாங்க. நல்ல வேளை ,ஆடியன்சை மட்டும் தான் கொல்லலை.

2. பின் பாதி முழுக்க தியேட்டரில் ஆடியன்சின் கமெண்ட்ஸ் தரும் காமெடிக்கலக்கல் ரகம். படம் டப்பா என்றாலும் அதற்கான ஆடியன்சின் கவுண்ட்டர் அட்டாக் டாப்பா இருந்தது.

3. நயன்தாரா மட்டும் 137 பேரை சுட்டுத்தள்ளுகிறார். ஆனால் அவர் மீது ஒரு கீறல் கூடப்படவில்லை. யஷ் 384 பேரை கொல்கிறார். இவருக்கும் எதுவும் ஆகவில்லை.

4. படத்தின் மெயின் கதைக்குப்போகவே ஒன்றரை மணி நேரம் எடுத்துக்கொள்கிறார்கள்.

5. நாயகன் ஒரே சமயத்தில் பாஸின் மகள் தாரா சுதாரியாவுடனும், சர்க்கஸ் கேர்ள் க்யாரா அத்வானியுடனும் நெருக்கமாகப் பழகுகிறார். இது எப்படி?

இதையும் படியுங்கள்:
நெட்பிளிக்ஸின் லேட்டஸ்ட் ஃபீல் குட் வெப் சீரிஸ் 'Musafir Cafe' விமர்சனம்!
Toxic | டாக்ஸிக்

6. பின் பாதியில் சைக்கோ மகன் கேரக்டர் கத்திக்கொண்டே இருப்பது கடுப்படிக்கிறது.

7. நாயகனாக அப்பா கேரக்டர் யஷ்சை சந்திக்கும் அனைத்துப் பெண்களும் அவரிடம் வீழ்வது எப்படி?

ரசித்த வசனங்கள்

1. ஆண்கள் எப்பவும் பெண்களைக் கழுத்துக்குக்கீழ் தான் பார்க்கறீங்க.

2. ரூட்டுப்போட்டவனை எப்போதும் சந்தேகிப்பதில்லை. ரூட்டோட (வேரோட) அவனை அழிப்பேன்.

3. நீ லிட்டர் கணக்கில் செண்ட் அடிச்சாலும் உன் உண்மையான வாசம் எனக்குத்தான் தெரியும்.

4. நான் ராணி மாதிரி வாழ்றேன், நீ சாணி மாதிரி வாழ்றே.

5. முகமூடியால் முகத்தில் இருக்கும் துக்கத்தை மறைக்க முடியும். ஆனா தலையில் எழுதுன துரதிர்ஷடத்தை?

6. என் ஆசை என்ன தெரியுமா? இந்த நகரத்தை நீதான் ஆளனும்.

7. உன் கடைசி ஆசை என்ன?

பெருசா ஒண்ணுமில்ல. உன் தம்பியைக்கொன்னு சாம்பலாக்கி அதை லைன் போட்டு இழுக்கனும்னு நினைக்கறேன்.

இதையும் படியுங்கள்:
மோகன்லால் மகள் விஸ்மயா அறிமுகமான 'துடக்கம்' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம்!
Toxic | டாக்ஸிக்

8. எல்லாப் பொண்ணுங்களும் அவன் காதல் தனக்குத்தான் என நினைச்சுக்கிட்டு இருந்தாங்க. ஆனா அவன் மனசு எந்த பந்தத்துக்கும் கட்டுப்படாத, கட்டுக்கடங்காத காட்டாறாப்பாஞ்சுக்கிட்டு இருந்தது.

9. அழகின் அம்சம் நீதான் பெண்ணே!ஆனா அந்த அழகையே ஆயுதம் ஆக்கினா நியாயமா கண்ணே?

10. அமைதியால எல்லாத்தையும் சாதிக்கலாம்னா பல நூற்றாண்டுகளாக யுத்தங்கள் எதற்காக நடக்குது?

11. ஒவ்வொரு முடிவுக்கும் தகுந்த விலை கொடுத்தே ஆகனும்.

12. இந்த வைரம் மண்ணில் இருப்பதை விட உன் கிரீடத்தில் இருந்தால் தான் நல்லாருக்கும்.

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 18+ வன்முறை, கெட்டவார்த்தைகள், கிளாமர் எல்லாம் உண்டு.

கல்கி கமெண்ட் - 2026 ம் ஆண்டின் மிக மோசமான படம். முதல் பாதியாவது பரவாயில்லை ரக மோசம். பின் பாதி எதற்கும் லாயக்கில்லாத மிக மோசம்.

இந்த டாக்ஸிக் விமர்சனம் படிப்பதன் மூலம் 194 நிமிட நீளம் கொண்ட 'டாக்ஸிக்' திரைப்படத்திற்கு உங்கள் நேரத்தையும் பணத்தையும் செலவழிக்கலாமா வேண்டாமா என்பதைத் துல்லியமாக முடிவெடுக்க முடியும்.

logo
Kalki Online
kalkionline.com