நகை வாங்குவோர் ஷாக்..! இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை..!

Gold price Hike
Gold price
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

தங்கம் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. இதற்கு வளைகுடா பகுதியில் நிலவும் போர் சூழல் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. பொதுவாக உலக நாடுகளிடையே போர் நடைபெற்றால் தங்கம் விலை தாறுமாறாக ஏறும். ஆனால், அதற்கு மாறாக தற்போது ஈரான் மீது நடத்தப்பட்டு வரும் போரால் தங்கம் விலை குறைந்து வந்தது. தற்போது டாலர் மதிப்பு உயரத் தொடங்கியிருப்பதால், முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்று, டாலரின் மீது முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் உலகளவில் தங்கம் விலை 20% அளவுக்கு குறைந்துள்ளது.மேலும், இந்தியாவில் எக்காரணம் கொண்டும் சவரன் விலை ஒரு லட்சத்திற்கு கீழ் குறைய வாய்ப்பில்லை எனவும் கணித்துள்ளனர்.

போர் காலங்களில் நிச்சயமற்ற முதலீடாக பார்க்கப்படுகிற பங்குச் சந்தையை தவிர்த்து, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடான தங்கத்தை தேர்ந்தெடுப்பர். ஆனால் தற்போது பங்குச்சந்தை குறைந்தபோதிலும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த போர்க்கால சூழலை சமாளிக்கும் விதமாக உலக நாடுகள் தங்களிடமிருக்கிற தங்கத்தை சேமிப்பதற்கு பதிலாக விற்கத் தொடங்கியிருக்கின்றன.

இதன் காரணமாக, கிட்டத்தட்ட 10 நாட்களில் சவரனுக்கு ரூ. 15 ஆயிரத்துக்கும் மேல் தங்கம் விலை குறைந்திருக்கிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை (மார்ச் 21) கிராமுக்கு ரூ.330 குறைந்து ரூ. 13,620-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில்,நேற்று காலை ரூ.670 குறைந்து ஒரு கிராம் ரூ.12,950-க்கு விற்பனை செய்யப்பட்டது. பிற்பகலில் மீண்டும் ரூ.280 குறைந்து ரூ.12,670க்கு விற்பனையாகி, மாலையில் மீண்டும் ரூ. 670 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 13,340க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று (மார்ச் 24) கிராமுக்கு ரூ.340 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.1,06,720-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.2,720 குறைந்து ஒரு சவரன் ரூ.1,04,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.இனியும் தங்கம் உயராது குறையும் என காத்திருந்த மக்களுக்கு அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது தங்கம் விலை காலையில் குறைந்து மாலையில் உயர்ந்துள்ளது.

தங்கம் விலை இன்று (மார்ச் 24) காலை சவரனுக்கு ரூ.2,720 குறைந்து ரூ.1,04,000-க்கும், கிராமுக்கு ரூ.340 குறைந்து ரூ.13,000-க்கும் விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சற்றுமுன் விலை திடீரென உயர்ந்துள்ளது.அதன்படி, ஒரு கிராமுக்கு ரூ.250 உயர்ந்து ரூ.13,250-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.2,000 உயர்ந்து ரூ.1,06,000-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.240-க்கும், ஒரு கிலோ ரூ.2,40,000-க்கும் விற்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்: பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்ய இனி 55 நிமிடங்கள் போதும்.!
Gold price Hike
logo
Kalki Online
kalkionline.com