தங்கத்தின் ஆட்டம் ஆரம்பம்..! காலையில் குறைவு...மாலையில் உயர்வு..!

gold investment
Gold Investment
Updated on

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபா​யின் மதிப்பு, சர்​வ​தேச பொருளா​தாரச் சூழல் ஆகிய​வற்​றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.2026 பிறந்ததில் இருந்து தங்கம் விலை பல உச்சங்களைத் தொட்டு வந்தது. ஒரு பவுன் ரூ.1,30,000 கடந்தது.

இந்தச் சூழலில் நேற்று தங்கம் விலை சற்று குறைந்து மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.580 குறைந்து ஒரு கிராம் ரூ.14,320-க்கும் சவரனுக்கு ரூ.4,640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,14,560-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 200 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,120-க்கும் சவரனுக்கு 1,600 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,960-க்கும் விற்பனையாகிறது.தற்போது ரூ.1,040 உயர்ந்து, ரூ.1,14,000-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமுக்கு ரூ.200 குறைந்த நிலையில், தற்போது ரூ.130 உயர்ந்து ரூ.14,250-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.280-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
சென்னையின் புதிய லேண்ட்மார்க்..! பிப்.16-ல் புதிய மேம்பாலத்தை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
gold investment
logo
Kalki Online
kalkionline.com