நகை வாங்குவோர் ஷாக்..!! காலையில் குறைந்து மாலையில் உயர்ந்த தங்கம் விலை..!

காலையில் வீழ்ச்சி, மாலையில் கிடுகிடு உயர்வு!: தங்கம் விலை ஏற்ற இறக்கத்தால் மக்கள் அதிர்ச்சி
தங்கம் விலை
Gold Price
Updated on

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது நகை வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியளித்து வந்த நிலையில், இன்று காலை குறைந்து சற்று ஆறுதலளித்தது. ஆனால் மாலையில் இறங்கிய வேகத்தில் ஏறி மக்களுக்கு டபுள் அதிர்ச்சி கொடுத்தது தங்கம்.ஆம் காலையில் குறைந்து மாலையில் ஏறியது தங்கம் விலை.

அமெரிக்க டாலர் மதிப்பு வலுவாக இருப்பதும், அமெரிக்காவின் பத்திர வருவாய் உயர்ந்து வருவதும் தங்கம் விலை ஏற்றம் காணாததற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. வரும் நாட்களில் தங்கம் விலை இன்னும் குறையும் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக தங்கம் விலை கண்ணை கட்டும் அளவிற்கு அதிகரித்து வருகிறது. இதற்கு அமெரிக்காவின் வேலைவாய்ப்பின்மை முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. பொதுவாக அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டால் தங்கம் விலை குறையும்.

ஆனால் வட்டி விகிதத்தை உயர்த்தும் அளவிற்கு அமெரிக்காவின் பொருளாதாரம் இல்லை. இதனால் ஆண்டுதோறும் செப்டம்பர் மாத கூட்டத்தில் எடுக்கப்படுகிற வட்டி விகித உயர்வு குறித்த முடிவானது இன்னும் சில மாதங்களுக்கு தள்ளிப் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதுவரை தங்கம் விலை ஏறுமுகத்திலேயே தான் இருக்குமா? என்றால், இப்போதைக்கு ஆம் என்பது தான் பதிலாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.தங்கத்தின் மீது உலக நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன. இது உலகளவிலான தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

Gold price
Gold price

நேற்று (ஆகஸ்ட் 13) ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து ரூ. 14,220-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ. 180 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,040-க்கு விற்பனை ஆனது.அதாவது நேற்று சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,13,760-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 1,440 குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 1,12,320-க்கு விற்பனை ஆனது.

வெள்ளி விலையானது ஆக்ஸ்ட் 11 அன்று கிராமுக்கு ரூ. 10 அதிகரித்தது ரூ. 260-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், அதன் பின் இன்று காலை தான் கிலோவுக்கு ரூ. 5,000 குறைந்து ஒரு கிலோ வெள்ளியானது ரூ. 2,55,000-க்கு விற்பனை ஆனது.

இந்த நிலையில் காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சவரனுக்கு ரூ.1280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை :

தங்கம் போல வெள்ளி விலையும் இன்று காலை குறைந்தது. கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

அதுவே மாலை நிலவரப்படி, வெள்ளி விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை:

  • ஆகஸ்ட் 13: 1 கிராம் - ரூ.14,220 1 சவரன் ரூ.1,13,760

  • ஆகஸ்ட் 12: 1 கிராம் - ரூ.14,200 1 சவரன் ரூ.1,13,600

  • ஆகஸ்ட் 11: 1 கிராம் - ரூ.14,150 1 சவரன் ரூ.1,13,200

  • ஆகஸ்ட் 10: 1 கிராம் - ரூ.13,950 1 சவரன் ரூ.1,11,600

  • ஆகஸ்ட் 9: 1 கிராம் - ரூ.13,965 1 சவரன் ரூ.1,11,720

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விலை:

  • ஆகஸ்ட் 13: 1 கிராம் - ரூ.260

  • ஆகஸ்ட் 12: 1 கிராம் - ரூ.260

  • ஆகஸ்ட் 11: 1 கிராம் - ரூ.260

  • ஆகஸ்ட் 10: 1 கிராம் - ரூ.250

  • ஆகஸ்ட் 9: 1 கிராம் - ரூ.250

இதையும் படியுங்கள்:
இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..! 10,000 வேலைவாய்ப்புகள்! சென்னையில் மாபெரும் ‘Mega Job Fair’..!!
தங்கம் விலை
logo
Kalki Online
kalkionline.com