இந்திய பெண்களுக்கு தங்கம் என்பது வெறும் நகை அல்ல.அது உணர்வு, பாதுகாப்பு, தியாகம், எதிர்கால நம்பிக்கை.
'தங்கம்'...என்ற நான்கு எழுத்து வார்த்தைக்கு மயங்காத பெண்களே இல்லை என்று சொல்லலாம். அந்தளவிற்கு தங்கத்தின் மீதான மோகம் இந்திய பெண்களுக்கு அதிகம் என்பதை மறுக்க இயலாது.அதாவது ஒரு பெண்ணின் குழந்தை பருவம் தொடங்கி திருமணம் வரை தங்கம் ஒரு நிலையான இடத்தை பிடித்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
தங்கம் ஒரு அழகான, மதிப்புமிக்க உலோகம் மட்டுமின்றி அது அலங்கார ஆடம்பர பொருளாகவும், செல்வத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. சில பெண்கள் தங்கத்தை அழகுக்காகவும், சிலர் திருமணத்திற்கு சேர்த்து வைப்பதற்காகவும், வேறு சிலர் முதலீடாகக் கருதியும் வாங்குகிறார்கள்.
இந்தியாவில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்தாலும் பெண்களின் தங்கம் வாங்கும் மோகம் குறைந்ததே இல்லை. மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் தான் தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக உள்ளதாக சர்வே கூறுகிறது.
பல தாய்மார்கள் தங்களின் ஆசைகளையும் தேவைகளையும் தியாகம் செய்து, சிறிது சிறிதாக சேமித்து மகள்களின் எதிர்காலத்திற்காக தங்கம் வாங்குகிறார்கள். எண்ணற்ற குடும்பங்களில், ஒரு பெண்ணுக்கே சொந்தமான ஒரே சேமிப்பு தங்கம்தான். மருத்துவ அவசரநிலைகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளில் குடும்பத்தை காப்பாற்றுவது அந்த தங்கமே.
அதனால்தான் தங்கம் மற்றும் வெள்ளிக்கு இறக்குமதி வரி உயர்த்துவது சாதாரண குடும்பங்களை ஆழமாக பாதிக்கிறது
கிட்டத்தட்ட 5 மாதங்களாக சொற்ப அளவில் மட்டுமே விலை மாற்றம் இருந்த நிலையில், இந்த மாதம் தொடங்கியதிலிருந்து விலையேற்றம் சூடு பிடித்தது. ஒரு சவரன் மீண்டும் ரூ. 1.20 லட்சத்தை தொட்டது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக மீண்டும் தங்கம் விலை குறைந்து வருகிறது. அதன்படி, 4 நாட்களில் ரூ. 3,040 குறைந்திருக்கிறது.
ஆபரண தங்கத்தின் விலை நேற்று (ஆகஸ்ட் 27) கிராமுக்கு ரூ. 285 குறைந்து ரூ. 14,725-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 65 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,650-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ. 2,280 குறைந்து ரூ. 1,17,800-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 600 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,17,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.600 குறைந்த நிலையில் மாலையில் திடீரென ரூ.1,200 உயர்ந்தது மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1200 உயர்ந்து, ரூ.1,19,120-க்கு விற்பனை.ஒரு கிராம் தங்கம் விலை ரூ.150 அதிகரித்து, ரூ.14,890-க்கு விற்பனை
கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை:
ஆகஸ்ட் 27: 1 கிராம் - ரூ.14,725 1 சவரன் ரூ.1,17,800
ஆகஸ்ட் 26: 1 கிராம் - ரூ.15,010 1 சவரன் ரூ.1,20,080
ஆகஸ்ட் 25: 1 கிராம் - ரூ.15,010 1 சவரன் ரூ.1,20,080
ஆகஸ்ட் 24: 1 கிராம் - ரூ.15,030 1 சவரன் ரூ.1,20,240
ஆகஸ்ட் 23: 1 கிராம் - ரூ.14,950 1 சவரன் ரூ.1,19,600
கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விலை:
ஆகஸ்ட் 27: 1 கிராம் - ரூ.265
ஆகஸ்ட் 26: 1 கிராம் - ரூ.265
ஆகஸ்ட் 25: 1 கிராம் - ரூ.265
ஆகஸ்ட் 24: 1 கிராம் - ரூ.275
ஆகஸ்ட் 23: 1 கிராம் - ரூ.270