குட் நியூஸ்..! இந்த 2 நாட்களில் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்..!

Thayumanavar Scheme
Ration items
Published on

தமிழ்நாட்டில் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே நேரடியாக சென்று விநியோகம் செய்யும் தாயுமானவர் திட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் அமலுக்கு வந்தது. இத்திட்டத்தின் படி 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் நேரடியாக வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்யப்படும்.

அக்டோபர் 20 ஆம் தேதி நாடு முழுக்க தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு வருகின்ற அக்டோபர் 5 மற்றும் 6 ஆகிய இரண்டு நாட்களில் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மூத்த குடிமக்கள் வரிசையில் நின்று ரேஷன் பொருட்களை வாங்குவது கடினம் என்பதால், அவர்களின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு தாயுமானவர் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தாலும், இப்படியொரு திட்டம் இருப்பதே மூத்த குடிமக்கள் பலருக்கு தெரியாது. இந்நிலையில் இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை மூத்த குடிமக்கள் மத்தியில் ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தீபாவளியை முன்னிட்டு இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் அக்டோபர் 5 மற்றும் 6 தேதிகளில் விநியோகிக்கப்பட உள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த இரண்டு நாட்களில் ரேஷன் பொருட்கள் வீட்டிற்கே வந்து விநியோகம் செய்யப்படும் என்பதை ரேஷன் கடையில் உள்ள பலகையில் எழுதி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள், இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
மூத்த குடிமக்களுக்கு வீடு தேடி வந்த ரேஷன் பொருட்கள்: சோதனை முயற்சி வெற்றி!
Thayumanavar Scheme

சென்னை, நீலகிரி, கரூர், திருநெல்வேலி, நாகப்பட்டினம், தென்காசி, திருச்சி மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ரேஷன் பொருட்கள விநியோகம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி அரிசி, சர்க்கரை, எண்ணெய் மற்றும் பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வீட்டிற்கே சென்று விநியோகிக்கப்படும். கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட தாயுமானவர் திட்டத்தில் இதுவரை தமிழ்நாடு முழுக்க பெரும்பாலான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை சனிக்கிழமையில் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் இம்முறை தீபாவளி பண்டிகை வருவதால், 05-10-2025 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 06-10-2025 (திங்கட்கிழமை) ஆகிய இரு நாட்களில் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன.

அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட இந்த 2 நாட்களில் ரேஷன் பொருட்களை வாங்க முடியாதவர்கள், ரேஷன் கடைகள் இயங்கும் நாட்களில் நேரடியாக வந்து வாங்கிக் கொள்ளலாம். ரேஷன் கடைக்கு வர முடியாதவர்கள் தங்கள் சார்பில் பிரதிநிதிகளை அனுப்பியும் வாங்கிக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
இப்படிச் செய்தால் உங்களுக்கு ஒரே நாளில் ரேஷன் கார்டு கிடைக்கும்..!
Thayumanavar Scheme

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com