
நாடு முழுக்க இன்றைய சூழலில் தாங்கள் விளைவிக்கும் விளைபொருட்களை விற்பனை செய்வதில் விவசாயிகள் கடுமையான சிரமங்களை சந்தித்து வருகின்றனர். பருவகால மாற்றம் மற்றும் நிச்சயமற்ற சந்தை விலை ஆகியவற்றால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் பெரும்பாலும் உற்பத்தி செலவைக் காட்டிலும் விவசாயிகளுக்கு குறைவான விலையை கிடைக்கிறது. இதனால் விவசாயிகளின் பல மாத உழைப்புக்கு பலனே இல்லாமல் போகிறது. ஆண்டுதோறும் ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ப வேளாண் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்து வருகிறது.
அவ்வகையில் நடப்பாண்டில் ஏற்கனவே நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை தமிழக அரசு உயர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடப்பாண்டு காரீப் பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையை அறிவித்த மத்திய அரசு, 2026-27 ஆண்டுக்கும் குறைந்தபட்ச ஆதார விலைக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கியுள்ளது.
நடப்பாண்டு காரீப் பருவத்திற்கான நைஜர் வித்துக்கள், ராகி மறறும் எள் உள்ளிட்ட பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி ஒரு குவிண்டால் நைஜர் வித்துக்களுக்கு ரூ.820, ராகி பயிருக்கு ரூ.596 மற்றும் எள் பயிருக்கு ரூ.579 ஆக குறைந்தபட்சம் ஆதார விலையை நிர்ணயம் செய்துள்ளது மத்திய அரசு.
சோளம், கம்பு, உளுந்து மற்றும் துவரை ஆகிய பயிர்களுக்கு அதன் உற்பத்தி செலவை காட்டிலும் முறையே 59%, 63%, 53% மற்றும் 59% வரை இலாபம் கிடைக்கிறது. இதேபோல் மற்ற பயிர்களுக்கும் 50 சதவீதத்திற்கும் மேல் லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் 2026-27 ஆண்டு ராபி பருவத்தில் விளையும் பயிர்களை, 297 லட்சம் மெட்ரிக் டன் அளவில் ரூ.84,263 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதார வழியை மட்டுமே நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு இந்த செய்தி மகிழ்ச்சி அளித்துள்ளது
இன்றைய காலகட்டத்தில் அதிக மழைப்பொழிவு, பருவநிலை மாற்றம் மற்றும் வறட்சியான் பயிர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. இதையும் மீறி ஒரு சில விவசாயிகள் பல மாத உழைப்புக்கு பின், விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு வந்தால், அங்கு அவர்கள் எதிர்பார்த்த விலை கிடைக்காதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கும்.
மத்திய, மாநில அரசுகள் வழங்கும் குறைந்தபட்ச ஆதார விலையை மட்டுமே உயிர் நாடியாக நம்பி இன்னமும் சில விவசாயிகள் விவசாயத்தை கைவிடாமல் செய்து வருகின்றனர்.
இதற்கிடையில் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி தரும்படி விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசின் அறிவிப்பையடுத்து அடுத்த ஆண்டாவது விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.