

தீபாவளியை முன்னிட்டு கூகுள் பே (Google Pay / G-Pay) தரப்பில் மத்திய அரசு ஒவ்வொருவருக்கும் ரூ.8,000 தருகிறது, கீழே இருக்கும் லிங்கைக் கிளிக் செய்து வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று உங்கள் வாட்ஸ் அப்புக்கும் ஒரு மெசேஜ் வந்திருக்கலாம். பிரதமர் மோடியின் பெயரைப் போட்டுப் பரவும் இந்த மெசேஜை நம்பிப் பலரும் லிங்கைத் திறந்து பார்க்கிறார்கள். சமூக வலைத்தளங்கள் மற்றும் வாட்ஸ்அப்பில் பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது, இதை நம்பி பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என மத்திய அரசின் பத்திரிகைத் தகவல் அலுவலகம் (PIB) தெளிவாகச் சொல்லிவிட்டது.
தீபாவளிக்கு ரூ.8,000 வழங்குவதாகச் சொல்லும் வாட்ஸ்அப் செய்தி போலியானது என்று PIB Fact Check உறுதிசெய்துள்ளது. இப்படி ஒரு நிதியுதவித் திட்டத்தை அரசு எங்கும் அறிவிக்கவில்லை.
பொதுமக்கள் இதுபோன்ற மோசடி அறிவிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசாரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
‘ஜிபே’யில், தீபாவளியையொட்டி பொதுமக்களுக்கு, 8,000 ரூபாய் போனஸ் வழங்குவதாக, சமூக வலைதளத்தில் போலியான இணையதள, ‘லிங்க்’ கடந்த சில நாட்களாக பரவி வருகிறது.
வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வரும் லிங்குகளை (Links) கிளிக் செய்யும்போது, அவை கூகுள் பே போன்ற போலி பக்கங்களுக்கு உங்களை அழைத்துச் செல்லும்.
‘ஜிபே தீபாவளி பரிசு ரூ. 8,000’ என்ற பெயரில் பரவும், அந்த, ‘லிங்’கை பயன்படுத்தி, ஏற்கனவே பலர் போனஸ் பெற்றுள்ளதாகவும், மற்றவர்களும் அதை பெற, உடனடியாக இணைப்பை திறக்கும்படியும், அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதன்படி, ‘லிங்கை’ திறந்தவுடன், பொதுமக்களை நம்ப வைக்கும் வகையில், அதன் முகப்பு பக்கத்தில், இதுவரை 11 ஆயிரத்திற்க்கும் அதிகமானோர், தீபாவளி பரிசாக 8,000 ரூபாய் பெற்றுள்ளனர்.
நீங்களும் உடனே பணத்தை பெற, ‘கிளிக்’ பொத்தானை அழுத்துங்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதை அழுத்தினால், அடுத்தகட்டமாக, ‘ஜிபே’ எண்ணுடன் இணைக்கப்பட்ட, நமது மொபைல் எண்ணை பதிவிடும்படி கூறப்படுகிறது.
தொடர்ந்து அந்த இணைப்பை, 15 நபர்களுக்கு பகிர வேண்டும். அவ்வாறு பகிர்ந்தால், உடனடியாக, 8,000 ரூபாய் பெறலாம் என, ‘லிங்க்’கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், சமூக வலைதளத்தில் பரவி வரும், போலி இணையதள, ‘லிங்க்’கை நம்பி, பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என, சைபர் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த லிங்கை நம்பி உங்கள் கூகுள் பே கணக்கு விவரங்கள், பின்கோடு (PIN) அல்லது ஒருமுறை கடவுச்சொல் (OTP), யூபிஐ (UPI PIN) உள்ளிட்ட தகவல்களை யாருக்கும் பகிர வேண்டாம். அப்படி பகிர்ந்தால் நிதி மோசடி ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூகுள் பே போனஸ் - பொதுமக்கள் கவனிக்க வேண்டியவை:
* வாட்ஸ்அப் அல்லது சமூக ஊடகங்களில் வரும் அறிமுகமில்லாத இணையதள முகவரிகளைத் (URLs) திறக்க வேண்டாம்.
* பணத்தைப் பெறுவதற்கு (Receive) ஒருபோதும் யுபிஐ பின்-ஐ உள்ளிட வேண்டிய அவசியம் இல்லை. பணம் அனுப்புவதற்கு மட்டுமே பின் நம்பர் தேவைப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
* கூகுள் பே போன்ற நிறுவனங்கள் ஏதேனும் சலுகைகள் வழங்கினால், அதை அவர்களின் அதிகாரப்பூர்வ செயலி (App) அல்லது இணையதளத்தில் மட்டுமே அறிவிப்பார்கள்.
* அதேபோல் மத்திய அரசு பெயரில் வரும் சந்தேகமான செய்திகளை PIB Fact Check-க்கு வாட்ஸ்அப் எண் 8799711259-க்கோ factcheck@pib.gov.in மின்னஞ்சலுக்கோ அனுப்பிச் சரிபார்த்துக்கொள்ளலாம்.
* உண்மைத்தன்மை அறியாமல் இதுபோன்ற லிங்குகளை மற்றவர்களுக்கு (Forward) அனுப்பிப் பரப்ப வேண்டாம்.
* இதுபோன்ற தீபாவளி போனஸ் என்ற பெயரில் வரும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை (Fake links) யாரும் கிளிக் செய்ய வேண்டாம். இந்த போலி இணைப்புகளை கிளிக் செய்தால், உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணம் திருடப்படக்கூடும்.
அதே நேரத்தில், நீங்கள் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களே ஏதேனும் ஆன்லைன் பண மோசடியில் சிக்கினால், உடனடியாகத் தங்கள் வங்கியைத் தொடர்புகொள்ளலாம் அல்லது 1930 என்ற சைபர் மோசடி உதவி எண்ணை அழைப்பதன் மூலமாகவோ அல்லது www.cybercrime.gov.in இணையதளத்தின் மூலமாகவோ புகாரளிக்க வேண்டும்.