
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை அரசு மீன்பண்ணை மீன்வள ஆய்வாளர் அலுவலத்தில் காலியாக உள்ள 8 மீன்வள உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியாளர் அறிவித்துள்ளார்.
மேட்டூர் அணை அரசு மீன்பண்ணை மீன்வள ஆய்வாளர் அலுவலத்தில் காலியாக உள்ள மீன்வள உதவியாளர் பணியிடங்களை இனசுழற்றி முறையில் தேர்வு செய்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடத்திற்கு தமிழில் எழுத, படிக்க மற்றும் பேச தெரிந்திருக்க விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் நீந்துதல், மீன்பிடித்தல், மீன்பிடி வலைபின்னுதல், பரிசல் ஓட்டுதல், வீச்சு வலை வீசுதல் மற்றும் பழுதடைந்த வலைகளை சரிசெய்தல் போன்ற கூடுதல் தகுதிகளும் பெற்றிருக்க வேண்டியது கட்டாயம். மேலும், மீன்வளத்துறையின் கீழ் உள்ள ஏதேனும் ஒரு மீனவர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றவருக்கு வேலையில் முன்னிரிமை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடங்கள் :
மீன்வள உதவியாளர் - 8
இட ஒதுக்கீடு முறை :
* இரண்டு பணியிடம் ஆதிதிராவிடர்(இருபாலர்) முன்னுரிமை அற்றவர்,
* ஒரு பணியிடம் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்(இருபாலர்) முன்னுரிமை அற்றவர் (இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை பெற தகுதியில்லாதர்),
* ஒரு பணியிடம் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (பெண்) முன்னுரிமை அற்றவர் (தமிழ் வழி கல்வி கற்றமைக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்),
* ஒரு பணியிடம் பிற்படுத்தப்பட்டோர் (பெண்) முன்னுரிமை அற்றவர் (தமிழ் வழி கல்வி கற்றமைக்கான சான்றிதழ்),
* ஒரு பணியிடம் பிற்படுத்தப்பட்டேர் (இருபாலர்) முன்னுரிமை பெற்றவர் (ஆதரவற்ற விதவை),
* ஒரு பணியிடம் பொதுப்போட்டி(பெண்) முன்னுரிமை அற்றவர் (தமிழ் வழி கல்வி கற்றமைக்கான சான்றிதழ்),
* ஒரு பணியிடம் பொதுப்போட்டி (இருபாலர்) முன்னுரிமை பெற்றவர் (கலப்பு திருமணம்)
என 8 காலிப்பணியிடங்களுக்கு இனசுழற்றி அடிப்படையில் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
தகுதியான பெண் விண்ணப்பத்தாரர்கள் இல்லாதபட்சத்தில் அதே இனசுழற்சி ஒதுக்கீட்டில் ஆண் விண்ணப்பத்தாரர் தேர்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுவர்.
வயது, சம்பள விவரம் :
சம்பளம் ரூ.15,900 - ரூ.58,500 நிலை 2 ஆகும்.
இந்தாண்டு ஜூலை 1-ம்தேதியுடன் (1.7.2025)ஆதிதிராவிடர் - 37 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 34 வயதுக்குள்ளும் மற்றும் இதர வகுப்பினர் - 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள் :
கல்வி சான்றிதழ் நகல்,
குடும்ப அட்டை நகல்,
ஆதார் அட்டை நகல்,
வயது நிருபண சான்றிதழ் நகல்,
ஜாதி சான்றிதழ் நகல்,
2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
இந்த ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பத்தினை மீன்வள மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர்(மண்டல்), 5/596 ஔவையார் தெரு, மாவட்ட ஆட்சியல் அலுவலம் எதிரில், தருமபுரி - 636705 (கூடுதல் விவரங்களுக்கு - தொலைபேசி எண்.04342-233923, 93848 24308, 79046 97121) என்ற அலுவல முகவரிக்கு வரும் 31-ம்தேதி (31.10.2025) பிற்பகல் 4 மணிக்குள் கிடைக்கத்தக்க வகையில் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
மேலும் மறக்காமல் விண்ணப்ப உறையின் மேல் ‘மேட்டூர் அணை அரசு மீன்பண்ணை மீன்வள உதவியார் பணியிடத்திற்கு விண்ணப்பித்தல்’ என எழுதி அனுப்பிட வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு https://salem.nic.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.