மின் கட்டணமே இல்லாத வாழ்க்கை! - மத்திய அரசின் இலவச சோலார் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

சோலார் பேனல்
சோலார் பேனல்
Published on

மக்கள் முறையாகப் பயன்படுத்தினால் பெரும் நன்மைகளைப் பெறக்கூடிய வகையில் பல அரசுத் திட்டங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் 'பி.எம். சூர்யா கர்' (PM Surya Ghar Muft Bijli Yojana) இலவச மின்சாரத் திட்டமாகும்.

மத்திய அரசின் பி.எம். சூர்யா கர் திட்டத்தின் மூலம் வீட்டின் மாடியில் சோலார் பேனல் மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரத்தைப் பெற முடியும். இத்திட்டத்திற்கு மத்திய அரசு சுமார் 78,000 ரூபாய் வரை மானியம் வழங்குகிறது. இதன் மூலம் மின் கட்டணத்தைச் சேமிப்பதுடன், உங்கள் பயன்பாட்டிற்குப் போக மீதமுள்ள உபரி மின்சாரத்தை அரசாங்கத்திடமே விற்று வருமானமும் ஈட்ட முடியும்.

ஆம். மத்திய அரசின் (PM Surya Ghar Muft Bijli Yojana) PM சூர்யா கார்/சூர்யா கர் திட்டத்தில் அதிகபட்சம் ₹78,000 வரை மானியம் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. ஆனால் எல்லாருக்கும் ₹78,000 கிடைக்காது. அவர்கள் தேர்வு செய்யும் சோலார் பேனல் திறன் (solar panel capacity) பொறுத்து மாறும்.₹78,000 (subsidy) மானியம் சோலார் சிஸ்டம் அளவு படி (Solar system size) கிடைக்கும். 1 kW போடும் போது ₹30,000, ,2 kW போட்டால் ₹60,000, 3 kW அல்லது அதற்கு மேல் என்றால். அதிகபட்சமாக ₹78,000 ரூபாய் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

யார் யார் விண்ணப்பிக்கலாம்?

இந்த திட்டத்திற்கு பொதுவாக தேவைப்படும் தகுதிகளாக (eligibility) அரசு நிர்ணயித்திருப்பது இவைகள்.

  1. சொந்தமாகத் தனி வீடு (Residential House) இருக்க வேண்டும்.

  2. விண்ணப்பதாரர் பெயரில் மின் இணைப்பு (EB Connection) இருக்க வேண்டும்.

  3. மொட்டை மாடியில் பேனல்கள் அமைக்கத் தேவையான இடவசதி இருக்க வேண்டும்.

  4. ஆதார் அட்டை மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு அவசியம்.

  5. விண்ணப்பதாரர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். (குறிப்பு: வணிகக் கட்டிடங்களுக்கு இம்மானியம் பொருந்தாது).

விண்ணப்பிக்கும் முறை (எளிய வழிமுறைகள்):

  • தேசிய சோலார் போர்ட்டலில் (National Rooftop Solar Portal) பதிவு செய்து, மின் இணைப்பு விவரங்களைச் சமர்ப்பிக்கவும்.

  • அரசு அங்கீகரித்த விற்பனையாளரைத் (Approved Vendor) தேர்வு செய்து, சோலார் பேனல்களைப் பொருத்தவும்.

  • நிறுவிய பின், அதிகாரிகளின் ஆய்வு ஒப்புதல் (Inspection Approval) பெற்றவுடன், மானியத் தொகை நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 3 முக்கிய விதிமுறைகள் உள்ளன

1. மாதம் 300 units வரை free electricity benefit இருக்கலாம்.

2.மின்கட்டண பில் (EB bill )குறையும்

3. 5 லிருந்து 7 வருடத்தில் முதலீடு மீட்பு (investment recover ) ஆகும்.

சோலார் பேனல் அளவு ( Solar capacity )அமைக்க தேவையான முழுத்தொகை (Solar system total cost ) மற்றும் நீங்கள் செலுத்த வேண்டிய சராசரி விலை (average price ) மற்றும் கிடைக்கும் மானியம் பற்றிய விபரங்கள் ..

சோலார் திறன் மொத்தத் தொகை அரசு மானியம்

1 kW ₹90,000 – ₹1,10,000 ₹30,000

2 kW ₹1.5 லட்சம் – ₹1.8 லட்சம் ₹60,000

3 kW ₹2 லட்சம் – ₹2.4 லட்சம் ₹78,000

தமிழ்நாட்டில் பொதுவாக சாதாரண வீட்டுக்கு போதுமான 3 kW சிஸ்டம் (system) தான் அதிகம் போடுகிறார்கள் . சில வங்கிகளை அணுகினால் இதற்கு கடன் வசதியும் (banks solar loan) தருகிறார்கள்.

கவனிக்க வேண்டியவை:

அரசு போர்டலில் விண்ணப்பிக்காமல் (Government portalல் apply )செய்யாமல் நேரடியாக விநியோகஸ்தருக்கு ஆர்டர் தருவது (direct vendorக்கு order).

அரசின் அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தரை (Approved vendor) தேர்வு செய்யாதது,(அரசு approved installer அவசியம்).

மின் இணைப்பு ரசீது, ஆதார் மற்றும் வங்கிக் கணக்கில் உள்ள பெயர்கள் ஒரே மாதிரியாக இருப்பதை உறுதி செய்யவும். தவறானதாக இருப்பது போன்றவற்றால் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம்.

சரியான அளவிலான சோலார் பேனலைத் தேர்வு செய்வதன் மூலம் உங்கள் மின் கட்டணத்தை முழுமையாகத் தவிர்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
உங்கள் வீட்டிற்குள் மறைந்திருக்கும் 'சைலண்ட் கில்லர்ஸ்': நாம் கவனிக்காத ஆரோக்கிய அச்சுறுத்தல்கள்!
சோலார் பேனல்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com