தவெக விழாவில் விஜய் பாடலுக்கு நடனமாடிய தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்..!!

vijay dance
vijay dancesource:dinamani
Updated on

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கூட்டங்கள் மற்றும் விழாக்களில் விஜய் நடித்த படங்களின் பாடல்களுக்கு நடனமாடிய பல சம்பவங்கள் சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி பலவித விமர்சனங்களைப் பெற்று வருகிறது.இந்நிலையில் மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரியைகள் சிலர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே பின்னையூரை சேர்ந்த கிருஷ்ணவேணி (58).சங்கரநாதர்குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வரும் நிலையில் ஒரத்தநாட்டில் சில நாட்களுக்கு முன்பு கொண்டாடப்பட்ட தவெக சார்பில் நடந்த மகளிர் தின விழாவில் கலந்து கொண்டு மேடையில் விஜயின் பாடலுக்கு நடனமாடியுள்ளார். இவர் நடனம் ஆடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இவர் நடனமாடிய வீடியோ கல்வி அதிகாரிகள் பார்வைக்கு வந்த நிலையில் பட்டுக்கோட்டை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதியழகன் தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். அரசு ஊழியராக இருந்து கொண்டு அரசியல் கட்சி விழாவில் பங்கேற்று நடனமாடியது விதிமீறல் என கருதி, மாவட்ட கல்வித்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

சில நாட்கள் முன் ராமநாதபுரத்தில் பள்ளி யூனிபார்ம் அணிந்த சிறுவர்கள் கட்சி கொடி மற்றும் துண்டுகளை எடுத்துக் கொண்டு

வீடு வீடாக நடந்த பிரசாரத்தில் ஈடுபட்டது செய்திகளில் வந்து அக்கட்சியின் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் மலர்விழி மீது தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
#JUST IN: விஜய்யின் பிரச்சார ரூட் மேப் தயார்... தூது சென்றாரா செங்கோட்டையன்.?
vijay dance

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com