மின்சார வாகன பிரியர்களுக்கு குட் & பேட் நியூஸ்: PM E-DRIVE திட்டம் நீட்டிப்பு..மானியத்தில் கைவைப்பு!

PM E-DRIVE மானியத் திட்டம் மேலும் ஒரு ஆண்டுக்குள் நீட்டிக்கப்பட்டு 2028-ம் ஆண்டு 31-ம்தேதி மார்ச் வரை செயல்பாட்டில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
PM E-DRIVE|மின்சார வாகனங்கள்
PM E-DRIVE|மின்சார வாகனங்கள்AI Image
Updated on

‘பிஎம் இ-டிரைவ்’ (PM E-DRIVE) என்று பிரதமரின் மின்சார வாகன புரட்சி திட்டத்தின் கீழ் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு (e2W) வழங்கப்படும் ஊக்கத்தொகையானது வரும் 2028-ம் ஆண்டு 31-ம்தேதி மார்ச் வரை செயல்பாட்டில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் அதேநேரம் ஊக்கத்தொகையானது பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி மின்சார இருசக்கர வாகனங்கள் வாங்க திட்டமிட்டுள்ளோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ள அதேநேரம் மானியம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்திற்கு பிரச்னை எழுந்துள்ளதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்ந்தன.

இதைத் தொடர்ந்து, நாட்டில் மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதற்காக, மத்திய அரசு ‘பிஎம் இ-டிரைவ்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தற்போது, ​​இத்திட்டத்தை மேலும் ஊக்குவிப்பதற்காக, அரசு ஒரு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது.

‘பிஎம் இ-டிரைவ்’ திட்டத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட மொத்த ஒதுக்கீட்டுத் தொகை ரூ.10,900 கோடியிலிருந்து ரூ.11,900 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, மின்சார இருசக்கர வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் ரூ.1,000 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை, பிரதமரின் இ-டிரைவ் (PM E-DRIVE) திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

அதேசமயம் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு வழங்கப்படும் மானியம் ஏறக்குறைய பாதியாக மத்திய அரசு குறைத்து அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக ஒரு மின்சார இருசக்கர வாகனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.5,000 வரை மானியம் பெற முடியும். அதாவது, ஒருகிலோ வாட் திறன் கொண்ட மின்வாகனங்களுக்கு வழங்கப்பட்ட ரூ.5000 மானியம் தற்போது ரூ.2500 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த அதிகபட்ச மானியம் 10,000 ரூபாயில் இருந்து ரூ.5000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சம் ரூ.1,15,000 உற்பத்தி விலை உடைய மின்சார இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே இந்த ஊக்கத்தொகை திட்டம் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோன்று, இந்த மானித் தொகையானது வாகனத்தின் தொழிற்சாலை விலையில் (ex-factory price) 15% அல்லது நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சத் தொகை - இதில் எது குறைவோ - அதற்கேற்ப வழங்கப்படும்.

ஆனால், அதிக மின்சார இருசக்கர வாகனங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நோக்கில் தற்போது இந்த மானியம் குறைக்கப்பட்டுள்ளது. நாட்டில் மின்சார வாகன உற்பத்தியை மேம்படுத்தும் மற்றும் வாடிக்கையாளர்களிடையே மின்சார வாகனத்தின் மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கில் ரூ.11,900 கோடி ஒதுக்கீட்டுடன் கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம்தேதி முதல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

PM E-DRIVE
PM E-DRIVEAI Image

மற்றொரு கவனிக்க வேண்டிய முக்கிய நிபந்தனையும் இந்த திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, வரும் 2028ம் ஆண்டு மார்ச் 31ந் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும், அனைத்து பிரிவுகளின் கீழ் இந்த திட்டத்தில் மானியம் பெறுவதற்கு கோரிக்கைகளை வரும் 2027ம் ஆண்டு டிசம்பர் 31ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்ற காலக்கெடுவையும் மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும், காலக்கெடுவுக்கு முன்பாகவே ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.1,000 கோடி நிதி தீர்ந்துவிட்டாலும், முன்கூட்டியே இந்த திட்டம் நிறைவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த மானியம் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

தற்போது இந்தியாவின் மொத்த இருசக்கர வாகன விற்பனையில், மின்சார வாகனங்கள் சுமார் 7.6 சதவீதமாக உள்ளன. இதை குறைந்தபட்சம் 9 முதல் 10 சதவீதமாக அதிகரிக்க மத்திய அரசு விரும்புகிறது.

அதேசமயம் இத்திட்டத்தின் கீழ் 45.8 லட்சம் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு ஆதரவளிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதுடன், இதற்காக ரூ. 2,767 கோடியை ஒதுக்கியுள்ளது.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில், 2024 அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வந்த ‘பிஎம் இ-டிரைவ்’ திட்டத்திற்கான காலக்கெடு, மார்ச் 31-லிருந்து ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
மின்சார வாகன பேட்டரி சார்ஜிங் சென்டர் அமைக்க 100% மானியம்..!
PM E-DRIVE|மின்சார வாகனங்கள்

அதன்பிறகு, மின்சார இருசக்கர வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் தற்போது இந்த திட்டத்திற்கான காலக்கெடு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் ஒரு மின்சார வாகனத்தை வாங்கும்போது, இந்த மானிய தொகை உங்கள் வாகனத்தின் மொத்த விலையில் இருந்து கழிக்கப்படும். அப்படி செய்யப்படவில்லை என்றால், நீங்கள் வாகனத்தை வாங்கும் இடத்தில் மானியம் குறித்து கேளுங்கள். அப்போது, அவர்கள் நிச்சயம் அந்த தொகையை கழிப்பார்கள்.

இதையும் படியுங்கள்:
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்..! மின்சார வாகனங்களின் விலை குறைகிறது..!
PM E-DRIVE|மின்சார வாகனங்கள்

மேலும், பிரதமரின் இ-டிரைவ் (PM E-DRIVE) பேனரின் முன் உங்களை நிற்க வைத்து, புகைப்படம் எடுத்து, அதை அந்த திட்டத்திற்கான மத்திய அரசின் இணையத்தில் பதிவேற்றிவிடுவார்கள். அப்படி செய்யும்போது, உங்கள் வாகனத்திற்கான மானியத்திற்கு ஒப்புதல் கிடைத்துவிடும். அதை செய்யத் தவறினால் பிரச்னைகள் ஏற்படலாம்.

logo
Kalki Online
kalkionline.com