சென்னை மெரினாவில் பிரம்மாண்ட உணவுத் திருவிழா… எப்போது தெரியுமா?

Food festival
Food festival
Published on

உணவு பிரியர்களுக்கு ஒரு குட் நியூஸ் வந்திருக்கிறது. அதாவது சென்னை மெரினா கடற்கரையில் பிரம்மாண்ட உணவுத் திருவிழா நடைபெறவுள்ளது.

முன்பெல்லாம் குறிப்பிட்ட இடத்தில் சில உணவுகள் மிகவும் புகழ்பெற்றதாக இருக்கும். அதேபோல் வெளிநாடு உணவுகளெல்லாம் இங்கு கிடைக்காது. ஆனால், சமூக வலைதளங்களின் பயன்பாடுகள் அதிகரிக்க ஆரம்பித்ததிலிருந்து, உலகம் முழுவதுமுள்ள மிக பிரபலமான உணவுகள், அந்தந்த நாட்டின் புகழ்பெற்ற உணவுகளின் செய்முறைகள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. இதன்மூலம் பலரும் ஸ்டால் வைக்க ஆரம்பித்தார்கள்.

வெளிநாடு உணவுகளெல்லாம் அவரவர்களின் தெருக்களிலேயே கிடைக்கின்றனர். இதனால், ஃபுட் வ்ளாக் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமானது. அதேபோல் ஃபுடிஷ் அதிகமாகினர்.

இப்போது எங்கு ஃபுட் ஸ்ட்ரீட் போட்டாலும், கூட்டம் அலைமோதுகிறது. அந்தவகையில் மெரினாவில் ஃபுட் ஃபெஸ்டிவல் நடத்தப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பார்த்திபனுக்காக 15 நாட்களில் கதை எழுதிய பிரபல இயக்குநர்!
Food festival

சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவு பொருட்களின் உணவுத் திருவிழா நடைபெறவுள்ளது. இந்தத் திருவிழா நாளை முதல் வரும் 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த உணவுத் திருவிழாவை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த விழாவில் உயர்தர உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகளுக்கு இணையான உணவுகள் விற்பனை செய்யப்படுமாம். அதேபோல் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு வாய்ந்த உணவுகள் உட்பட 100க்கும் மேற்பட்ட உணவுகள் விற்பனை செய்யப்படவுள்ளது. 65 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பெண்கள் உடனடியாக சமைத்து பரிமாறும் வகையில் 35 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் உடனடியாக உண்ணுவதற்கும் சமைப்பதற்கும் 67 வகையான உணவுகள் தயார் நிலை உணவுப் பொருட்களாக உள்ளன.

இதையும் படியுங்கள்:
ஜீ தமிழில் வருகிறது புதிய தொடர்… வெளியான ப்ரோமோ!
Food festival

அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு  மாவட்டங்களைச் சேர்ந்த சுய உதவி குழுக்கள் 45 வகையான கைவினை பொருட்கள் 3 அரங்குகளில் விற்பனை செய்யப்பட உள்ளன.

இது சென்னை வாசிகளை மிகவும் குஷி படுத்தியுள்ளது. இதுபோல ஒரு உணவு திருவிழா எப்போது நடக்கும் என்றே ஃபுட் வ்ளாகர்ஸும், இளைஞர்களும் காத்துக்கொண்டிருந்தனர். அதுவும் மெரினாவில் நடைபெறும் இந்த உணவு திருவிழா தமிழ்நாடு முழுவதும் பேசப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com