

கிரீஸ் நாட்டுக்கு அருகில் உள்ள அயோனியன் கடற்பகுதியில் மைக்கோனோஸ் தீவுக்கு அருகே சரக்குக் கப்பல் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. சரக்குக் கப்பல் தீப்பிடித்து எரியும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சுமார் 162.5 மீட்டர் நீளமுள்ள இந்த சரக்குக் கப்பல், பைரியஸ் மற்றும் சைரோஸ் ஆகிய நகரங்களுக்கு உள்நாட்டுப் பயணத்தில் சமோஸ் நோக்கி 166 லாரிகள் மற்றும் 29 கார்களை ஏற்றிக் கொண்டு கடலில் பயணித்துக் கொண்டிருந்தது.
'ரோ-ரோ கார்கோ பெர்ரி ப்ளூ கேரியர் 2’ என்ற சரக்குக் கப்பலில் தான் இந்த பெரும் தீ விபத்து ஏற்பட்டது. நடுக்கடலில் கப்பல் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொழுந்து விட்டு எரிந்த தீயில் இருந்து 29 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தால், அப்பகுதியில் பெரும் புகை சூழ்ந்தது.
கப்பலில் தீப்பிடித்ததை முன்னேரே சுதாரித்துக் கொண்டதால், பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. சரக்குக் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டவுடன் தகவலறிந்து மீட்புக் குழுவினர் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.
சரக்குக் கப்பலில் இருந்த பணியாளர்கள் மற்றும் பயணிகள் என மொத்தம் 29 பேரையும் மீட்டனர். மீட்புக் குழுவினர் துரிதமாக செயல்பட்டதால், எவ்வித உயிரிழப்பும் இன்றி கப்பலில் இருந்தவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். கிரீஸ் நாட்டின் கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர்கள் மூலம் இந்த மீட்பு நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டனர். நடுக்கடலில் கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கப்பலில் இருந்த 29 பேர் பத்திரமாக மீட்கப்பட்டாலும், 166 லாரிகள் மற்றும் 29 கார்கள் தீயில் எரிந்து நாசமாயின. நிலப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால் கூட ஓரளவு தப்பிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும். ஆனால் நடுக்கடலில் தீ விபத்து ஏற்படும் போது எப்படி தப்பிப்பது என கப்பலில் இருந்தவர்கள் பதறினர்.
தீ கொழுந்து விட்டு எரிவதால் கப்பலில் நீண்ட நேரம் இருக்க முடியாது; அதோடு கடலிலும் குதிக்க முடியாது. என்ன தான் நீச்சல் தெரிந்தாலும் நீண்ட நேரத்திற்கு கடலிலேயே இருப்பதும் சவாலான விஷயம்.
இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்ட உடனே ஒரு நொடி கூட தாமதிக்காமல் சரியான நேரத்திற்கு மீட்புக் குழுவினர் வந்ததே உண்மையிலேயே பாராட்டுக்குரிய விஷயம். நடுக்கடலில் தீப்பிடித்ததால், கப்பலில் இருந்தவர்களை ஆகாய வழியாக காப்பாற்ற ஹெலிகாப்டர்களைப் கடலோர காவல் படையினர் பயன்படுத்தினர்.
நடுக்கடலில் நடந்த இந்த தீ விபத்து எதிராபாராமல் நேர்ந்தது என்றாலும், கப்பலில் சில அவசர கால உபகரணங்கள் இருந்தால் சிறிது நேரத்திற்கு தாக்கு பிடிக்க முடியும்.
ஆனால் தீ கப்பல் முழுவதும் பரவியதால், பாதுகாப்பு உபகரணங்களைக் கூட எடுக்க முடிய்த சூழல் ஏற்பட்டது. இருப்பினும் ஒரு உயிர் கூட போகாத வகையில் மீட்புக் குழுவினர் பணியாற்றியது அனைவரையும் வியக்க வைத்தது.