"ஏஐ 100 கோடி மக்களை கொல்லும்" - பில்கேட்ஸ் பகீர் எச்சரிக்கை!

வேலை இழப்பு மட்டுமின்றி மனித குலத்துக்கே அச்சுறுத்தலாக மாறும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்.
பில்கேட்ஸ்
AI alert
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

இன்றைய நவீன காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் தனக்கான இடத்தைப் பிடித்து விட்டது. ஏஐ தொழில்நுட்பத்தின் வரவுக்குப் பிறகு எண்ணற்ற முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களின் வேலையை மிகக் குறைந்த நேரத்தில் செய்து, நேரத்தை மிச்சப்படுத்துகிறது. இருப்பினும் இதனால் எண்ணற்ற பணியாளர்கள் வேலையை இழந்துள்ளனர்.

கடுமையான கட்டுப்பாடுகள் இல்லையென்றால் அடுத்த சில ஆண்டுகளில் 100 கோடி மக்களை ஏஐ தொழில்நுட்பம் அழித்து விடும் என பிரபல தொழிலதிபர் பில்கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்

இதையும் படியுங்கள்:
​"வாழ்க்கை ஒரு வட்டம்!" – Sweet Uncle முதல் BJP வரை: முதல்வர் விஜய் பரப்புரையின் அதிரடி ஹைலைட்ஸ்!
பில்கேட்ஸ்

வருங்காலத்தில் ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானதாக மாறும் என வல்லுநர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் மனித குலத்திற்கு பேரழிவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்ற தகவல்களும் அவ்வப்போது வருகின்றன. குறிப்பாக ஏஐ துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களே மனிதர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏஐ ஆபத்து என கூறுகின்றனர்.

இருப்பினும் கூட பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்கள், ஏஐ மூலம் நிறவனத்தின் வளர்ச்சியைப் பெருக்க அதிகளவில் முதலீடு செய்து வருகின்றன. சமீபத்தில் எங்ளை விடவும் ஏஐ மிகவும் ஆபத்தானது என போலந்து நாட்டில் ஒரு சமூக அமைப்பு ரோபோக்களை வைத்து போராட்டம் நடத்தியது. இந்தப் போராட்டம் உலகளவில் கவனத்தைப் பெற்ற நிலையில், தற்போது மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸும் ஏஐ குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் கூறுகையில், “ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அபரிமிதமானதாக இருக்கிறது. இதனால் அளப்பரிய பலன்கள் கிடைத்தாலும் ஆபத்தும் உள்ளது. தவறானவர்கள் கையில் ஏஐ தொழில்நுட்பம் சிக்கினால், அது 100 கோடி மக்களை கொல்லும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக மாறும்.

மிகவும் சக்தி வாய்ந்த ஆபத்தான ஆயுதமாக ஏஐ மாறியுள்ளது. இதனால் வரும் ஆபத்துகளைத் தடுக்க ஏஐ நிறுவனங்களின் சுய கட்டுப்பாடு மட்டும் போதாது. ஒவ்வொரு நாட்டு அரசும் இதில் தலையிட்டு கடுமையான விதிமுறைகளை உருவாக்க வேண்டும்” என பில்கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்

AI
AI
இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்.! சரிந்தது தங்கம் விலை.! தங்கம் வாங்க துடிப்பவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.!
பில்கேட்ஸ்

ஏஐ டேட்டா சென்டர்களை அமைப்பதற்கும், அதனைத் தொடர்ந்து நிர்வகிப்பதற்கும் ஏராளமான தண்ணீர் தேவைப்படுகிறது. இதனால் வருங்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படக் கூடும். இதனால் சூழலியல் மாற்றங்கள் ஏற்பட்டு, அது சுற்றுச்சூழலை கடுமையாக பாதிக்கும். ஏற்கனவே பருவகால மாற்றத்தால், கடுமையான வெயில் சுட்டெரிக்கும் நிலையில், ஏஐ தொழில்நுட்பத்தால் இந்தப் பருவகால மாற்றம் தீவிரமடைய அதிக வாய்ப்புள்ளது.

இப்போதே உலக நாடுகள் தலையிட்டு, ஏஐ துறையில் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவது நல்லது. இல்லையேல் நிலைமை கைமீறி போய் விடும்.

உலகளவில் மிகவும் பிரபலமான தொழிலதிபரே ஏஐ குறித்து எச்சரிக்கை விடுத்திருப்பதால், மக்கள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது. தொடக்கத்தில் ஏஐ துறையில் நிபுணத்துவம் பெற்றால் வேலையைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என் பேச்சுகளே அதிகம் வந்தது. ஆனால் இப்போது ஏஐ மனிதர்களையே அழித்து விடும் என்ற எச்சரிக்கை தான் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதா அல்லது வேண்டாமா என்ற குழப்பம் பலருக்கு எழுந்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com