ஜிஎஸ்டி வரியில் வரப்போகும் அதிரடி மாற்றம்.. எந்தெந்த பொருட்களின் விலை குறையும் தெரியுமா?

ஜிஎஸ்டி வரி விகிதங்களில் மத்திய அரசு கொண்டு வர உள்ள மாற்றத்தால் எந்தெந்த பொருட்களின் விலை குறையும், எந்த பொருட்களின் விலை அதிகரிக்கும் என்று பார்க்கலாம்.
எஸ்.டி வரி வசூல்
எஸ்.டி வரி வசூல்
Published on

சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றிய பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றி பிரதமர் மோடி, ஜி.எஸ்.டி அமைப்பில் பெரிய சீர்திருத்தங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். ஜிஎஸ்டி வரிவிதிப்பில் மாற்றம் தேவை என்று நாட்டு மக்கள் வலியுறுத்தி வந்த நிலையில், பிரதமர் மோடி இதுபோல் பேசியிருப்பது அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பின்னர் வரிவிதிப்பு மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும், அப்படி வரி விதிப்பில் செய்யப்படும் மாற்றங்கள் தீபாவளிக்கு முன்பாக நடைமுறைப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது..

இந்தியாவில் தற்போது 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்குகளில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ள வரைவு அறிக்கையில் இனி 5 மற்றும் 18 சதவீத வரி என இரண்டு அடுக்கு வரிவிதிப்பு முறையும், விலை உயர்ந்த ஆடம்பர பொருட்களுக்கு 40 சதவீதம் வரியும் விதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது மக்கள் தினசரி பயன்படுத்தும் பொருட்கள், ஆடம்பரப் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கான ஜிஎஸ்டி கட்டமைப்பை மத்திய அரசு திருத்த வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்:
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் தீபாவளி பரிசு..!
எஸ்.டி வரி வசூல்

28% வரி வரம்பில் உள்ள 90% பொருட்களுக்கான வரியை 18% ஆகக் குறைக்கவும், 12% அடுக்கில் உள்ள பொருட்களை 5% அடுக்கிற்கு மாற்றப்படவும் முன்மொழியப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மத்திய அரசு தற்போதுள்ள 12% மற்றும் 28% ஜிஎஸ்டி வரி அடுக்குகளை நீக்கிவிட்டு, 5 மற்றும் 18 சதவீத வரி என இரண்டு அடுக்கு வரிவிதிப்பு முறையை கொண்டுவர உள்ளதால் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் 5 சதவீத வரியிலும், பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகள் 18 சதவீத வரிவிதிப்பிற்கும் மாறும் நிலையில் பொதுமக்கள் அதிகளவு நன்மைகளை பெற முடியும்.

விலை அதிகரிக்கும் பொருட்கள்

ஆடம்பர பொருட்கள், புகையிலை மற்றும் பான் மசாலா போன்ற ‘பாவப் பொருட்கள்’ போன்றவற்றிற்கு புதிய வரியை 40% ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சிறப்பு வரி விகிதம் புகையிலை உட்பட ஏழு பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும்.

விலை குறையும் பொருட்கள்

தற்போது 12% வரி அடுக்கில் உள்ள அன்றாட வீட்டு உபயோக பொருட்கள், காப்பீடு பிரிமீயம் தொகைகள் 5% ஜிஎஸ்டி வரி அடுக்கில் கொண்டு வரப்பட உள்ளது. குறிப்பாக காய்கறிகள், ஸ்டேஷ்னரி பொருட்கள், சாக்லேட், மாவு வகைகள், நொறுக்கு தீனி வகைகள், நட்ஸ், கோகோ பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுக்பொருட்கள், வெண்ணெய், நெய் உள்ளிட்ட உணவு பொருட்களுக்கும், காலணி, கண் கண்ணாடி, சைக்கிள் போன்ற பொருட்களுக்கும் 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது.

மருந்து பொருட்கள், உயிர்காக்கும் மருந்துகள், மருத்துவ உபகாரணங்களுக்கான ஜிஎஸ்டி வரியை 12% இருந்து 5% அல்லது வரி கிடையாது என அறிவிக்க மத்திய அரசு திட்டம்.

டிவி, பிரிட்ஜ், ஏசி, சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களுக்கான வரியை 28% இருந்து 18% ஆக குறைக்கவும் திட்டம்.

அதேபோல் ஆட்டோமொபைல் துறையை பொருத்தவரை 350 சிசி வகை பைக்குகளுக்கான வரியை 28% இருந்து 18% ஆகவும் 1200 சிசி கொண்ட சிறிய ரக கார்களுக்காக ஜிஎஸ்டி மற்றும் செஸ் வரியை 31% இருந்து 18% ஆக குறைக்க உள்ளதாகவும் தகவல்.

வைரங்கள் மற்றும் விலைமதிப்பற்ற அரிய கற்கள், ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பொருட்களுக்கு முன்பு இருந்த அதே விகிதத்தில் தொடர்ந்து வரி விதிக்கப்படும் என தெரிகிறது.

ஜிஎஸ்டி வரியில் மத்திய அரசு கொண்டுவர உள்ள அதிரடி மாற்றத்தில் விவசாயம், உரம் உள்ளிட்ட வேளாண் பொருட்கள், டெக்ஸ்டைல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஆட்டோமொபைல், கைவினைப்பொருட்கள், சுகாதாரம், காப்பீடு, கட்டுமானம், போக்குவரத்து போன்ற பொருளாதார துறைகளுக்கு பயனளிக்கு என நம்பப்படுகிறது.

பெட்ரோலியப் பொருட்கள் திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரம்பிற்கு வெளியே தொடர்ந்து இருக்கும்.

இதையும் படியுங்கள்:
ஜி.எஸ்.டி. வரி 5, 18 சதவீதம் என மாற்றம்: மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு... தமிழகத்திற்கு..?
எஸ்.டி வரி வசூல்

ஜிஎஸ்டி வரி விதிப்பில் கொண்டு வரப்படவுள்ள திருத்தம் காரணமாக பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல அடிப்படை மற்றும் அத்தியவசிய பொருட்களின் விலை வெகுவாக குறையும். ஆனால் அதேசமயம் அத்தியாவசியமற்ற ஆடம்பரப் பொருட்களின் விலை பல மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com