SIR: நாடு முழுவதும் மொத்தமாக 1.7 கோடி வாக்காளர்கள் நீக்கம்...முழு விவரம்..!!

SIR பணிகளுக்குப் பிறகு நாடு முழுவதும் மொத்தமாக 1.70 கோடி வாக்காளர்கள், அதாவது 7.93% (8% ) வாக்காளர்கள் குறைந்துள்ளனர்.
SIR form filling
SIR work, Election Commission
Published on

இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி நாட்டில் உள்ள ஒன்பது மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர்(SIR) என்ற சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியைத் தொடங்கியது.

இந்திய தேர்தல் ஆணையம் கடந்தாண்டு பீகாரில் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு எஸ்ஐஆர்(SIR) என்ற சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொண்டது. அதன்படி பீகாரில் மட்டும் SIR பணிக்கு பின்னர் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 7.89 கோடியில் இருந்து 7.43 கோடியாகக் குறைந்தது.

அதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாநிலங்களிலும் பல்வேறு கட்டங்களாக SIR பணியின் நடைபெற்றது. இதற்கிடையே தேர்தல் ஆணையம் மேற்கொண்ட SIR பணி காரணமாக, இதுவரை ஒன்பது மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் பட்டியல் 8% சுருங்கியுள்ளது. அதாவது SIR பணிகளுக்குப் பிறகு நாடு முழுவதும் மொத்தமாக 1.70 கோடி வாக்காளர்கள், அதாவது 7.93% (8% ) வாக்காளர்கள் குறைந்துள்ளனர்.

பெரிய மாநிலங்களில் குஜராத் தான் மிகப் பெரிய அளவில் சரிவைச் சந்தித்துள்ளது. இதில் மாநிலங்களுக்கு இடையே குஜராத்தில் அதிகபட்ச நீக்கங்களும் (13.4% அல்லது 68.12 லட்சம்) மற்றும் கேரளாவில் மிகக் குறைந்த நீக்கங்களும் (3.2% அல்லது 8.97 லட்சம்) பதிவாகியுள்ளன. ஒட்டுமொத்தமாக, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் கிட்டத்தட்ட 17% (52,364) என்ற மிக உயர்ந்த அளவில் வாக்காளர் நீக்கம் நடைபெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்:
SIR : சென்னையில் 24, 25-ம் தேதிகளில் சிறப்பு முகாம்: எந்த வாக்காளருக்கு எந்த படிவம்..!
SIR form filling

சத்தீஸ்கர், கோவா, கேரளா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய ஆறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இறுதி வாக்காளர் பட்டியல்கள் 21-ம்தேதி (சனிக்கிழமை) வெளியிடப்பட்டன.

* குஜராத்தில் 13.4% அல்லது 68.12 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5.08 கோடியில் இருந்து 4.40 கோடியாகக் குறைந்துள்ளது.

* மத்தியப் பிரதேசத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.74 கோடியாக இருந்த நிலையில் 34.35 லட்சம் (5.96%) வாக்காளர்கள் நீக்கப்பட்டு, தற்போது 5.39 கோடியாகச் சரிந்தது.

* ராஜஸ்தானில் முன்பு 5.46 கோடியாக இருந்த வாக்காளர் எண்ணிக்கை இப்போது 5.15 கோடியாகக் குறைந்துள்ளது. 31.36 லட்சம் வாக்காளர்கள், அதாவது 5.74% வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

* சத்தீஸ்கரில் முன்பு 2.12 கோடியாக இருந்த வாக்காளர் எண்ணிக்கையில், 24.99 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டு, அதாவது 11.77% வாக்காளர்கள் நீக்கப்பட்டு, தற்போது வாக்காளர்களின் எண்ணிக்கை 1.87 கோடியாகக் குறைந்துள்ளது.

* கேரளாவில் தான் மிக குறைந்த அளவில் நீக்கப்பட்டுள்ளனர். 8.97 லட்சம், அதாவது 3.22% வாக்காளர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளனர். அங்கு முன்பு 2.78 கோடியில் இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை தற்போது 2.69 கோடியாக குறைந்ததுள்ளது.

* அதேபோல் கோவாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து 1.27 லட்சம், அதாவது 10.76% பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

* யூனியன் பிரதேசங்களைப் பொறுத்தவரை, புதுச்சேரியில் 77,367 (7.5%) வாக்காளர்களும், லட்சத்தீவில் மிகக் குறைந்த அளவாக 206 (0.36%) வாக்காளர்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன.

* அதேபோல அந்தமான் நிகோபார் தீவுகளில் 16.87% பேர் நீக்கப்பட்டுள்ளனர். அங்கு 52,364 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த வாக்காளர் எண்ணிக்கை 3.10 லட்சத்திலிருந்து 2.58 லட்சமாகக் குறைந்துள்ளது.

இறுதிப் பட்டியல்களின்படி, நிகரக் குறைவான 1.7 கோடி அல்லது கிட்டத்தட்ட 8% வாக்காளர்களுக்குப் பிறகு, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 19.75 கோடியாக உள்ளது.

இறுதி வாக்காளர் பட்டியலானது புதிய வாக்காளர்களின் சேர்க்கை மற்றும் தகுதியற்ற வாக்காளர்களின் நீக்கம் ஆகிய இரண்டையும் கணக்கில் கொள்கிறது.

முன்னதாக கடந்தாண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பீகாரில் SIR பணி மேற்கொள்ளப்பட்டது. அந்த டேட்டாவையும் சேர்த்தால், ஒட்டுமொத்தமாக நாட்டில் 2.16 கோடி பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம், மேற்கு வங்கம் மற்றும் உத்தரப் பிரதேசத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்னும் வெளியாகாத நிலையில், தமிழகத்தில் இன்றும் (பிப்ரவரி 23-ம்தேதி), மேற்கு வங்கத்தில் பிப்ரவரி 28-ம்தேதியும், உத்தரப்பிரதேசத்தில் ஏப்ரல் 10-ம்தேதியில் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ம்தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். SIR பணிகளை முன்னிட்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அதில் நீக்கப்பட்டு இருந்தன. அதனை தொடர்ந்து பல கட்டங்களாக பேர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்ய காலஅவகாரம் வழங்கப்பட்ட நிலையில் பலரும் தங்கள் பெயர்களை சேர்க்க விண்ணப்பித்திருந்தனர்.

இதையும் படியுங்கள்:
SIR: இறுதி வாக்காளர் பட்டியல் எப்போது வெளியாகும்..? தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு..!
SIR form filling

அதன்படி கணக்கிடும் போது தமிழகத்தில் 5 கோடியே 65 லட்சம் என்ற அளவில் வாக்காளர்கள் எண்ணிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று காலை 10 மணிக்கு மேல் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com