
தமிழ்நாட்டில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியான பெண்களுக்கு மட்டும் உதவித்தொகையை வழங்க தமிழக அரசு தீவிரமாக உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள பல பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகையை திட்டம் இன்றளவும் கிடைக்கப்பெறவில்லை. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமலுக்கு வந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில், மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க பெண்கள் முன் வரலாம் என தமிழக அரசு தெரிவித்தது.
முகங்களில் விண்ணப்பித்த மகளிருக்கு அடுத்த 45 நாட்களுக்குள் விண்ணப்பம் குறித்த நிலை தெரியவரும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் விண்ணப்பித்த பெண்களுக்கு, தங்களுடைய விண்ணப்பம் ஏற்கப்பட்டதா இல்லையா என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் புதிதாக மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்த அவர்களின் விண்ணப்பங்களை ஆய்வு செய்ய கண்காணிப்பாளர்களை நியமித்துள்ளது தமிழக அரசு. இதன் மூலம் வெகு விரைவில் விண்ணப்பத்தின் நிலை குறுஞ்செய்தி மூலமாக வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் அவ்வப்போது தமிழகம் முழுக்க முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் அரசு சேவைகள் அனைத்தும் பொது மக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் வந்து குவிந்தன. இதனால் விண்ணப்பங்களை விரைந்து ஆய்வு செய்ய முடியாமல் அதிகாரிகள் திணறினர். அதோடு விண்ணப்பத்தின் நிலை என்னவெனத் தெரியாமல் இல்லத்தரசிகளும் குழம்பினர்.
இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களை ஆய்வு செய்ய குழு ஒன்றை நியமித்துள்ளது தமிழக அரசு. இந்தக் குழுவில் உள்ள கண்காணிப்பாளர்கள் மகளிர் உரிமைத் தொகையினை விரைந்து ஆய்வு செய்ய உள்ளனர். இதனால் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பத்தின் நிலை இன்னும் ஒரு சில வாரங்களில் தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழு கண்காணிப்பாளர்கள் முதலில் தாம்பரம் வண்டலூர் மற்றும் பல்லாவரம் உள்ளிட்ட வட்டங்களில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களை ஆய்வு செய்ய உள்ளனர்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்டு இன்றுடன் 45 நாட்கள் ஆகின்றது. இந்நிலையில் முகாம்களில் விண்ணப்பித்த இல்லத்தரசிகளுக்கு இனி படிப்படியாக விண்ணப்பத்தின் நிலை குறித்த விவரங்கள் குறுஞ்செய்தியாக தகவல் தெரிவிக்கப்பட உள்ளது. இதனால் அடுத்த மாதத்திலிருந்து மகளிர் உரிமைத் தொகையில் பயன்பெறும் இல்லத்தரசிகளின் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.