

நம் நாட்டில் சமீபகாலமாக சைபர் மோசடி சம்பவங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் வங்கிகளும் இதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுத்தும் சைபர் மோசடி சம்பவங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. சாதாரண மக்கள் மட்டுமல்லாமல், படித்த அதிகாரிகள் மற்றும் பெரிய நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் சைபர் மோசடிகளால் பாதிக்கப்படுகின்றனர். சைபர் மோசடி மூலம் மக்கள் கோடிக்கணக்கான ரூபாய் வரை இழக்கின்றனர் என்பது கவலை அளிக்கும் விஷயமாகும்.
இந்த நிலையில் தான் HDFC தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதாவது நீங்க HDFC வங்கி அல்லது வேறு எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும் சரி, நீங்கள் செய்யும் ஒரே ஒரு சிறிய தவறு அடுத்த சில நிமிடங்களில் உங்கள் வங்கிக்கணக்கில் இருக்கக்கூடிய மொத்த பணத்தையும் காலி செய்து விடும் என்று HDFC வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீங்க HDFC வங்கி அல்லது வேறு எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும் சரி, வாடிக்கையாளர்களுக்கு ஒரு அவசர எச்சரிக்கையை HDFC வங்கி விடுத்துள்ளது. நீங்கள் செய்யும் ஒரே ஒரு சிறிய தவறு அடுத்த சில நிமிடங்களில் உங்கள் வங்கிக்கணக்கில் இருக்கக்கூடிய மொத்த பணத்தையும் காலி செய்து விடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது சாதாரண ஆன்லைன் திருட்டு கிடையாது. மிகவும் ஆபத்தான APK Scam. APK Scam என்பது, மோசடி நபர்கள் போலியான APK (Android Package Kit) கோப்புகளை அனுப்பி, உங்கள் மொபைல் போனை கட்டுப்படுத்தி, வங்கி விவரங்கள், கடவுச்சொற்கள், OTP போன்ற தனிப்பட்ட தகவல்களைத் திருடி, உங்கள் பணத்தை கொள்ளையடிக்கும் ஒரு ஆன்லைன் மோசடியாகும். இவை பெரும்பாலும் KYC அப்டேட், பரிசு கூப்பன்கள், அல்லது பார்சல் டெலிவரி போன்ற அவசரத் தேவைகள் என்ற பெயரில் அனுப்பப்படும். இந்த APK Scam எப்படி நடக்கிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம் வாங்க..
உங்களுடைய போனுக்கு திடீரென்று ஒரு SMS அல்லது வாட்ஸ்அப் மெசேஜ் வரும். உங்களுடைய கரெண்ட் பில் கட்டவில்லை, உடனே இந்த ஆப்பை டவுன்லோட் பண்ணுங்க, இல்லையென்றால் உங்களுடைய வங்கி கணக்கு முடக்கப்படும், உடனே இந்த லிங்க்கை கிளிக் பண்ணுங்க என்று பயமுறுத்துவார்கள்.
உடனே நீங்களும் பதட்டத்தில் அந்த லிங்க்கை கிளிக் செய்தால் ஒரு APK file டவுன்லோட் ஆகும். பார்ப்பதற்கு ஒரிஜினல் பேங்க் ஆப் போலவே இருக்கும். ஆனால் உங்களுக்கு தெரியாது இப்படித்தான் ஹோக்கர்கள் உங்களுடைய செல்போனுக்குள் நுழைகிறார்கள் என்று. கூகுள் பிளே ஸ்டோரில் இல்லாத இந்த ஆப்பை நீங்கள் பதிவிறக்கம் செய்தால் அடுத்த நொடியே உங்களுடைய போன் ஹோக்கர்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடும். நீங்கள் அந்த ஆப்புக்கு பர்மிஷன் கொடுத்த உடன் உங்களுடைய போனில் உள்ள மெசேஜ், இமேஜ், போன் நம்பர்கள் உள்ளிட்ட அனைத்து முக்கியமான தகவல்கள் எல்லாமே அவர்களுக்கு தெரிந்து விடும்.
இதில் முக்கியான விஷயம் என்னவென்றும் வங்கியில் இருந்து உங்களுக்கு வரும் OTP அவர்களுக்கு நேரடியாக போய்விடும். நீங்கள் OTPஐ யாருக்கும் சொல்லவே வேண்டாம். அவர்களே பார்த்து விடுவதுடன் நீங்கள் கண்ணை மூடி திறப்பதற்குள் உங்கள் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை மற்றொரு கணக்கிற்கு மாற்றி விடுவார்கள். உங்களுடைய வங்கி கணக்கில் இருந்து பணம் காணாமல் போவதை காட்டும் மெசேஜ் கூட அவர்களால் டெலிட் செய்யும் அளவுக்கு அந்த ஆப் மிகவும் பவர்புல்லானது.
HDFC வங்கி தரப்பில் இருந்து சொல்வது என்னவென்றால், எங்கள் வங்கியில் இருந்து எந்த வாடிக்கையாளருக்கும் APK fileஐ அனுப்ப மாட்டோம். நீங்கள் எப்போதும் Google Play Store அல்லது Apple App Store போன்ற அதிகாரப்பூர்வ இடங்களில் இருந்து மட்டுமே ஆப்களை பதிவிறக்கம் செய்யுங்கள். லிங்க் மூலமாக வரும் எதையும் நம்ப வேண்டாம் என்று மிகவும் தெளிவாக HDFC வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கரண்ட் பில், டிராபிக் செல்லான் என்று சொல்லி வரும் எந்தவொரு போலியான APPSயும் நம்பி ஏமாற வேண்டாம். உங்களுக்கு தெரியாத நபர்களிடமிருந்து வரும் APK கோப்புகள் அல்லது இணைப்புகளைத் திறக்கவோ, பதிவிறக்கம் செய்யவோ வேண்டாம். உடனடியாக நீக்கி விடுங்கள் என்று HDFC வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
மேலும் இதுபோன்று ஏதாவது மோசடி உங்களுக்கு நடந்தால் cybercrime.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது 1930 என்ற எண்ணை அழைக்கலாம்.