அசத்தலான அறிவிப்பு... புகாரளிக்கும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.1,000 வெகுமதி.!!

டோல்கேட்டில் இதை செய்தால் பாஸ்டேக்கிற்கு ரூ.1,000 இலவசமாக ரீசார்ஜ் செய்யும் அசத்தான அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது.
Tollgate
Tollgateimg credit - dy365.in
Published on

நாட்டின் பொருளாதார முன்னேற்றம் என்பது போக்குவரத்தை சார்ந்தே அமைந்துள்ளது. அதிலும், குறிப்பாக சாலை போக்குவரத்தே பிரதானமாக உள்ளது. அதனை உணர்ந்தே மத்திய அரசு, விரைவான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்திட, சாலை மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இதற்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை உருவாக்கி மாநிலங்களை இணைக்கும் பிரதான சாலைகளை பல கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தி வருகிறது.

ஒரு நாட்டின் முக்கிய நகரங்களை இணைப்பவை தேசிய நெடுஞ்சாலைகள். இவை இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைத்து, சாலைப் போக்குவரத்து அமைப்பின் செயல்திறனை அதிகரிக்கின்றன. அந்த வகையில், டோல்கேட் நிர்வாகங்கள் கட்டணம் வசூலிப்பதில் காட்டும் ஆர்வத்தில் ஒரு பகுதியை கூட, பயணிகளுக்கான கழிவறையை கூட சரவர பராமரிக்காமல் இருப்பது, வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட துாரம் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் வசதிக்காக, சுங்கச்சாவடிகளில் ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு என தனித் தனி கழிப்பறை அமைத்து, சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என்பது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விதி. அந்த வகையில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து டோல்கேட்களிலும் கழிப்பறை வசதி உள்ளது.

இதையும் படியுங்கள்:
போலி சுங்கச்சாவடி அமைத்து 75 கோடி வசூல். ஸ்மார்ட் மோசடி கும்பல்!
Tollgate

இந்த கழிப்பறைகள் தூய்மை பாரதத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் அந்த கழிவறைகளை பயன்படுத்தும் போது அது தொடர்பான பிரச்சனைகள் ஏதாவது இருந்தால் புகார்களைப் பதிவிடலாம், அதற்கென வெகுமதிகளும் வழங்கப்படுகின்றன. எனினும், பல டோல்கேட்களில் உள்ள கழிவறைகள் முறையாக பராமரிப்பு இல்லாததால் கழிவறை துர்நாற்றம் வீசுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் பல இடங்களில் டோல்கேட்டுகளில் உள்ள கழிவறைகள் சுத்தமாக இருப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இதற்கு தீர்வு கொண்டுவரும் முனைப்பில் ஒரு முக்கிய அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது. அதாவது, தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள டோல்கேட்டுகளில் சுத்தமின்றி, பராமரிக்கப்படாமல் இருக்கும் கழிவறைகளை போட்டோ எடுத்து ‛ராஜ்மார்க் யாத்ரா' செயலியில் பதிவிட்டால் இலவசமாக ரூ.1,000 பாஸ்டேக் ரீசார்ஜ் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இப்படி புகார்கள் செல்கிறது என்று தெரிந்தால் கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படும் என்பதால் தான் இந்த அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது.

அசுத்தமன கழிவறையை போட்டோ எடுத்து பதிவிட்டு பாஸ்டேக்கிற்கு இலவசமாக ரூ.1000 ரீசார்ஜை பெற Rajmargyatra appஐ மட்டுமே பயன்படுத்த வேண்டும். அந்த செயலியை பயன்படுத்தி போட்டோ எடுத்து டோல்கேட் லோகேஷன், உங்களின் வாகன பதிவெண், உங்கள் பெயர் விவரங்களை பதிவிட்டு அனுப்ப வேண்டும். குறிப்பாக கழிவறையை போட்டோவில் எடுத்த நேரம், இடம் (Geo-tagged and Time-Stamped images ) உள்ளிட்டவை பதிவாகி இருக்க வேண்டியது கட்டாயம். அப்படி இல்லாத பட்சத்தில் அந்த புகார் நிராகரிப்படலாம்.

இப்படி அனுப்பி வைப்போருக்கு இலவசமாக ரூ.1000 பாஸ்டேக் ரீசார்ஜ் செய்யப்படும். இந்த ரூ.1,000 வாகன பதிவெண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள பாஸ்டேக்கிற்கு மட்டுமே வழங்கப்படும் என்பதால் இந்த தொகையை வேறு விஷயத்துக்கு பயன்படுத்த முடியாது.

அதேபோல் ஒரே நாளில் ஒரு இடத்தில் உள்ள டோல்கேட்டின் கழிவறை சுத்தமில்லை என ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டோ அனுப்பி புகார் செய்திருந்தால் அதில் முதலாவது அனுப்பிய நபருக்கே இலவசமாக ரூ.1,000 பாஸ்டேக் ரீசார்ஜ் செய்யப்படும். மற்றவர்களுக்கு கிடைக்காது. இந்த சலுகை வரும் 31-ம்தேதி(அக்டோபர் 31ம் தேதி) வரை மட்டுமே பொருந்தும்.

இதையும் படியுங்கள்:
கண்காணிக்கப்படும் தேசிய நெடுஞ்சாலை: 10 கிலோமீட்டர் இடைவெளியில் அதிநவீன கேமரா!
Tollgate

இந்த அறிவிப்பு நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள டோல்கேட் கழிவறைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க், ஹோட்டல்களில் கழிவறை போட்டோக்களுக்கு இது பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com