'West Bengal' பெயர் மாறுகிறது...!! அதன் புது பெயர் என்ன தெரியுமா..?

'West Bengal' பெயர் மாறுகிறதா? 'பஸ்சிம் பங்கா' பின்னணியில் இருக்கும் முக்கிய காரணம்!
west bengal
west bengal

மணிகண்டன், எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில் பயனுள்ள தகவல்களையும் புதிய சிந்தனைகளையும் கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்கி வருகிறார்.

Updated on: 

மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை (Paschim banga) என மாற்றம் செய்ய மாநில அரசு சட்ட மசோதா கொண்டு வர உள்ளது. இதனை மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் சமிக் பட்டாச்சாரியா உறுதி செய்துள்ளார்.

இதற்கு காரணம் என்னவென்றால் மேற்கு வங்கத்தின் பெயர் ஆங்கிலத்தில் West Bengal என வருவதால் அகர வரிசைப்படி கடைசி இடத்தில் இருப்பதாகவும், இதனால் அனைத்து விஷயங்களிலும் கடைசியாகவே மேற்கு வங்கத்தை அழைக்கிறார்கள் என்றும் புகார்கள் கிளம்பின. நமது மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்றும் அங்கு கோரிக்கைகள் கிளம்பின.

மற்றுமொரு காரணம், இதில் 'பச்சிம்' என்றால் வங்க மொழியில் மேற்கு என்று பொருள்படும். 'பங்கா' என்றால் வங்காளம் என்று பொருள்படும். தங்களது மாநிலத்தின் பெயரை வங்க மொழியிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக ஆளும் பாஜக அரசு இந்த பெயர் மாற்றத்துக்கு தயாராகி வருகிறது.

இந்தியாவில் சமீபகாலமாக மாநிலங்கள் மற்றும் முக்கிய நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வரும் வரலாற்று நிகழ்வுகள் ஒரு பார்வை :

புது தில்லி:

இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் மற்றும் முக்கிய நகரங்களின் பெயர்கள் அவற்றின் வரலாற்று அடையாளம், உள்ளூர் மொழி மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றன. ஆங்கிலேயர் காலத்து பெயர்களை மாற்றி, மண்ணின் மைந்தர்களின் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பெயர் மாற்றப்படும் மாநிலங்கள் :

அண்மையில், மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை 'பஸ்சிம் பங்கா' (Paschim Banga) என மாற்றுவதற்கான புதிய மசோதாவை அம்மாநில அரசு கொண்டு வரவுள்ளதாக அறிவித்துள்ளது. 1947 பிரிவினை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் இந்த பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, 2026-ஆம் ஆண்டில் கேரளா மாநிலத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக 'கேரளம்' (Keralam) என அதன் தாய்மொழியான மலையாள உச்சரிப்பிற்கு ஏற்ப மாற்றப்பட்டது.

keralam
keralam

இதற்கு முன் பெயர் மாற்றம் கண்ட முக்கிய மாநிலங்களின் பட்டியல்:

  • மெட்ராஸ் மாகாணம் --> தமிழ்நாடு (1969): தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு இணங்க 'தமிழ்நாடு' என பெயர் மாற்றப்பட்டது.

  • மைசூர் --> கர்நாடகா (1973): கன்னட மொழி பேசும் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு கர்நாடகா என மாறியது.

  • உத்தராஞ்சல் --> உத்தரகாண்ட் (2007): அம்மாநில மக்களின் பாரம்பரிய போராட்டப் பெயரான உத்தரகாண்ட் மீண்டும் சூட்டப்பட்டது.

  • ஒரிசா --> ஒடிசா (2011): ஒடியா மொழி உச்சரிப்பிற்கு ஏற்ப இந்த மாற்றம் செய்யப்பட்டது.

மாநிலங்கள் மட்டுமின்றி, இந்தியாவின் பல முன்னணி வணிக மற்றும் வரலாற்று நகரங்களின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன:

* பம்பாய் --> மும்பை (1995): உள்ளூர் தெய்வமான மும்பாதேவியின் நினைவாக மாற்றப்பட்டது.

* மெட்ராஸ் --> சென்னை (1996): ஆங்கிலேயர் காலத்து மெட்ராஸ் என்ற பெயர் மாற்றப்பட்டு 'சென்னை' என உருவெடுத்தது.

* கல்கத்தா --> கொல்கத்தா (2001): வங்காளி மொழி உச்சரிப்பிற்கு இணங்க மாற்றப்பட்டது.

* பெங்களூர் --> பெங்களூரு (2014): கன்னட பாரம்பரிய உச்சரிப்பை மீட்டெடுக்கும் வகையில் மாற்றப்பட்டது.

* குர்கான் --> குரு கிராம் (2016): மகாபாரத குரு துரோணாச்சாரியாரின் நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது.

* அலகாபாத் --> பிரயாக்ராஜ் (2018): அதன் பழங்கால வேதகால அடையாளத்தை மீட்டெடுக்கும் பொருட்டு மாற்றப்பட்டது.

* அவுரங்காபாத் --> சத்ரபதி சம்பாஜி நகர் (2023): சத்ரபதி சிவாஜி மகாராஜின் மகனான சம்பாஜியின் நினைவாக மாற்றப்பட்டது.

* போர்ட் பிளேயர் --> ஸ்ரீ விஜய புரம் (2024): அந்தமான் தலைநகரின் பெயர் சோழப் பேரரசின் கடல்சார் வரலாற்றை கொண்டாடும் வகையில் மாற்றப்பட்டது.

* அகமதுநகர் --> அகில்யா நகர் (2025): வரலாற்றுச் சிறப்புமிக்க ராணி அகில்யாபாய் ஹோல்கரின் நினைவாக மாற்றப்பட்டது.

இந்த பெயர் மாற்றங்கள் அனைத்தும் அந்தந்த பகுதிகளின் கலாச்சார சுயமரியாதையையும், காலனித்துவ ஆதிக்கத்தின் அடையாளங்களை அகற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
நவம்பர் 1-க்குள் இதை செய்யாவிட்டால் உங்க கடைக்கு ஆபத்து - நீதிமன்றம் எச்சரிக்கை!
west bengal