அன்புள்ள வாக்காளர் பெருமக்களே உங்கள் பொன்னான வாக்கை செலுத்தும் முன்...

Election
Election

மின்னணு வாக்கு இயந்திரம் ஒரு பார்வை: 

ஆரம்ப காலகட்டத்தில் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையைத்தான் பின்பற்றினார்கள். பின்னர் இப்போது வரும் சர்ச்சைகள்போல அன்றைக்கும் கள்ள ஓட்டு என்று பல குளறுபடிகள் எழுந்தன. அதன் பின்தான் இந்திய தேர்தல் ஆணையத்தால் ‘மின்னணு வாக்கு இயந்திரம்’ நடைமுறைக்கு வந்தது. முதன்முதலில் கேரளாவில் உள்ள பரவூர் சட்டமன்ற தொகுதியில் குறைந்த எண்ணிக்கையிலான வாக்குச்சாவடிகளில் 1982யில்  பயன்படுத்தப்பட்டன. பின்னர் இதற்கு  என்று சட்டம் வகுக்கப்பட்டு படிப்படியாக இந்த மின்னணு முறை நாடெங்கும் விரிவுபடுத்தப்பட்டது.

ஐஐடி பாம்பே இல்  பேராசிரியர்களான ஏ.ஜி. ராவ் மற்றும் ரவி பூவையா தலைமையிலான குழுவால் இந்த மின்னணு வாக்கு இயந்திரம்  வடிவமைக்கப்பட்டது. ஒரு வாக்கு இயந்திரம் ஆனது இரண்டு சாதனங்கள் கொண்டது. ஒரு control unit மற்றும் ஒரு கேபிள் மூலம் இணைக்கப்பட்ட கட்சியின் சின்னம் பொறிக்கப்பட்ட
வாக்குப்பதிவு  இயந்திரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரம்  சின்னம் பொறிக்கப்பட்ட பொத்தான்களை கொண்டுள்ளது. மக்கள்  செலுத்தும் ஒவ்வொரு ஓட்டும் இந்த control unitஇல் சேமித்து வைக்கப்படும். முக்கியமாக இந்த control unit  வடிவமைக்கும் நேரத்தில் எப்படி வேலை செய்ய வேண்டும் என்று ப்ரோகிராம் செய்யப்பட்டுவிடும். ஆகையால், யாராலும் இந்த கருவியில் மாற்றம் செய்ய இயலாது. மேலும், ஒரு வாக்காளரின் ஒரு வாக்கை மட்டும் இது சேமிக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நாளுக்கு முன், ஒவ்வொரு அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினர், வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் வாக்கு செலுத்த அனுமதிக்கப்படுவர். இந்த மாதிரி சோதனை ஓட்டத்தின் முடிவில், வாக்குகள் எண்ணப்பட்டு, சரிபார்க்கப்படும். அதாவது இயந்திரத்தில் எந்த வித முறைகேடும் செய்யவில்லை என்பதை உறுதிசெய்து, அது நம்பகத்தன்மையுடன்தான் இயங்குகிறது என்பதையும், ஒவ்வொரு இயந்திரத்திலும் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட எந்த ஒரு மறைவான வாக்குகள் இல்லை என்பதையும் நிரூபிக்கப்பட்ட பின்புதான் இயந்திரங்கள் வாக்குப்பதிவு நடக்கும் இடங்களுக்கு அனுப்பப்படும்.

இதையும் படியுங்கள்:
3-ஆம் உலகப்போரைத் தடுக்கும் திறன் மோடிக்குதான் உள்ளது – அண்ணாமலை!
Election

தேர்தல் நாளில், control unit  வாக்குச்சாவடி அதிகாரியால் இயக்கப்படுகிறது, அதே சமயம் வாக்குப்பதிவு இயந்திரம் வாக்காளர்களுக்கு ஒதுக்கப்படும். ஒரு புதிய வாக்கை ஏற்றுக்கொள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தை  மின்னணு முறையில் செயல்படுத்துவதற்கு முன், அங்கிருக்கும் அதிகாரி வாக்காளரின் அடையாளத்தை உறுதிப்படுத்துவார். பின்னர் வாக்காளர் வாக்களித்தவுடன், வாக்குப்பதிவு இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்று நமக்கு தெரியும். பின்னர் அது இயந்திரத்தின் நினைவகத்தில் பதிவு செய்யப்படும். வாக்குப்பதிவுக்குப் பிறகு, control unit இல் வாக்குச்சாவடி அதிகாரி முன்  "close" என்று வருகிறதா என்று பார்க்கப்படும். இது தான் தொடர்ச்சியாக ஒவ்வொரு வாக்கின் பின் பார்க்கப்படும் நடைமுறை. இதனால் ஒரு வாக்காளர் ஒரே நொடியில் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கு செலுத்தும் செயல் முற்றிலும் தடுக்கப்படுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com