

தட்கல் டிக்கெட் அடிக்கடி ஏன் தோல்வியடைகிறது?
இந்தியாவில் நீண்ட நேர பயண பயன்பாட்டிற்கு ரயில் பெரும்பாலான மக்களின் தேர்வாக உள்ளது. வழக்கமான நாட்களில் ரயிலில் முன்பதிவு, சில மாதங்களுக்கு முன்னரே கூட முடிந்து விடுகிறது. இதற்காக முன்கூட்டியே திட்டமிடாதவர்களுக்கு வரப்பிரசாதமாக தட்கல் (Tatkal) முன்பதிவு முறையை இந்திய ரயில்வே நீண்ட காலமாக வைத்திருக்கிறது. ஆனால் , இந்த தட்கல் டிக்கெட் புக்கிங் முறை கூட பலமுறை தோல்வி அடைந்து விடுகிறது.
தட்கல் டிக்கெட் தோல்வி அடைய பல முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. அதில் மிகவும் முதன்மையானது , ரயில்வே நிர்வாகம் தட்கல் டிக்கெட்டை திறந்த உடனேயே கோடிக்கணக்கான மக்கள் முன்பதிவு செய்ய, அந்த நேரத்தில் முயற்சி செய்வதால், IRCTC சர்வர் டிராபிக் ஜாமால் பாதிக்கப்படுகிறது. முதல்நாள் காலை 10 மணிக்கு தட்கல் முன்பதிவு தொடங்கினால் காலை 10:04 மணிக்கெல்லாம் டிக்கெட்டுகள் காலியாகிவிடுகின்றன.
ஒவ்வொரு நாளும் IRCTC-யில் 1.3 கோடிக்கும் அதிகமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. சில முக்கிய வழித்தடங்களில் உள்ள தட்கல் இருக்கைகள், முன்பதிவு தொடங்கிய 90 வினாடிகளுக்குள் மொத்தமாக விற்று விடுகின்றன. இந்த நேரங்களில் உள்நுழைவு கூட சில நிமிடங்கள் எடுக்க , அதற்குள் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை . இது மட்டுமல்லாமல் இண்டர்நெட் வேகம் குறைவு , பேமெண்ட் கேட்வே தாமதம் , OTP வர ஆகும் தாமதம் , வங்கி சர்வர் வேகம் குறைவு , ஆகியவை தட்கல் புக்கிங் தோல்வியடைய காரணமாகிறது.
தட்கல் டிக்கெட்களை வெற்றிகரமாக புக்கிங் செய்ய இந்த ட்ரிக்களை முயற்சி செய்யுங்கள்!
முதல் நாளிலே IRCTC தளத்தில் பயணிகளின் பெயர் , பாலினம் , வயது, பெர்த் முன்னுரிமை உள்ளிட்ட தகவல்களை மாஸ்டர் லிஸ்ட்டில் (Master List) சேமித்து வைக்கவும்.
புக்கிங் செய்யும் நேரத்தில் போன் கால் எதுவும் வந்தால் உடனடியாக கட் செய்து விடவும். போன் கால் இண்டர்நெட் வேகத்தை குறைப்பதுடன் , பேமெண்ட் செய்யும் நேரத்தில் இண்டர்நெட்டை நிறுத்தும் வாய்ப்பினை ஏற்படுத்தலாம்.
தட்கல் புக்கிங் காலை 10:00 மணிக்கு திறப்பதாக இருந்தால் , காலை 9.00 மணிக்குள் IRCTC தளத்தில் லாகின் செய்யவும். அந்த நேரத்திற்கு முன்னர் போனில் உள்ள மற்ற பிரவுசர்களை மூடி விடவும்.
AC கிளாஸ் டிக்கெட்டுகள் காலை 10 மணிக்கும் AC அல்லாத பிற கிளாஸ் டிக்கெட்டுகள் காலை 11 மணிக்கு கிடைக்கும்.
லாகின் செய்த பின்னர் செல்லும் ஊர் , ஏறும் இடம் , இறங்கும் இடம் ஆகியவற்றில் ரயில்வே ஸ்டேஷன் பெயர்களை முன் கூட்டியே சரி பார்த்து ஒரு காகிதத்தில் எழுதி வைத்துக் கொள்ளவும்.
கூகுள் பே , பேடிஎம் , போன் பே போன்ற தளங்கள் மூலம் டிக்கெட்டுக்கு பணப் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். ஆனால் , இவற்றை விட வேகமான வழி, புக்கிங் செய்ய IRCTC iMudra vallet ஐ பயன்படுத்தி டிக்கெட் புக்கிங் செய்வது தான்.
IRCTC பாஸ்வேர்ட்களை ஒரு பேப்பரில் எழுதி கையில் வைத்துக் கொள்ளுங்கள்.
அனைத்தையும் தயாராக வைத்துக் கொண்டு , இண்டர்நெட் வேகமாக இடத்தில் இருந்து புக்கிங் செய்யுங்கள். காத்திருப்போர் பட்டியலை தவிர்க்க 'Consider for Auto Upgradation' மற்றும் 'Book only if confirm berths are allotted' போன்ற விருப்பங்களை தேர்ந்தெடுக்கவும்.
இறுதியில் கேப்சா குறியீட்டை தெளிவாக பார்த்து உள்ளிடவும். தட்கல் முன்பதிவு செய்வதில் பலரும் செய்யக்கூடிய தவறு என்னவென்றால் கேப்ட்சா குறியீட்டை தவறாக டைப் செய்வது. இது அனைத்து செயல் முறையையும் மீண்டும் செய்ய வேண்டி இருக்கலாம்.
கட்டணம் செலுத்துவதற்கு ஏடிஎம் கார்டு பரிவர்த்தனைகளுடன் ஒப்பிடும்போது இண்டர்நெட் பேக்கிங் மற்றும் UPI பரிவர்த்தனைகள் நேரத்தை மிச்சப்படுத்த உதவும்.
வந்தாச்சு புதிய நடைமுறை :
ஆதார் வெரிபிகேஷன் செய்யப்பட்ட லாக்-இன் வைத்திருப்பவர்கள் மட்டுமே தட்கல் டிக்கெட்டுகளை ஆன்லைனில் புக் செய்ய முடியும். மேலும், ஆதார் மூலம் வரும் OTP வைத்து டிக்கெட் புக் செய்ய முடியும்.