உணவுத் தரக் குறியீட்டில் ஹைதராபாத்திற்கு கடைசி இடம் - NCRB அறிக்கை

Hyderabad
HyderabadTimes of india
Published on

சமீபத்தில் NCRB (National Crime Records Bureau) அதாவது தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் உணவு கலப்படம் தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டது. அந்த ஆய்வின் அடைப்படையில், உணவுத் தரக் குறியீட்டில் ஹைதராபாத் கடைசி இடத்தைப் பெற்றிருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளிவந்துள்ளது. 

பொதுவாக, உணவு வரலாற்றில் ஹைதராபாத் சிறந்து விளங்குகிறது. இந்தியாவின் பிரபலமான உணவு நகரங்களில் ஒன்றாக ஹைதராபாத் உள்ளது. ஹைதராபாத் பிரியாணி உள்பட்ட இங்கு தயாரிக்கப்படும் முகலாய உணவுகள் உலகம் முழுக்க புகழ்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும், கடந்த சில மாதங்களாகவே, உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளால், நாட்டின் முக்கிய இடங்களில் உள்ள உணவகங்களில் அடிக்கடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் தொடர்ந்து, அதிர்ச்சியளிக்கும் விஷயங்கள் வெளியாகி பரபரப்பில் ஆழ்த்தியது. சோதனையில், உணவுத் தயாரிப்பில் கலப்படம் நடைபெறுவதாகவும், காலாவதியான பொருள்கள், அழுகிய பொருட்கள் மற்றும் தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும் செய்திகள் வெளியாகின. உணவகங்களில் உணவு வாங்கி சாப்பிட்ட சில பேருக்கு, ஃபுட் பாய்சன் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் செய்திகளும் வெளியாகி, பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகின்றன. இது தொடர்பாக, பதிவு செய்யப்படும் வழக்குகளும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் தேசிய குற்ற ஆவணக் காப்பகம், இந்தியாவில் உள்ள 19 முக்கிய நகரங்களில் சோதனை நடத்தியது.

இந்த முக்கிய நகரங்களில் உள்ள சாலையோர உணவகங்கள் மற்றும் நவீன வசதிகள் உடைய உணவகங்களில் உணவின் தரம், கலப்படம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதனடிப்படியில், உணவுத் தரக் குறியீட்டில் ஹைதராபாத் கடைசி இடத்தைப் பிடித்துள்ளதாக ஆய்வு கூறுகிறது. அங்குள்ள பெரும்பாலான உணவகங்கள், உணவின் தரத்தை சரியாக கடைபிடிக்காததும், குறைந்த அளவிலான உணவின் தரம் கடைபிடிக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும், பெரும்பாலான உணவகங்கள் காலாவதியான உணவுப் பொருள்களை உணவுத் தயாரிப்பில் பயன்படுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது கவலையளிப்பதாக உள்ளது. 

இதையும் படியுங்கள்:
ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் மூன்றாவது இடத்தைப் பிடித்த இந்தியா!
Hyderabad

GHMC (Greater Hyderabad Municipal Corporation) இந்த ஆய்வின் அறிக்கையால், உஷாராகி தேவையான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுக்கொண்டு வருகிறது. இதற்கிடையே, உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளும் தொடர்ந்து, உணவின் தரம் கலப்படம் சுகாதாரம் மற்றும் உணவகங்களின் உரிமம் தொடர்பாக சோதனை நடத்தி வருகின்றனர். மக்களும், உணவு தரக் குறியீட்டின் தரத்தை அடையத் தவறிய உணவகங்கள் மீது போதுமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்க அதிகாரிகளை சமூக ஊடகங்கள் வாயிலாக வலியுறுத்துகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com