

சென்னையில் உள்ள ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1,010 அப்ரெண்டீஸ் (Apprentice)பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐடிஐ (ITI) முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை (Integral Coach Factory -ICF) உலகிலேயே அதிக ரெயில் பெட்டிகளைத் தயாரிக்கும் மிகப்பெரிய அரசு நிறுவனமாகும். இது 1955-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் நாள் தொடங்கப்பட்டது. இங்கு வந்தே பாரத் அதிவேக ரெயில்கள், எல்.எச்.பி (LHB) மற்றும் மின்சார ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்த தொழிற்சாலையில், 1,010 பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தொழில்பழகுநர் சட்டம் 1961, விதிகளுக்கு உட்பட்டு, தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு கல்வி தகுதி, எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாங்க...
ஐசிஎஃப் வேலைவாய்ப்பு :
மொத்த பணியிடங்கள்: 1010
துறை வாரியாக காலியிடங்கள்:
கார்பெண்டர் - 40
எலக்ட்ரீசியன் - 40
ஃபிட்டர் - 80
மெஷினிஸ்ட் - 40
பெயிண்டர் - 40
வெல்டர் - 80
எம்.எல்.டி ரேடியோலாஜி - 05
எம்.எல்.டி பதோலஜி - 05
Ex ஐடிஐ:
கார்பெண்டர் - 50
எலக்ட்ரீசியன் - 160
ஃபிட்டர் - 180
மெஷினிஸ்ட் - 50
பெயிண்டர் - 50
வெல்டர் - 180
பி ஏஎஸ்.எஸ்.ஏ - 10
கல்வித் தகுதி: பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வித் தகுதி மாறுபடும். 10, 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் மற்றும் ஐடிஐ முடித்தவர்களுக்கான காலியிடங்கள் உள்ளன.
எம்.எல்.டி (ரேடியோலாஜி& பதோலஜி) பணிக்கு 12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், பயாலஜி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி கால அளவு: FRESHERS – 2 வருடம், Ex-ITI – 1 வருடம்
வயதுத் தகுதி: 07.09.2026 அன்று 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் ஓ.பி.சி (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி (PwBD) பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.
சம்பளம் : அதாவது, தேர்வு செய்யப்படும் அப்ரெண்டீஸ் பணியாளர்கள் ஓராண்டு கால ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். 10-ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட பணியிடங்களுக்கு மாதம் ரூ.8,200 ஊதியமும், 12 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட பணியிடங்களுக்கு மாதம் ரூ.9,600 ஊதியமாகவும் வழங்கப்படும். எக்ஸ் ஐடிஐ (Ex-ITI) கல்வி தகுதிக்கு ரூ.9,600 ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: பயிற்சி இடங்களுக்கு ஏற்ப 10 ஆம் வகுப்பு, மற்றும் ஐடிஐ படிப்புகளில் மெரிட் லிஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://pb.icf.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள் / எஸ்சி / எஸ்டி (SC/ST) பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 07.09.2026
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:
ICF-ன் அதிகாரப்பூர்வ Apprentice portal-க்கு செல்லவும்.
Apprentice Recruitment notification-ஐ திறந்து உங்கள் Mobile Number / Email ID மூலம் Registration செய்யவும்.
Personal details மற்றும் Educational qualification விவரங்களை உள்ளிடவும்.
10th Mark Sheet, ITI Certificate, Photo, Signature, Community Certificate போன்ற தேவையான ஆவணங்களை upload செய்து விண்ணப்பத்தை Submit செய்யவும்.
இறுதியாக Application Form / Registration Number-ஐ Download செய்து வைத்துக்கொள்ளவும்.
தேர்வு அறிவிப்பை படிக்க https://pb.icf.gov.in/act2026/Act_Apprentice_2026_27.pdf