மதம் மாறினால் இனி பட்டியலின சலுகைகள் கிடைக்காது.! உயர்நீதிமன்றம் அதிரடி.!

Religion Change Rules
Religion Change
Published on

நாட்டில் தற்போது மதமாற்றங்கள் அதிகளவில் நடந்து வரும் நிலையில், மதம் மாறிய பிறகு ஒருவர் முந்தைய சாதி நிலையிலேயே தொடர்வது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்நிலையில் உத்தரபிரதேசத்தின் மஹாராஜ்கன்ஞ் மாவட்டத்தில் கோரக்பூரைச் சேர்ந்தவர் ஜிதேந்திர சஹானி, இந்துவாக இருந்து பின்னர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர். இவர் தனது கிராமத்தைச் சேர்ந்தவர்களையும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில் இவர் மதம் மாறிய பிறகும், முந்தைய சாதி நிலையிலான சலுகைகளை அனுபவித்து வருவதை அலகாபாத் உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது. மேலும் இதுகுறித்த அறிக்கையை அடுத்த 3 மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. ஜிதேந்திர சஹானி தான் வசிக்கும் கிராமத்தைச் சேர்ந்த மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் இவர் இந்து மதத்தின் நம்பிக்கைகள் குறித்து தரக்குறைவாகவும் விமர்சித்துள்ளார். இதன் காரணமாக சஹானி மீது கடுமையான நடவடிக்கை வேண்டுமென, கிராமத்தினர் காவல் துறையில் புகார் அளித்தனர். இந்நிலையில் சஹானி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை எதிர்த்து அவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

சஹானி கிறிஸ்தவராக மாறிய நிலையில், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தன்னை ஒரு இந்துவாகவே அடையாளப் படுத்திக் கொண்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்து, சீக்கியம் மற்றும் பௌத்த மதத்தில் இருந்து பிற மதத்திற்கு மாறிய நபர்கள் தொடர்ந்து பட்டியலினத்தவருக்கான சலுகைகளை அனுபவித்து வருவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என உத்தரவிட்டது.

இதுகுறித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவிக்கையில், “கிறிஸ்தவராக மாறிய சஹானி, தற்போது மத போதகராக செயல்பட்டு வருகிறார். இருப்பினும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தன்னை ஒரு இந்துவாக அடையாளப்படுத்தியுள்ளார். இதன் மூலம் அவர் மதம் மாறிய பிறகும் கூட முந்தைய சாதி நிலையிலேயே பட்டியல் இனத்தவருக்கான சலுகைகளைப் பெற்று வருகிறார் என்பது தெரிய வருகிறது. ஒருவேளை இது நிரூபிக்கப்பட்டால் தண்டனைக்குரிய குற்றமாக கருதி, சஹானிக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்.

சஹானியின் இந்த செயல் அரசியல் சாசனத்தின் மீது நடத்தப்படும் மோசடி என்பதால், அவர் பட்டியல் இனத்தவருக்கான சலுகைகளைப் பெற்று வருகிறாரா என்பதை விசாரித்து, அடுத்த 3 மாதங்களுக்குள் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிடுகிறோம்.

இதையும் படியுங்கள்:
இனி பனை மரங்களை வெட்ட அனுமதி வேண்டும்..! தமிழக அரசு அதிரடி..!
Religion Change Rules

இந்த விவகாரம் குறித்து உத்தரபிரதேச அரசின் தலைமைச் செயலாளர், கேபினட் செயலாளர், சமூக நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மாநிலம் தழுவிய ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.

உத்தரபிரதேசத்தில் மதம் மாறிய பிறகும் பட்டியல் இனத்தவருக்கான சலுகைகளை எத்தனை பேர் பெற்று வருகின்றனர் என்பது தொடர்பாக ஆய்வுகளை நடத்தி, 4 மாதங்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிடுகிறோம்” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்:
முதல்முறையாக டிஜிட்டல் கைது மோசடியில் ஈடுபட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை: உயர் நீதிமன்றம் அதிரடி..!
Religion Change Rules

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com