பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு..! ரேஷன் கார்டில் இந்த அப்டேட்டை உடனே செய்யுங்கள்..!

Ration Card eKYC
Ration Card
Published on

தமிழ்நாட்டில் கூடுடுறவுத் துறை மூலமாக பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. நாட்டில் ரேஷன் கார்டில் திருத்தம் மேற்கொள்வது முதல் e-KYC புதுப்பிப்பு வரை அனைத்துமே டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அனைத்து ரேஷன் கார்டு உறுப்பினர்களும் e-KYC சரிபார்க்க வேண்டும் என அரசு சார்பில் உத்தரவிடப்பட்டது.

இதற்கு ஜூன் 30 வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. காலக்கெடு முடிவதற்குள் இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் பொதுமக்கள் விரைந்து e-KYC சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

ரேஷன் கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு மலிவான விலையிலும், இலவசமாகவும் ரேஷன் பொருட்கள் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கார்டு மூலம் வேறுசில குறிப்பிட்டத் திட்டங்களிலும் பொதுமக்கள் பயன்பெற முடியும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் குறிப்பிட்ட அளவில் பொருட்கள் வழங்கப்படும்.

அரசின் அனைத்து சேவைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதால், ரேஷன் கார்டில் e-KYC சரிபார்ப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இல்லையெனில் அரசு அடுத்தகட்ட நடவடிக்கையாக ரேஷன் கார்டை கேன்சல் செய்ய அதிக வாய்ப்புள்ளது. ரேஷன் கார்டில் e-KYC செய்யாவிட்டால், வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதிக்குப் பிறகு இலவச ரேஷன் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படும். இதன்பிறகு ரேஷன் கார்டை வைத்து ரேஷன் பொருட்களை வாங்குவது கடினமாகி விடும்.

5 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் e-KYC சர்பார்ப்பு செய்ய வேண்டியது அவசியமாகும். இதற்காக கடந்த மூன்று மாதங்களாக அரசு அவகாசம் வழங்கியது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பலரும் e-KYC செய்து விட்டனர். ஒருசிலர் இன்னும் இந்த அப்டேட்டை செய்யாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு கடைசி வாய்ப்பாக இன்னும் 3 நாட்களே மீதமுள்ளன.

இதையும் படியுங்கள்:
மூத்த குடிமக்களுக்கு வீடு தேடி வந்த ரேஷன் பொருட்கள்: சோதனை முயற்சி வெற்றி!
Ration Card eKYC

e-KYC சரிபார்ப்பு முறை:

முதலில் மாநில அரசின் https://tnpds.gov.in/ என்ற PDS இணையதளத்திற்குச் சென்று ரேஷன் கார்டு சேவைகளை கிளிக் செய்ய வேண்டும். இதில் e-KYC ஆப்ஷனை கிளிக் செய்து, உங்களுடைய ரேஷன் கார்டு எண்ணை உள்ளிட்டு, ஆதார் கார்டு மூலமாக சரிபார்க்க வேண்டும். பிறகு ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டில் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும். இதனை உள்ளிட்டு e-KYC சரிபார்ப்பை முடிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
ரேஷன் கார்டில் திருத்தப் பணிகளை எளிதாக்கும் அரசு! இனிமே எங்கும் அலைய வேண்டாம்!
Ration Card eKYC

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com