மக்களே நோட் பண்ணிக்கோங்க...ஜூலை 1 முதல் மாறப்போகும் புது Financial ரூல்ஸ்!

ஜூலை 1 முதல் நாடு முழுவதும் பல முக்கியமான நிதிசார் மாற்றங்கள் (Financial Changes) நடைமுறைக்கு வர உள்ளன.
july 1st Financial changes
july 1st Financial changesAI Image
Updated on

நாளையுடம் ஜூன் மாதம் முடியப்போகிறது. இந்நிலையில், ஜூலை 1 முதல் நாடு முழுவதும் பல முக்கியமான நிதிசார் மாற்றங்கள் (Financial Changes) நடைமுறைக்கு வர உள்ளன. இந்த மாற்றங்கள் சாமானிய மக்களின் நிதிநிலை, வரி செலுத்துவோர், வங்கி வாடிக்கையாளர்கள், கிரெடிட் கார்டு பயனர்கள், பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் மற்றும் ஆதார் அட்டை நடவடிக்கைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் வரும் ஜூலை 1-ம்தேதி முதல் அமலுக்கு வரவுள்ள முக்கிய நிதிசார் மாற்றங்கள் குறித்த விவரங்கள் இங்கே அறிந்து கொள்ளலாம்.

பாஸ்போர்ட் கட்டணம் அதிகரிப்பு :

வருகிற ஜூலை 1-ம்தேதி முதல் பாஸ்போர்ட் கட்டணத்தை மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 36 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட் பெற கட்டணம் ரூ.1500-ல் இருந்து ரூ.2500 ஆகவும், அதனை தட்கலில் பெற ரூ.3500-ல் இருந்து ரு.5000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 60 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் ரூ.2000-ல் இருந்து ரூ.3500 ஆகவும், அதனை தட்கலில் பெற ரூ.4000-ல் இருந்து ரூ.6000 ஆகவும் உயர்த்தப்பட்டுகிறது.

36 பக்கங்கள் (18 வயதுக்கு உட்பட்டவர்கள்) பாஸ்போர்ட் கட்டணம் ரூ.1500-ல் இருந்து ரூ.1750 ஆகவும், இதனை தட்கலில் பெற ரூ.3500-ல் இருந்து ரூ.4200 ஆகவும் உயருகிறது.

இதுதவிர தொலைந்து போன அல்லது சேதம் அடைந்த பாஸ்போர்ட்டை மாற்றுவதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.5000 ஆகவும், தட்கலில் பெற ரூ.7500 ஆகவும், ‘போலீஸ் கிரியரன்ஸ்’ சான்றிதழ் மற்றும் பிற இதர சேவைகள் கட்டணம் ரூ.750 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் புதிய பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு :

ITR-1 மற்றும் ITR-2 படிவங்களைத் தாக்கல் செய்யும் வரி செலுத்துவோருக்கு, 2025-26 நிதியாண்டிற்கான (2026-27) கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31 ஆகும்.

இதற்கிடையில், வரி தணிக்கைக்கு உட்படாத ITR-3 மற்றும் ITR-4 படிவங்களைத் தாக்கல் செய்பவர்கள், ஆகஸ்ட் 31 வரை தங்கள் வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்யலாம். காலக்கெடுவுக்குள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யத் தவறினால் அபராதம் விதிக்கப்படலாம். சில வரிச் சலுகைகளும் இழக்கப்படும்.

கிரெடிட் கார்டுகளுக்கு புதிய விதிகள் :

ஜூலை 1 முதல் எஸ்பிஐ கார்டு உள்ளிட்ட சில கிரெடிட் கார்டுகளுக்கான ரிவார்டு புள்ளிகள் மற்றும் சலுகை விதிகளில் மாற்றம் வரலாம். குறிப்பாக SBI கார்டு, PhonePe SBI கார்டு பர்ப்பிள் மற்றும் PhonePe SBI கார்டு செலக்ட் பிளாக் ஆகியவற்றுக்கான விதிகளையும் மாற்றியுள்ளது. சில வகை செலவுகளுக்கு இனி ரிவார்டு புள்ளிகள் கிடைக்காமல் போகலாம்.

காப்பீட்டு பிரீமியம் செலவு மற்றும் பிற செலவின வகைகளுக்குத் தனித்தனி வரம்புகள் இருக்கும். மேலும், ஆன்லைன் பரிவர்த்தனைகளில் பெறப்படும் அதிகபட்ச வெகுமதிப் புள்ளிகளும் குறைக்கப்பட்டுள்ளன. இது கிரெடிட் கார்டுகளை அடிக்கடி பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

Credit card
Credit card|நிதிசார் மாற்றங்கள்

HDFC Bank கிரெடிட் கார்டு விதிகளில் மாற்றம் :

எச்டிஎப்சி வங்கியின் ரெகாலியா கோல்ட் (Regalia Gold) கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கான இலவச விமான நிலைய லாஞ்ச் அணுகல் (Complimentary Domestic Airport Lounge Access) விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, வாடிக்கையாளர்கள் ஒரு காலாண்டில் (Quarter) குறைந்தபட்சம் ரூ.60,000 செலவு செய்திருக்க வேண்டும். இந்த இலக்கை அடைந்தால் மட்டுமே அடுத்த காலாண்டில் இலவச லாஞ்ச் வசதியைப் பெற தகுதி உடையவர்களாவார்கள். குறிப்பாக பயணங்களுக்காக இந்த கார்டைப் பயன்படுத்துபவர்கள் மீது இந்த விதிமுறை தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
SBI கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா..? ஜூலை 1 முதல் மாறப்போகும் முக்கிய விதிகள்!
july 1st Financial changes

வங்கி தயாரிப்புகளை தவறான முறையில் விற்பனை செய்வது குறித்த புதிய விதிகள் (mis-selling of bank products new rules):

வங்கிகள் நிதி தயாரிப்புகளை தவறான முறையில் விற்பனை செய்வதை கட்டுப்படுத்த ஆர்பிஐ (RBI) புதிய விதிகளை அறிவித்துள்ளது.

புதிய விதிமுறைகளின்படி, தவறான முறையில் விற்கப்பட்ட தயாரிப்புகளை வாங்கிய வாடிக்கையாளர்கள், முழு தொகையையும் திரும்ப பெறவும், இழப்புகளுக்கான இழப்பீட்டை பெறவும் உரிமை பெறுவார்கள். இந்த விதிகள் வரும் ஜூலை 1-ம்தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

இதையும் படியுங்கள்:
இனி ஆதார் மையங்களுக்கு செல்ல தேவையில்லை..! வீட்டிலிருந்தே அப்டேட் செய்யலாம்..!
july 1st Financial changes

ஆதார் இலவச அப்டேட் :

ஜூலை 1 முதல் டிசம்பர் 31 வரை, ஆதார் மொபைல் செயலி மூலம் மின்னஞ்சல் முகவரிகளைப் புதுப்பிக்க எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அறிவித்துள்ளது. தற்போது, ​​மின்னஞ்சல் விவரங்களைப் புதுப்பிக்க ரூ.75 (ஜிஎஸ்டி உட்பட) கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும்நிலையில் ஜூலை 1 முதல் இந்தச் சேவையை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com