இனி ஆதார் மையங்களுக்கு செல்ல தேவையில்லை..! வீட்டிலிருந்தே அப்டேட் செய்யலாம்..!

ஆதார் மையங்களுக்குச் செல்லாமல் எங்கிருந்தும் மொபைல் எண்ணை எளிதாகப் புதுப்பிக்கும் புதிய வசதி தற்போது அறிமுகப்படுத்தப்படுகிறது.
Aadhaar card
Aadhaar card
Published on

UIDAI அறிமுகம் செய்துள்ள புதிய ஆதார் செயலி, மொபைல் எண் அப்டேட் மற்றும் செலக்டிவ் ஷேர் போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் மக்களின் டிஜிட்டல் அடையாளத் தேவைகளை எளிமையாக்குகிறது.

ஆதார் அட்டை என்பது இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்படும் 12 இலக்க தனித்துவ எண் கொண்ட ஒரு அடையாள ஆவணமாகும். அந்த வகையில், இன்றைய டிஜிட்டல் இந்திய மக்களின் வாழ்க்கையில் ஆதார் அட்டை அத்தியாவசிய அடையாள ஆவணமாக மாறியுள்ளது. அரசு மானியங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுதல், வங்கி கணக்கு தொடங்குதல், வருமான வரி தாக்கல் செய்தல், பான்கார்டு பெறுதல், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், செல்போன் நம்பர் வாங்குதல் வரை அனைத்து சேவைகளிலும் 12 இலக்க ஆதார் எண் தவிர்க்க முடியாத ஒன்றாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் இதில் கைரேகை மற்றும் கருவிழி ஸ்கேன் போன்ற உயிரியல் தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஆதார் அட்டை பெறுவதற்கு கட்டணம் இல்லை, ஆனால் PVC அட்டை போன்ற சிறப்பு அட்டைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படலாம்.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்: இனி ஆதார் கார்டில் மொபைல் எண்ணை நீங்களே மாற்றிக் கொள்ளலாம்..!
Aadhaar card

அந்த வகையில் இந்தியாவில் எந்த சேவையை பெறுவதாக இருந்தாலும் அனைத்திற்கும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் அவசியமாக உள்ளது. மொபைல் எண் செயல்பாட்டில் இல்லை, ஓடிபி வராத பிரச்சனை, சேவைகள் தடைபடும் சூழ்நிலை போன்றவை பலருக்கும் தலைவலியாக இருந்தது. இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் தற்போது ஒரு முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, மக்களின் இந்தத் தேவைகளை மேலும் எளிதாக்கும் வகையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆதாரில் செல்போன் எண்ணை எந்த நேரத்திலும் அப்டேட் செய்து கொள்ளும் அம்சத்தை UIDAI அறிமுகம் செய்துள்ளது. இந்த முடிவு, பொதுமக்களின் தினசரி சிக்கல்களை குறைக்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு, அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று திருத்தத்தை மேற்கொள்ளலாம். அல்லது ஆதார் செயலியின் மூலமும் பயனர்கள் செல்போன் எண்ணை மாற்றலாம்.

இந்த வசதியின் மூலம், இதுவரை மக்கள் சந்தித்து வந்த முக்கியமான சிக்கல்களான ஆதார் அட்டையைத் தொலைப்பது, பழைய மொபைல் எண்களை மாற்ற முடியாமல் தவிப்பது போன்ற பிரச்சினைகளுக்கு இந்த புதிய செயலி மிகச்சிறந்த தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இனிமேல் விமான நிலையங்கள் அல்லது அரசு அலுவலகங்கள் போன்ற முக்கியமான இடங்களுக்கு மக்கள் தங்களின் அசல் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல மறந்தாலும், இந்த செயலி மூலம் டிஜிட்டல் முறையில் உடனடியாக அடையாளத்தைச் சமர்ப்பிக்க முடியும்.

இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'தேர்ந்தெடுக்கப்பட்ட பகிர்வு' என்ற அம்சம் மிகவும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஒருவர் தனது முழு விவரங்களையும் பகிராமல், குறிப்பிட்ட சேவைக்குத் தேவையான தகவல்களை மட்டும் பகிர்ந்து கொள்ள முடியும். இது தரவுப் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

அதுமட்டுமின்றி பயனர்களின் தரவுகளின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில், பயனர்கள் தங்கள் விரல் ரேகை உள்ளிட்ட உயிரியல் அடையாளங்களை ஒரு தொடுதல் மூலம் முடக்கி வைக்கும் 'பயோமெட்ரிக் லாக்' போன்ற வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும். மேலும், ஒரே போனில் குடும்ப உறுப்பினர்கள் பலரின் ஆதார் விவரங்களைப் பராமரிக்கும் வகையில் 'குடும்பக் கணக்குகள்' மேலாண்மை வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இணைய வசதி இல்லாத இடங்களிலும் அடையாளத்தை உறுதிப்படுத்த 'ஆஃப்லைன் சரிபார்ப்பு' முறையை இந்த செயலி ஆதரிக்கிறது.

அனைத்து பயனர்களும் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஒரு வசதி தற்போது சாத்தியமாகியுள்ளது.

இனிமேல் பயனர்கள் எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் உங்கள் முகத்தை அடையாளமாகப் பயன்படுத்தி, உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை நீங்களே புதுப்பித்துக் கொள்ள முடியும். இந்த நவீன மாற்றங்கள் மூலம், ஆதார் தொடர்பான சேவைகளுக்காக மக்கள் இனி அலைய வேண்டிய அவசியம் இருக்காது மற்றும் ஆதார் சேவை மையத்தில், நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலை இனி இருக்காது.

வங்கி பரிவர்த்தனைகள், மானியத் தொகைகள், ஓய்வூதியம், கல்வி உதவிகள் போன்ற பல சேவைகளுக்கு ஓடிபி சரிபார்ப்பு கட்டாயமாகும். மொபைல் எண் மாறியவர்களுக்கும், பழைய எண்ணை புதுப்பிக்காதவர்களுக்கும் இந்த புதிய வசதி மிகப் பெரிய நன்மையாக இருக்கும். சேவைகள் தடைபடும் நிலை குறையும் என்பதால், பொதுமக்கள் நிம்மதியாக ஆதார் சார்ந்த சேவைகளைப் பயன்படுத்த முடியாது.

இதையும் படியுங்கள்:
பிளாஸ்டிக் ஆதார் கார்டு விலை அதிகரிப்பு.! எவ்வளவு தெரியுமா.?
Aadhaar card

கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கும் இந்த செயலி மூலம், ஆதார் சேவைகள் இன்னும் எளிமையாக இருக்கும். இது டிஜிட்டல் இந்தியாவை நோக்கிய இன்னொரு உறுதியான படியாக பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com