உங்களுக்கும் இந்த மெசேஜ் வந்ததா..? - சிலிண்டர் மானியம் நிரந்தரமாக நிறுத்தப்பட வாய்ப்பு!

வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு வழங்கப்பட்டுவந்த மானியத்தை நிறுத்த எண்ணெய் நிறுவனங்கள் குறுஞ்செய்தி அனுப்பிவருகின்றன.
LPG Subsidy
LPG Subsidy
Updated on

மேற்கு ஆசியாவில் போர் சூழல் இருந்துவரும் சூழலில், எரிபொருள் பிரச்சனைகளும் இருந்துவருகின்றன. இந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களாக பிரதமர் மோடி, எரிவாயு மற்றும் சமையல் எண்ணெய்யை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்திவருகிறார்.

இந்த நிலையில், சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுவரும் மானியத்தை நிறுத்துவது தொடர்பாக முக்கிய வேலைகளும் நடந்துவருகிறது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் மானியச்சுவையை குறைப்பதற்காக சமையல் கேஸ் நுகர்வோரின் ஆண்டு வருமானம் குறித்து குறுஞ்செய்தி அனுப்பி மானியங்களை நிறுத்தும் நோக்கத்தில் மற்றுமொரு நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

நுகர்வோர் அல்லது அவரது வாழ்க்கைத் துணையின் ஆண்டு வரிக்குட்பட்ட வருமானம் ரூ. 10 லட்சத்திற்கு மேல் இருந்தால், வாடிக்கையாளர் ஏழு நாட்களுக்குள் பதிலளிக்காவிட்டால் மானியம் நிரந்தரமாக நிறுத்தப்படலாம் என்று அந்த அறிவிப்புகள் கூறுகின்றன.

எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் எல்பிஜி வாடிக்கையாளர் விவரங்களை வருமான வரித் துறை பதிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கியுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வருமான வரம்பைத் தாண்டிய பிறகும் மானியம் பெறும் நுகர்வோர் இப்போது அதிகாரப்பூர்வ வரித் தரவுகள் மூலம் நேரடியாக அடையாளம் காணப்படுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
மக்களுக்கு அடுத்த ஷாக்..! பெட்ரோல் விலை ரூ.25 லிருந்து 28 ரூபாய் வரை உயர வாய்ப்பு..!
LPG Subsidy

டிசம்பர் 2015-ல் அறிமுகப்படுத்தப்பட்ட அரசாங்க விதிகளின்படி, ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சத்திற்கு மேல் உள்ள குடும்பங்கள் எல்பிஜி மானியத்திற்குத் தகுதி பெறாது. இந்த விதி நுகர்வோர் அல்லது அவரது வாழ்க்கைத் துணை இருவருக்கும் பொருந்தும். முன்னதாக, இந்த முறை பெரும்பாலும் சுய அறிவிப்பைச் சார்ந்திருந்தது. தற்போது, நிறுவனங்கள் ஒருங்கிணைந்த வரித் தரவு சரிபார்ப்பு மூலம் இதை அமல்படுத்துகின்றன.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கும், உஜ்வாலா யோஜனா போன்ற திட்டங்களின் கீழ் உள்ள பயனாளிகளுக்கும் மானியப் பலன்கள் சென்றடைவதை உறுதி செய்வதே இதன் நோக்கம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

வருமான வரி வரம்பிற்கு வெளியே உள்ள மற்றும் தங்கள் வங்கி கணக்குகளுடன் ஆதார் எண்களை இணைத்துள்ள சமையல் கேஸ் நுகர்வோர்களின் வீடுகளுக்கு ஓவ்வொரு முறையும் சிலிண்டர் வினியோகிக்கப்படும் போது ரூ.24.50 மானியம் பெறுகின்றனர்.

இதுதொடர்பாக நுகர்வோருக்கு எண்ணெய் நிறுவனங்கள் அனுப்பும் குறுஞ்செய்தியில், அன்புள்ள எல்பிஜி நுகர்வோரே, கிடைக்கப்பெற்ற வருமான வரி பதிவுகளின்படி, உங்களின் (அல்லது தொடர்புடைய குடும்ப உறுப்பினர்களின்) மொத்த வரிக்குட்பட்ட வருமானம், நிர்ணயிக்கட்ட வரம்பான ரூ.10 லட்சத்தை தாண்டினால் அதனை நீங்கள் ஆட்சேபிக்க விரும்பினால் கட்டணமில்லா எண்ணான 1800-2333 555ஐத் தொடர்பு கொள்ளவும்.

இந்த செய்தியை பெற்ற 7 நாட்களுக்குள் உங்கள் குறையை அந்தந்த எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவு செய்யவும். குறிப்பிட்ட காலத்திற்குள் எந்தப்பதிலும் வரவில்லை என்றால் அதன் பிறகு எல்பிஜி மானியம் நிறுத்தப்படலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.

இது நுகர்வோர் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதுடன் எண்ணெய் நிறுவனங்கள் தனிநபர்களின் வருமான வரிக்கணக்குகளை பயன்படுத்துவது அவர்களின் தனியுரிமை மீறலுக்கு சமம் என்று நுகர்வோர் அமைப்புகள் கூறுகின்றன.

இதையும் படியுங்கள்:
#JUST IN: சிலிண்டர் ஒதுக்கீட்டில் அதிரடி மாற்றம்.! பெட்ரோலிய அமைச்சகம் அறிவிப்பு.!
LPG Subsidy

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் உத்தரவை தொடர்ந்து இந்த செய்திகள் அனுப்பப்படுவதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறினர்.

logo
Kalki Online
kalkionline.com