ட்ரோன் எதிர்ப்பு லேசர் ஆயுதத்தை (anti drone laser weapon) உருவாக்கிய 4வது நாடானது இந்தியா!

Drone
Drone
Published on

இந்திய எல்லைகளில் நடைபெறும் அத்துமீறல்களை தடுக்கும் பொருட்டு இந்தியா ஒரு நவீன பாதுகாப்பு அமைப்பை உருவாக்கியுள்ளது. இப்போதெல்லாம் பாகிஸ்தான் ராணுவமும் சீனாவும் இந்தியாவின் எல்லைக்குள் ஆளில்லா ட்ரோன்களை அனுப்பி உளவு பார்க்கும் வேலையை செய்கிறது. பாதுகாப்பு குறைபாடு உள்ள நேரங்களில் ஊடுருவ அது நினைக்கிறது. இதை தடுக்க முதலில் எல்லையில் ட்ரோன்களை தடுக்கும் தொழில் நுட்பம் அவசியமானது .

இதற்காக இந்தியாவின் உயர்மட்ட பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான (DRDO), சமீபத்தில் ட்ரோன் எதிர்ப்பு லேசர் பாதுகாப்பு அமைப்பை (DEW) வெற்றிகரமாக உருவாக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. வான்வழி இலக்குகளைச் சுட்டு வீழ்த்துவதற்காக உருவாக்கப்பட்ட லேசர் ஆயுத அமைப்பு (DEW), கர்னூலில் உள்ள தேசிய திறந்தவெளிப் பயிற்சி தளத்தில் ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 13, 2025 அன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த அமைப்பு 5 கிமீ தூரத்திற்குள் உள்ள ட்ரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் போன்ற வான்வழி அச்சுறுத்தல்களை முறியடிக்க உருவாக்கப்பட்டது.

இந்த பாதுகாப்பு அமைப்பு, அதிக ஆற்றல் கொண்ட 30KW லேசர் கற்றையைப் வெளியிட்டு நிலையான இறக்கை கொண்ட ஆளில்லா விமானங்களையும், திரள் ஆளில்லா ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்தும் திறன் கொண்டது. இது தகவல் தொடர்பு மற்றும் செயற்கைக்கோள் சமிக்ஞைகளை முடக்கக்கூடிய மின்னணு போர் திறன்களை கொண்டது. ரேடார் மூலம் எதிரி நாட்டின் பறக்கும் சாதனங்கள் கண்டறியப்பட்ட உடன், ட்ரோன் எதிர்ப்பு லேசர் ஆயுதமான டியூவில் இருந்து அதிக சக்தி மிகக் லேசர் கற்றை வெளிவந்து பறக்கும் சாதனங்களை தாக்குகிறது. இந்த லேசர் கற்றையை பயன்படுத்தி ஹெலிகாப்டர் போன்ற பறக்கும் சாதனங்களை கூட அழிக்கலாம்.

இந்த பாதுகாப்பு அமைப்பில் 360 டிகிரி எலக்ட்ரோ ஆப்டிகல்/ அகச்சிவப்பு (EO/IR) சென்சார் உள்ளது. இது இலக்கை துல்லியமான கண்டறிகிறது. இதனால் ட்ரோன் எதிர்ப்பு லேசர் ஆயுதத்தை தரையில் இருந்து மட்டுமல்ல , கடற்படை தளங்களில் கூட பயன்படுத்தலாம். மேலும் இது வான்வழி, ரயில், சாலை வழியாக கூட தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படலாம்.

தற்போது எதிரி நாட்டு ட்ரோன்களின் ஊடுருவல்கள் அதிகரித்து வருவதால் , அதை எதிர்கொள்ள, எல்லைக் கட்டுப்பாடு கோடு மற்றும் சர்வதேச எல்லைகளில் இந்த பாதுகாப்பு அமைப்பு இந்திய இராணுவத்தால் நிறுவப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
இந்திய எல்லையில் அதிகரிக்கும் ட்ரோன் வழி ஊடுருவல்கள்!
Drone

சமீபத்தில் ஜம்மு மாநிலத்தில் பிர் பஞ்சால் எல்லைக்கு அருகில், 16 கார்ப்ஸ் இந்தியப் பகுதிக்கு அருகில் பாகிஸ்தான் இராணுவத்தால் இயக்கப்பட்ட ட்ரோன் ரேடாரில் சிக்கியுள்ளது. உடனடியாக இந்த ட்ரோன் , டியூ லேசர் ஆயுதத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இந்த ட்ரோன் சீனாவில் உருவாக்கப்பட்டு பாகிஸ்தானுக்கு வழங்கபட்டிருந்தது.

இதற்கு முன் இந்த ட்ரோன் எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளன. தற்போது இந்தப் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. இந்தியாவின் ட்ரோன் எதிர்ப்பு பாதுகாப்பு கண்டுபிடிப்புகள் இதோடு முடிந்து விடவில்லை. அடுத்ததாக தற்போதைய டியூ பாதுகாப்பை அமைப்பை விட பத்து மடங்கு அதிகத் திறன் கொண்ட லேசர் ஆயுதத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. சூர்யா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ராட்சத லேசர் ஆயுதம் 300 KW ஆற்றல் கொண்ட லேசரை உமிழ்ந்து தாக்குதல் செய்யும் திறன் கொண்டது. இதன் தாக்குதல் எல்லை வரம்பு 20 கிமீ தூரம் வரை இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
ரஷ்யாவின் 20 ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய உக்ரேன். தொடரும் ட்ரோன் தாக்குதல்கள்.
Drone

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com