இந்தியாவில் மீண்டும் 3 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்பு: தங்கத்தின் விலை குறையுமா..?

Gold mining
Gold mining
Published on

தங்கம் விலையால் அதிர்ச்சியில் உள்ளவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, நம் நாட்டில் மூன்று மாநிலங்களில் தங்க சுரங்கங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுவரை பல கோடிகளை அள்ளித்தரும் மதிப்புமிக்க தங்கம், மண்ணுக்கடியில் இருப்பது இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் மூன்று மாநிலங்களில் தங்க சுரங்கங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இருப்பினும் நிலையான முதலீடு மதிப்பின் காரணமாக தங்கத்தை வாங்குபவர்கள் எண்ணிக்கை குறைவில்லாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்தியா உலகின் மிகப்பெரிய தங்கச் சந்தைகளில் ஒன்றாகும். இந்திய குடும்பங்கள் 25,000 டன்களுக்கும் அதிகமான தங்கத்தை வைத்து உள்ளனர், இது மத்திய வங்கியின் மொத்த கையிருப்பை விட மிக அதிகம்.

இந்தியா பெரும்பான்மையான தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

இருப்பினும் நாட்டின் பல்வேறு இடங்களில் தங்க இருப்பை கண்டறியும் முயற்சியில் தேசிய புவியியல் ஆய்வு நிறுவனம் ஈடுபடுகின்றன. ஏற்கனவே ராஜஸ்தானில் புதிய தங்க சுரங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஒடிசா, மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திர பிரதேசத்தில் புதிதாக தங்கம் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
வந்தாச்சு புதிய தங்கச் சுரங்கம்..! குறைய போகும் தங்கத்தின் விலை..?
Gold mining

எஸ்.பி.ஐ.யின் குழுந் தலைவர் பொருளாதார ஆலோசகர் டாக்டர் சௌம்ய காந்தி கோஷ் தயாரித்த 'Coming Of (a Turbulent) Age: The Great Global Gold Rush' என்ற அறிக்கையின்படி, 2025-ல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தங்க சுரங்கங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அதன்படி, ஒடிசாவில் தியோகர், கியோஞ்சர் மற்றும் மயூர்பஞ்ச் ஆகிய மாவட்டங்களில் சமீபத்தில் தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு 1,685 கிலோ தங்கத் தாது இருப்பதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் (GSI) கண்டறிந்துள்ளது.

அதேபோல் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபல்பூரில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம் பல லட்சம் டன்கள் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில் கர்னூல் மாவட்டத்தில் அமையவுள்ள இந்தியாவின் முதல் பெரிய தனியார் தங்கச் சுரங்கம், ஆண்டுக்கு 750 கிலோ தங்கத்தை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கண்டுபிடிப்புகள், இந்தியாவின் தற்போதைய தங்க உற்பத்தியை (ஆண்டுக்கு 1.6 டன்) பலமடங்கு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இந்தக் கண்டுபிடிப்பு, இந்தியாவின் உள்நாட்டு தங்க உற்பத்தியை அதிகரிக்கும் எனவும், இறக்குமதி சார்ப்பை குறைத்து பொருளாதார சமநிலையை உறுதிப்படுத்தும் எனவும் இந்த அறிக்கை கூறுகிறது.

இந்தியாவின் தங்க உற்பத்தி அதிகரிப்பது, பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புகளுக்கும் உதவும். அரசு, இந்த சுரங்கங்களை விரைவில் திறக்க திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் தங்கம் விலை உயர்வால் அதிர்ச்சியில் இருந்த மக்களுக்கு இந்த தகவல் பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது என்றே சொல்லலாம். ஏனெனில் தங்கம் உலோகம் மட்டுமல்ல. இந்தியாவில் தங்கம் முக்கிய முதலீடாகவும், செல்வத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரையில், தங்கம் ஆபரணமாக மட்டும் பார்ப்பது கிடையாது. கலாசாரம், பாரம்பரியம், குடும்பத்தின் ஒரு அங்கமாகவே பார்க்கிறார்கள்.

இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றத்தைக் கண்டு வரும் நிலையில் தற்போது கண்டறியப்பட்டுள்ள தங்க சுரங்கங்களால், அன்னியச் செலாவணி அழுத்தம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், தங்கச் சுரங்கங்கள் கண்டறியப்பட்டாலும், தங்கம் விலை குறையுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

சுரங்கங்கள் செயல்பாட்டிற்கு வந்தால் தங்கம் கிடைப்பது அதிகரித்தால் விலை குறைய வாய்ப்புள்ளது. இருப்பினும், சர்வதேச விலை, சந்தை தேவை, அரசாங்கக் கொள்கைகள், ரூபாயின் மதிப்பு போன்ற பல காரணிகள் விலையைப் பாதிக்கின்றன. அதேசமயம் தங்க சுரங்கங்கள் பயன்பாட்டிற்கு வந்தால் தங்கத்தின் விநியோகம் அதிகரிக்கும். இதனால், விலை குறைய வாய்ப்பு உள்ளது என பலரும் கருதுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு...! எங்கு தெரியுமா..?
Gold mining

இதற்கு முன், கடந்த அக்டோபர் மாதம் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் உள்ள கன்கரியா என்ற பகுதியில் மிகப்பெரிய தங்க சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com